Published:Updated:

`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய இரானால் போர் பதற்றம்!

தெ.சு.கவுதமன்
`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய இரானால் போர் பதற்றம்!
`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய இரானால் போர் பதற்றம்!

இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத்தடையால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யமுடியாமல் அந்நாடு பயங்கர கோபத்தில் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வேவு பார்க்கும் ட்ரோன் ஒன்றை இரானின் புரட்சிகர காவல்படை இன்று சுட்டுவீழ்த்தியது. அந்த ட்ரோன், இரானின் வான்பகுதிக்குள் ஊடுருவியதால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. ஆனால், இரானின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது. இதில் யார் பக்கம் தவறு என்பது தெரியவில்லை. 

`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய இரானால் போர் பதற்றம்!

அமெரிக்காவின் ட்ரோன் விமானம், இன்று (வியாழக்கிழமை) எங்கள் நாட்டு எல்லைக்குள் வந்து வேவு பார்த்ததால் அதைச் சுட்டு வீழ்த்தினோம் என்று இரான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அமெரிக்க ராணுவம் அதை மறுத்துள்ளது. சர்வதேச எல்லையில் பறந்துகொண்டிருந்த ட்ரோனை இரான் சுட்டுவீழ்த்தியதாகக் குற்றம்சாட்டியது. உலகின் மிகமுக்கியமான கடல்வழித்தடமான ஹார்மோஸ் நீரிணைப்பின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதுதான் ட்ரோனைச் சுட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளது. அந்த ட்ரோன், குளோபல் ஹாக் ஹை-ஆல்டிடியூட், ஆளில்லாத விமான வகையைச் சேர்ந்தது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய இரானால் போர் பதற்றம்!

இரானின் புரட்சிகர காவல்படைத் தளபதி ஹோசின் சலாமி, ``வேவு ட்ரோன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கான எச்சரிக்கை! எங்கள் நாட்டின் இறையாண்மைக்கும், தேசப் பாதுகாப்புக்கும் மதிப்பளிப்பது மட்டுமே எங்கள் எதிரிகளின் பாதுகாப்புக்கு நல்லது!" என்று கூறியுள்ளார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.