வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (05/04/2017)

கடைசி தொடர்பு:16:53 (05/04/2017)

YuppTV அளிக்கும் YuppTV ஒரிஜினல்ஸ்!

YuppTV

YuppTV உண்மைகளை வெளிக்கொணர்கிறது, வழக்கமான கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு, திரைக்கதை சாதுர்யங்கள் நிறைந்த உண்மைக்கதைகளை டிஜிட்டல் உலகிற்கு அழைத்து வருகிறது.

திரையுலகின் நம்பிக்கை வாய்ந்த இயக்குநர்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, தரம் வாய்ந்த டிஜிட்டல் நிகழ்ச்சிகளை அளிக்கப்போவதாக அறிவித்ததுள்ளது.

ஹைதிராபாத், 16th March 2017: திரு. உதய் ரெட்டி, நிறுவனர் மற்றும் சிஇஓ YuppTV, மற்றும் YuppTV யின் பிராண்ட் தூதுவர் “சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு” YuppTV Originals நிகழ்ச்சியினைத் துவங்கி வைத்தனர். இது OTT பிளாட்பாரம் சொந்தத் தயாரிப்பில் தயாரிக்க இருப்பதாகும். சினிமாவைத் தாண்டிய விஷயங்களைத் தேடி, YuppTV Originals இந்த வழக்கத்திற்கு மாறான கதை சொல்லும் முறையை திரையில் கொண்டுவர, திரையுலகில் திறமை வாய்ந்தவர்களுடன் களமிறங்குகிறது. இந்த புதிய அணுகுமுறை எபிசொட் வடிவில் டிஜிட்டல் ரசிகர்களுக்காக, YuppTV பிளாட்பார்மில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்வின்போது, திரு. உதய் ரெட்டி, நிறுவனர் மற்றும் சிஇஓ YuppTV கூறுகையில், ‘நாங்கள் 2006-ல் டெக்னாலஜி கொண்டு YuppTV துவங்கிய போது அப்போதைய கேளிக்கை ஊடகங்களை தகர்த்தோம். இப்போது இந்த YuppTV Originals மூலம், ரசிகர்களின் தேவைகளை உணர்ந்து, உயர்தரமான ரசிக்கும் விஷயங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் எங்கள் எண்ணத்தால் இந்த ஊடகத்தைத் தகர்க்கப் போகிறோம். அதுமட்டுமல்லாது, YuppTV கதை உருவாக்குபவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் தடையற்ற விநியோகத்தை ஏற்படுத்தப் போகிறோம். மேலும், திரையுலகில் இருக்கும் எங்கள் அஸ்ஸோசியேட்களை நல்ல கதைச்சூழல் கொண்ட வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளித்து அவர்களை மனதார வரவேற்கிறேன்”

விழாவில் பேசிய டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, “இந்த சிறப்பான திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும், திரை உலகில் உள்ள பெரிய ஆட்களுடன் சேர்வதற்காகவும், YuppTV யை வாழ்த்துகிறேன். “YuppTV Originals” நிச்சயமாக பெரிய உயரங்களை அடையும் என்றும், நடிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள கற்பனைத் திறனை வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும், இன்டர்நெட் மூலம் ரசிகர்களை உடனே சென்று சேரமுடியும் என்றும் நம்புகிறேன்.” என்றார்.

YuppTV Originals முதலில் உள்ளூர் கதைகளை எபிசொட் வடிவில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது. மேலும் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட உத்தேசித்துள்ளது. முதல் சில தொடர்களுக்காக, YuppTV ஐ-கேண்டி கிரியேஷன்ஸ், வைஜெயந்தி மூவிஸின் கிளை நிறுவனமான எர்லி மார்னிங் டேல்ஸ், ட்ரென்ட் லவுட்- தி டிஜிட்டல் ஆர்ம் ஆப் விஷன் டைம்ஸ், மதுரா என்டர்டெயின்மென்ட் மற்றும் தமடா மீடியா போன்ற முக்கிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த கூட்டணியைப் பற்றிப் பேசும்போது, பிரபல டோலிவுட் இயக்குநர் தேவ கட்டா கூறுகையில், “திரை உலகில், வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு கற்பனை சுதந்திரத்தை அளிக்கிறது ஒரிஜினல்ஸ். இந்த YuppTV ரசிகர்களை நேரடியாக சென்றடைவதுடன், இளைய இயக்குநர்களின் கற்பனைத்திறத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும் உதவியாகவும் இருக்கிறது. நானும், என்னுடைய பார்ட்னர் கிருஷ்ண விஜய், மற்றும் எங்கள் ஐகேண்டி கிரியேஷன்ஸ் அனைவரும் இந்த ஒரிஜினல்ஸில் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த கூட்டணி இன்னும் பல புதிய தலைமுறைக்கான கதைகளை தயாரிக்கும் என்று எண்ணுகிறோம். “ என்றார்.

YuppTV Originals -இன் முதல் குறுந்தொடர், தேவ கட்டாவின் ஐகேண்டி கிரியேஷன்ஸ் அளிக்கும், லக்ஷ்மன் கர்யா எழுதி இயக்கியிருக்கும், எந்துக்கிலா, வரும் உகாதியன்று வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து மற்றொரு விறுவிறுப்பான தொடர் ஒன்று, ஸ்வப்னா தத்தின் வைஜெயந்தி மூவிஸின் கிளை நிறுவனமான எர்லி மார்னிங் டேல்ஸ் நிறுவனம் தயாரிப்பு மற்றும் நந்தினி ரெட்டி இயக்குனர் மேற்பார்வையில் வெளிவருகிறது. இதை உலக ரசிகர்களுக்கு கொண்டு செல்வதற்கு, மொழி ஒரு தடையாக இல்லாமல் இருப்பதற்காக YuppTV இந்த தொடர்களில் சப்டைட்டில் சேர்த்தும், பிற மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடுகிறார்கள். மேலும் இந்தத் துறையில் திறமை வாய்ந்தவர்களை YuppTV இந்த டிஜிட்டல் புரட்சியில் பங்கேற்க அழைக்கிறது.

திறமை வாய்ந்த கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். originals@yupptv.com

உலகின் பெரிய இணையத் தொலைக்காட்சிகளுள் ஒன்று இந்த YuppTV. மேலும் இது தெற்காசியாவின் ஆன்-டிமாண்ட் இணைய சேவை அளிப்பவராகவும் இருக்கிறது, அதில் 250+ தொலைக்காட்சி அலைவரிசைகளையும், 5000+ திரைப்படங்கள் மற்றும் 100+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் 14 மொழிகளில் ஒளிபரப்பி வருகிறது. YuppTV, தலைசிறந்த சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR-ஆல் மீடியா மற்றும் பொழுதுபோக்கிற்கென உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே சிறந்த, எமரால்ட் மீடியா சமீபத்தில் YuppTV-யில் முதலீடு செய்தது. இதில் எமரால்ட் மீடியா இந்த நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பகுதியை 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. ராஜேஷ் காமத் மற்றும் பால் அய்லோ, முதலீட்டில் அனுபவம் வாய்ந்த குழு மற்றும் சில செயல் அதிகாரிகளுடன் இந்த எமரால்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்தத் தளம். மீடியா, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை அளிப்பதை கவனித்துக் கொள்கிறது. YuppTV இதற்கு முன் அலபாமாவில் வாழும் இந்திய பழங்குடியினர் போர்ச் க்ரீக் அளித்த முதலீட்டை பெற்றிருக்கிறது.

YuppTV -இல் 25000 மணி நேர பொழுதுபோக்கு விஷயங்கள் அதன் நூலகத்தில் வைத்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 2500 மணி நேர புதிய ஆன்-டிமாண்ட் வீடியோக்கள் ஒவ்வொருநாளும் புதிதாக சேர்க்கப்படுகிறது. YuppTV, லைவ்-டிவி மற்றும் கேட்ச்-அப் டிவி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது சமீபத்தில், எக்ஸ்பட் மார்க்கெட் மற்றும் தரமான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் YuppTV பஸார் திரைப்படங்களை ஆன்-டிமாண்ட் முறையில் ஒளிபரப்பும் சேவையான YuppFlix-ஐ துவங்கியது. இது தற்போது இணையத்தில் பணம் செலுத்திப் பார்க்கும் வெளிநாடு வாழ் இந்திய ரசிகர்களுக்கான இணையத் தொலைக்காட்சிகளில் முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் தரமான காணொளிகளை இந்தியாவில் அளிக்கும் மாபெரும் இணையத் தொலைக்காட்சியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிகம் YuppTV டவுன்லோட் செய்யப்பட்ட SmartTV app என்றும், 8 மில்லியன் மொபைல் டவுன்லோடுகளையும் 4.0 பயனாளர் ரேட்டிங்குடன் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு: http://www.yupptv.com

Press Release by: Indian Clicks, LLC


டிரெண்டிங் @ விகடன்