Published:Updated:

இரண்டாவது மாடியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை! - கண்ணிமைக்கும் நேரத்தில் கேட்ச் செய்த இளைஞர் #ViralVideo

சத்யா கோபாலன்

சினிமாவில் காட்டுவதைப் போல கண் இமைக்கும் நொடியில், ஓர் இளைஞர் குழந்தையைக் காப்பாற்றும் சம்பவம், இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

இரண்டாவது மாடியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை! - கண்ணிமைக்கும் நேரத்தில் கேட்ச் செய்த இளைஞர் #ViralVideo

துருக்கி,  இஸ்தான்புல் மாகாணத்தில் உள்ள ஃபெயித் மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தோஹா முகமது என்ற 2 வயது பெண் குழந்தை, இரண்டாவது மாடியில் உள்ள தன் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அந்தச் சமயம், அதே பகுதியில் உள்ள ஃபெயூஸி ஸபாத் என்ற இளைஞர் குழந்தையின் வீட்டுக்குக் கீழ் நின்றுள்ளார்.

ஸபாத், இரண்டாவது மாடியில் குழந்தையைப் பார்த்தபிறகு, அது கீழே விழப்போகிறது என்பதை உணர்ந்துகொண்டார். அதனால் அங்கேயே அசையாமல் நின்றுகொண்டு, தோஹாவைக் காப்பாற்ற என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றிருந்த வேளையில், எதிர்பார்த்ததைப் போலவே குழந்தை கீழே விழுந்துள்ளது.

இரண்டாவது மாடியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை! - கண்ணிமைக்கும் நேரத்தில் கேட்ச் செய்த இளைஞர் #ViralVideo

அந்தக் கண நேரத்தில் யோசித்து, தன் இரு கைகளாலும் குழந்தையைத் தாங்கிப்பிடித்துள்ளார். இதனால், குழந்தை அடிபடாமல் உயிர் தப்பியது. குழந்தையைக் காப்பாற்றிய வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியானதன் மூலம் அப்பகுதியின் சூப்பர் ஹீரோவானார் ஸபாத். 

அல்ஜீரியாவைச் சேர்ந்த ஸபாத், துருக்கியில் குடியேறி வாழ்ந்துவருகிறார். அவர், விபத்து நடந்த தெருவில் உள்ள ஒரு வொர்க்ஷாப்பில் வேலை செய்துவருகிறார். தங்கள் குழந்தையைக் காப்பாற்றியதற்காக, குழந்தையின் குடும்பத்தார் ஸ்பாத்துக்கு பரிசுத் தொகை வழங்கியுள்ளனர். 

Vikatan