Published:Updated:

``ஓர் ஆசிரியரை மாணவன் எப்படி எதிர்ப்பான்"-ஆப்பிள் மீதான தடையை எதிர்க்கும் வாவே நிறுவனர்

மு.ராஜேஷ்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடக்கும் வர்த்தகப் போரால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது வாவே நிறுவனம். அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவு அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடும் என்பதால், வாவே அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. சீனா இந்தத் தடைக்கு என்ன எதிர்வினையாற்றப்போகிறது என்பது உலகின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னால் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் வாவேவின் நிறுவனர் ரென் ஷெங்ஃபே (Ren Zhengfei). ` சீனா இந்தத் தடைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்பிளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பது சிலரின் கருத்தாக இருந்து வருகிறது. அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?' என்ற கேள்வி அவர் முன்னால் வைக்கப்பட்டது.

``ஓர் ஆசிரியரை மாணவன் எப்படி எதிர்ப்பான்"-ஆப்பிள் மீதான தடையை எதிர்க்கும் வாவே நிறுவனர்

அதற்குப் பதிலளித்த ரென் ஷெங்ஃபே ``ஒரு நாளும் அது நடக்காது, அப்படி நடந்தால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். ஆப்பிள்தான் பல விதங்களில் உலகின் முன்னோடியாக இருந்திருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் மொபைல் இன்டெர்நெட் என்ற விஷயமும் இருந்திருக்காது. ஆப்பிள்தான் என் ஆசிரியர், அதுதான் எங்களுக்கு முன்னோடி. அப்படியிருக்கையில் மாணவனான நான் எப்படி என் ஆசிரியரை எதிர்ப்பேன். அதற்கு வாய்ப்பே கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார். 

Vikatan