Election bannerElection banner
Published:Updated:

`பிக் பேங்கை விட 5 மடங்கு அதிகம்!' - விஞ்ஞானிகள் கண்டறிந்த மாபெரும் கருந்துளை வெடிப்பு

பெருவெடிப்பு
பெருவெடிப்பு ( CHANDRA X-RAY OBSERVATORY )

இந்தப் பெருவெடிப்பானது நம் கேலக்ஸியிலிருந்து 400 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கேலக்ஸி கூட்டத்தின் நடுவில் உள்ள ஒரு கருந்துளையில் நிகழ்ந்துள்ளது.

`பிக் பேங்' பெருவெடிப்புக்குப் பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிப்பு ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்பதனை அமெரிக்காவின் சந்திரா எக்ஸ்-ரே அப்சர்வேட்டரி (Chandra X-Ray Observatory), ஆஸ்திரேலியாவின் முர்க்கிஸன் வைல்ட்ஃபீல்ஃட் அர்ரே (Murchison Wildfield Array) மற்றும் இந்தியாவில் புனேவில் உள்ள ஜெயன்ட் மீட்டர்வேவ் ரேடியோ டெலஸ்கோப் (Giant Metrewave Radio Telescope) ஆகியவை கொடுத்த தகவல்களைத் தொகுத்து அதில் கிடைத்த முடிவுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பெருவெடிப்பானது நம் கேலக்ஸியிலிருந்து 400 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கேலக்ஸி கூட்டத்தின் நடுவில் உள்ள ஒரு கருந்துளையில் நிகழ்ந்துள்ளது. ஒப்பியூகஸ் என்ற பெயர் கொண்ட அந்த கேலக்ஸி கூட்டத்தின் நடுவில் உள்ள ஒரு கேலக்ஸியில் உள்ள பிரமாண்டமான கருந்துளைதான் இந்தப் பெருவெடிப்பு நிகழக் காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

கேலக்ஸி கூட்டம்தான் இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் பெரிய அமைப்பாகும். இந்தப் பெரு வெடிப்பு அந்த கேலக்ஸி கூட்டத்தின் நடுவில் ஒரு பெரிய வெற்றிடத்தை உண்டாக்கிவிட்டது. எவ்வளவு பெரிய வெற்றிடம் என்றால், நம் பால்வெளி போல பதினைந்து பால்வெளிகளை வரிசையாக வைக்கும் அளவு பெரிய வெற்றிடம்.

கருந்துளை பெருவெடிப்பு
கருந்துளை பெருவெடிப்பு
CHANDRA X-RAY OBSERVATORY

இதற்கு முன்னர் 2003-ல் MS 0735.6+7421 என்ற வெடிப்புதான் மிகப் பெரிய வெடிப்பாக இருந்து வந்தது. இதுவும் ஒரு கருந்துளையின் மூலம் நிகழ்ந்ததுதான். தற்போது நடந்துள்ள வெடிப்பு, பிக் பேங்கைவிட ஐந்து மடங்கு கூடுதல் சக்தி கொண்ட மிகப் பெரிய வெடிப்பு என்று கூறப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு