Published:Updated:

உலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்!#VikatanInfographics

பெ.மதலை ஆரோன்
உலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்!#VikatanInfographics
உலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்!#VikatanInfographics

ரு காலத்தில் யாராலும் தவிர்க்க முடியாத வாகனமாகச் சைக்கிள் இருந்தது. கால மாற்றத்தாலும். பல்வேறு வளர்ச்சியின் காரணமாகவும், கெளரவம் கருதியும் சைக்கிளின் பயன்பாடானது காணாமல் போய்விட்டது. உடல் ஆரோக்கியத்துக்காக மட்டும் ஒரு சிலர் வீட்டிலேயே சைக்கிளிங் பயிற்சி எடுக்கின்றனர். கடந்த 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் பலவிதமான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

உலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்!#VikatanInfographics

உலகளவில் சைக்கிளின் பயன்பாடு எந்த நிலையில் உள்ளது என்று Coya Global Bicycle Cities Index 2019 வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் சைக்கிள் பயன்படுத்தும் 90 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வானிலை, சைக்கிள் திருட்டு, பாதுகாப்பு, சைக்கிளுக்கான சிறப்புச் சாலைகள், சாலைகளின் தரம், சைக்கிள் பகிர்தல், உள்கட்டமைப்பு, சைக்கிள் விபத்து, நடத்தப்படும் சைக்கிள் போட்டிகள் என 15-க்கும் அதிகமான பிரிவுகளில் நூறு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதில் உலகளவில் அதிகமாகச் சைக்கிள் பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யுட்ரிச்ட் (நெதர்லாந்து) தான். இந்த நகரம் நூற்றுக்கு 77.84 மதிப்பெண் பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜெர்மனி நாட்டின் முன்ஸ்டர் (66.15) இரண்டாவது இடத்திலும், பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் (60.51) மூன்றாவது இடத்திலும் உள்ளன. 90 நகரங்களின் பட்டியலில் டெல்லி 23.96 மதிப்பெண் பெற்று 79-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் 21.66 மதிப்பெண் பெற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் உள்ளது.

உலகளவில் சைக்கிள் பயன்பாடு: டெல்லிக்கு 23.96 மதிப்பெண்!#VikatanInfographics

பலர் சைக்கிள் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து சைக்கிள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அனைத்து இடங்களுக்கும் சைக்கிளில் செல்வது என்பது கடினமான ஒன்றுதான். முடிந்த அளவு அருகில் உள்ள கடைகளுக்குச் செல்லும்போதாவது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய சைக்கிளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். 

Vikatan