Published:Updated:

`உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவானதா?!' -17 புதிய கோள்களைக் கண்டறிந்த கெப்லர் தொலைநோக்கி

Planets
Planets

கெப்லர் கண்டறிந்த கோள்களுள் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான இடத்தில் ஒரு கோளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கெப்லர் தொலைநோக்கி கொடுத்த தகவல்களைக் கொண்டு 17 புதிய கோள்களை நாசா கண்டறிந்துள்ளது. 2009-ல் விண்ணில் செலுத்தப்பட்ட கெப்லர் தொலைநோக்கி 2018-ம் ஆண்டு தன் பணியை நிறைவு செய்தது. கெப்லர் தொலைநோக்கி அனுப்பிய தகவல்களைக் கொண்டு இதுவரை நிறைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது மேலும் 17 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான இடத்தில் ஒரு கோளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

NASA கெப்லர்
NASA கெப்லர்

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வாழத் தகுதியான கோளுக்கு KIC-7340288 b என அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியைவிட ஒன்றரை மடங்கு மட்டுமே பெரிதாக உள்ளது. மேலும், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான இடத்தில் அதன் சூரியனிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் அமைந்துள்ளது.

வேலை செய்யும்போது போர் அடிக்குதா? இந்த விளையாட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! #Games

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான மைக்கேல் குனிமோட்டோ கூறுகையில், ``இந்தக் கோள் நம் பூமியிலிருந்து 1000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நம்மால் அங்கு செல்லமுடியாது. எனினும் இதுவரை கெப்லர் கண்டறிந்ததிலேயே 15 கோள்கள் மட்டுமே உயிர்கள் வாழத் தகுதியான இடத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று என வரையறுத்திருப்பது பரவசமாக இருக்கிறது" என்றார்.

Planets
Planets

புதிதாகக் கண்டறிந்த கோளுக்கு ஒரு வருடம் என்பது 142 மற்றும் அரை நாள்கள் மட்டுமே. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மெர்குரியை விடக் கொஞ்சம் அதிகமான தூரத்தில் அது அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. மேலும், நாம் சூரியனிலிருந்து பெரும் ஒளியை விட மூன்றில் ஒரு பங்கு ஒளியைத்தான் அந்தக் கோள் தன் நட்சத்திரத்தில் இருந்து பெறுகிறது.

மற்ற 16 கோள்களில் பூமியைவிட சிறியதாக மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் கோள் ஒன்றும் உள்ளது. மற்ற கோள்கள் அனைத்தும் பூமியைவிட 8 மடங்கு பெரியதாக இருக்கின்றன எனவும் நாசாவிலிருந்து வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு