Published:Updated:

நிலவில் மோதவிருக்கிறதா Elon Musk -ன் `ஃபால்கன் 9' ராக்கெட்; விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ராக்கெட் மார்ச் 4 -ம் தேதி இந்த ராக்கெட் நிலவில் மோதிவிடும் சாத்தியம் அதிகம் இருக்கிறது என்கின்றனர்.

நிலவில் மோதவிருக்கிறதா Elon Musk -ன் `ஃபால்கன் 9' ராக்கெட்; விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ராக்கெட் மார்ச் 4 -ம் தேதி இந்த ராக்கெட் நிலவில் மோதிவிடும் சாத்தியம் அதிகம் இருக்கிறது என்கின்றனர்.

Published:Updated:
எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ்
2015-ல் பூமியில் இருந்து விண்வெளியில் செலுத்தப்பட்ட ஏவுகணை ஒன்று சில வாரங்களில் நிலவில் மோதவிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் ஃபால்கன் 9 ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பியது. ஏழு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருக்கும் கேப் கானவெரல் ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் இருந்து Deep Space Climate Observatory செயற்கைக் கோளைப் பூமியில் இருந்து எடுத்துச் சென்றது ஃபால்கன் 9.

பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்ட படம்
பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்ட படம்

பூமியில் இருந்து கொண்டு சென்ற செயற்கைக்கோளை லேக்ரேஞ்ச் புள்ளியில் (Lagrange Point) நிலைநிறுத்திய ஃபால்கன் 9 ராக்கெட். "இதன் பிறகு மீண்டும் பூமிக்குத் திரும்பும் அளவுக்குத் எரிபொருளும் இல்லாமல், பூமி மற்றும் நிலவின் புவியூர்ப்பு விசையை விட்டு வெளியேறவும் முடியாமல் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஃபால்கன் 9 ராக்கெட்டின் அந்தப் பாகம் கைவிடப்பட்டது. 2015 பிப்ரவரியில் இருந்த விண்வெளிக் குப்பையாக விண்வெளியில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது இந்த ராக்கெட் பாகம்" என விண்வெளி ஆராய்ச்சியாளர் எரிக் பெர்கர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு மென்பொருள் வடிவமைக்கும் பிரபல மென்பொறியாளரும் தரவு ஆய்வாளருமான பில் கிரே, "கடந்த ஜனவரி 4ஆம் தேதி நிலவுக்கு மிக அருகில் இந்த ஏவுகணை பறந்ததென்றும், வரும் மார்ச் 4 ஆம் தேதி இந்த ராக்கெட் நிலவில் மோதிவிடும் சாத்தியம் அதிகம் இருக்கிறது" என்று தெரிவித்தார். மேலும், "முதல் முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்வைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்" என்றும் தெரிவித்திருக்கிறார் அவர். விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றிலேயே, ஒரு ஏவுகணை நிலவில் சென்று மோதுவது இது தான் முதல் முறை.

மார்ச் 4-ஆம் தேதிக்குள் ஃபால்கன் 9 நிலவில் மோதலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். "இந்த சம்பவம் சுவாரசியமாக இருக்கப்போகிறது என்றும், ஆனால் இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது" என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விண்வெளி ஆராய்ச்சியாளரான ஜானதன் மெக்டவல். இந்த மோதல் நிலவின் பரப்பின்மீது ஒரு சிறிய பள்ளத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

நிலவில் மோதவிருக்கும் ராக்கெட்
நிலவில் மோதவிருக்கும் ராக்கெட்

நான்கு மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த ஏவுகணை விண்வெளியில் குப்பையாக மாறவிருக்கிறது. இதேபோல் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்பட்ட பல செயற்கைக்கோள்களும் , விண்கலங்களும் இன்னும் விண்வெளியில் குப்பைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் வரிசையில் தற்போது எலான் மஸ்கின் ஏவுகணையும் இணைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இது போன்ற விண்வெளிக் குப்பைகளால் பெரிய ஆபத்து ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.