Published:Updated:

`அழிவை ஏற்படுத்தும் அளவு பெரிய விண்கல்... பூமியைத் தாக்குமா?' - ஒரு விண்வெளி சுவாரஸ்யம்

விண்கல்
விண்கல்

ஒரு கி.மீ மேல் அளவு கொண்ட விண்கல் பூமியைத் தாக்கினால் பூமியில் பெரிய அழிவை ஏற்படுத்தும். அதோடு அதன் தாக்கத்தைத் தொடர்ந்து சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஏற்கெனவே பூமியை ஆண்டுகொண்டிருந்த ஒரு உயிரினத்திற்கு மொத்தமாக முடிவுகட்டும் அளவுக்கு பேரழிவை கொண்டுவரும் ஆற்றல் கொண்டவை விண்கற்கள். அப்படி ஒரு விண்கல் தாக்குதல் மீண்டும் இந்த பூமியில் நடக்காது என யாராலும் உத்தரவாதம் தர முடியாது. இதனால்தான் உலகம் எப்படி அழியும் என்ற கேள்விக்கு இன்னும் 'விண்கல் தாக்குதல்' என பலரும் பதிலளிக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஆற்றல் கொண்ட விண்கல் ஒன்று, பூமிக்கு அருகில் வந்து செல்ல செல்லவிருக்கிறது. (52768) 1998 OR2 எனப் பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று 1998-ம் ஆண்டு முதல்முதலாக விண்வெளியில் காணப்பட்டது. பூமிக்கு 50 மில்லியன் கி.மீட்டர்கள் தூரத்தில் சுற்றும் விண்கற்கள் பூமியில் மோதுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, அவை ஆபத்தானவையாகக் கருதப்பட்டுக் கண்காணிக்கப்படும். நிறைய விண்கற்கள் வருடந்தோறும் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் வருவதுண்டு. ஆனால், அவையனைத்தும் பூமியை அடையும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும்.

விண்கல்லின் பாதை
விண்கல்லின் பாதை

அளவில் பெரிய விண்கற்கள்தான் வளிமண்டலத்தைக் கடந்து பூமியைத் தாக்கி சேதத்தை விளைவிக்கும். இவ்வாறான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. பெரிய அளவிலான கற்கள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், அந்த நிகழ்வுகளை நம்மால் காண முடியும். அது ஒரு வானில் நிகழும் பெரு வானவேடிக்கை போல் இருக்கும். இதற்கு முன்னர் 2018 டிசம்பர் 18-ல் 1600 டன் எடை கொண்ட பெரிய விண்கல் ஒன்று 'காம்சட்கா பீடபூமியில்' தரையிலிருந்து 25.6 கி.மீ தூரத்தில் வானில் வெடித்து சிதறியது. அந்த விண்கல்லின் அடர்த்தியைக் கொண்டு 1900-க்கு பின் நடந்த மூன்றாவது பெரிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டது.

Vikatan

இது போன்ற விண்கல் தாக்கும் சம்பவங்களில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கிறது. தற்போது கூறப்படும் 1998 OR2-ன் விட்டம் (Diameter) 1.8 கி.மீ - 4.1 கி.மீ வரை இருக்கும் என நாசாவின் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ மேல் அளவு கொண்ட விண்கல் பூமியைத் தாக்கினால் பூமியில் பெரிய அழிவை ஏற்படுத்தும். அதோடு அதன் தாக்கத்தைத் தொடர்ந்து சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விண்கல்
விண்கல்

1998-ல் முதன்முதலாகக் கண்டறியப்பட்டதிலிருந்தே இந்த விண்கல் நாசாவின் Near Earth Tracking Systeam (NEAT) மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்கல்லானது வருகிற ஏப்ரல் 29-ம் தேதி பூமியைக் கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பான தூரத்திலேயே பூமியை கடக்கும் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அடுத்த கட்டுரைக்கு