Published:Updated:

`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி

மு.ராஜேஷ்

ஆளில்லாமல் இயங்கும் வகையில் வடிமைக்கப்பட்ட இந்த விமானங்கள் நிலப்பரப்பை வெகு உயரத்திலிருந்து கண்காணிக்கும் திறன் கொண்டவை.

`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி
`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி

மெரிக்கா மற்றும் இரான் இடையேயான மோதல்போக்கால் வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த மோதல் புகைந்துகொண்டிருந்த நிலையில் புதன்கிழமை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக இரான் அறிவித்தது. அதைத் தொடர்ந்து இரான் மிகப்பெரிய தவற்றை செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடியாக இரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டதாகவும் பின்னர் உடனடியாக அதைத் திரும்பப் பெற்றதாகவும் தகவல் வெளியானது.

`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி

தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்து உளவு பார்த்ததன் காரணமாகவே அதைச் சுட்டு வீழ்த்தியதாக இரான் கூறியது. ஆனால், அதைமறுத்த அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் சர்வதேச எல்லைப் பகுதியில்தான் பறந்துகொண்டிருந்ததாகவும் அது வெறும் கண்காணிப்புப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுவது எனவும் கூறியது. அமெரிக்கா இந்த விமானங்களை எதற்காகப் பயன்படுத்துகிறது?

`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இது மாதிரியான கண்காணிப்பு விமானங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கின்றன. தாக்கப்படும் அபாயம் இருக்கும் பகுதியில் எதிரிகளைக் கண்காணிப்பது என்பது அவசியமானதாக இருக்கிறது. முன்பு போர் விமானங்களில் சென்று எதிரிகளின் நிலப்பரப்பைக் கண்காணித்து வந்தார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. எதிரிகளிடமும் கண்காணிப்புக்காகக் கூடுதலான வழிகள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், ஒரு வேளை போர் விமானம் எதிரிகளிடம் சிக்கிவிட்டால் உயிரிழப்புகள் நேரலாம். அல்லது வேறு ஏதாவது சிக்கல்களும் ஏற்படலாம். அவற்றையெல்லாம் தவிர்க்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள். தற்போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் பெயர் RQ-4 Global Hawk. Northrop Grumman என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்கு இதைத் தயாரித்து வழங்கிவருகிறது. இது தவிர கடல்பரப்புகளைக் கண்காணிப்பதற்காக MQ-4C ட்ரைடன் என்ற ஆளில்லா விமானத்தையும் அமெரிக்கா பயன்படுத்திவருகிறது. 

`இதன் கழுகுப் பார்வையில் எதுவும் தப்ப முடியாது‘

`இதனிடமிருந்து யாரும் தப்பமுடியாது!' இரான் சுட்டுவீழ்த்திய அமெரிக்க வான் உளவாளி

கண்காணிப்பு விமானங்கள் அதிக நேரம் வானில் பறக்க வேண்டியிருக்கும். எனவே, அதற்குத் தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குளோபல் ஹாக். ஒரு முறை முழுமையாக எரிபொருளை நிரப்பிவிட்டால் சுமார் 22,000 கிலோமீட்டர்கள் நிற்காமல் பறக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கான நிலப்பரப்பைக் கண்காணிக்கும் திறன் இதற்கு உண்டு. இதன் கழுகுக் கண்களிலிருந்து யாருமே தப்பமுடியாது. இது சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் அமெரிக்கா கோபமடையக் காரணம் இதற்கான விலை அதிகம் என்பதும் ஒன்று. பெரும்பாலும் தானியங்கி வகை உளவு விமானங்களை உருவாக்குவதற்கான செலவு என்பது மிகவும் அதிகமானதாக இருக்கிறது. ஒரு RQ-4 குளோபல் ஹாக் விமானத்தை உருவாக்க 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 835 கோடியை நெருங்கும். 14,000 கிலோ கிராம் எடை கொண்ட இதன் இறக்கைகள் ஒவ்வொன்றும் 130 நீளமுடையவை. ஆளில்லா விமானம் என்பதால் இதனுள்ளே கருவிகளை வைக்க அதிகமான இடம் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் இதனுள்ளே கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதி நவீன ரேடார் தரையில் இருப்பவற்றைப் பற்றிய தகவல்களை அப்படியே அள்ளிக்கொண்டு வந்துவிடும். மேலும், அதிகதிறன் கொண்ட டெலிபோட்டோ கேமரா இருப்பதால் இலக்கை எளிதாகப் படம்பிடிக்கும் திறனும் இதற்கு உண்டு. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இதில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. இதனால் எதிரிகளைத் தாக்க முடியாது. போர் விமானங்களாக இருந்தால் எதிர்த்தாக்குதல் நடத்தும் வகையில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், குளோபல் ஹாக் விமானத்தில் அப்படி எந்த வசதிகளும் கிடையாது. இது உளவு பார்க்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதிரிகளின் ரேடாரில் சிக்கக் கூடாது என்பதற்காக இது பெரும்பாலும் அதிக உயரத்தில் பறக்கும்.  

இதனிடமிருந்து யாரும் தப்ப முடியாது என்றாலும், இதுவே இரானிடம் தப்ப முடியவில்லை என்பதுதான் சோகம்!. 

Vikatan