இந்திரா, செய்யார்.

''உங்கள் அறிமுகங்களிலேயே நீங்கள் பெருமையாக நினைப்பவர்கள் யார் யார்?''

''மணிரத்னம் இயக்கத்தில் எனது கவிதாலயா நிறுவனம் அறிமுகப்படுத்திய மிகச் சிறிய வயதில் அகில உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள்.

மற்றபடி, எனது பட்டியலில் உள்ளவர்கள் உங்களுக்கே தெரியும்!''

எம்.அமல்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

''பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும் அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால், உங்கள் பெண்ணியப் படங்களில் ஏன் பெரியாரைப்பற்றிய சித்திரிப்புகள் இல்லை?''

''ஒரு வேளை பெரியார் பாடல்கள் எழுதி இருந்தால் பயன்படுத்தி இருப்பேனோ? பெரியாருக்கு முன்பே பாரதி பிறந்துவிட்டதாலும் அவருடைய பெண்ணியக் கருத்துக்களில் பாரம்பரியத்தின் நல்ல அம்சங்களும் புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும், அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது!''

ப.விமலா, கோவிலூர்.

''ரஜினி - கமல் இருவரிடமும் நீங்கள் அதிகமான உரிமை எடுத்துக்கொள்கிறீர் கள்... சரியா?''

''நீங்கள் 'சொன்னது சரியா’ என்று கேட்கிறீர்களா அல்லது நான் 'செய்வது சரியா’ என்று கேட்கிறீர்களா? புரியவில்லை!

நீங்கள் சொன்னது சரியா என்று கேட்டால் ரொம்ப சரிதான்...

நான் செய்வது சரியா என்று கேட்டதாகக் கொண்டால்... இப்படி வைத்துக்கொள்ளுங்களேன்.

அவர்கள் எனது பிள்ளைகள்... 'அப்பா-மகன்’ உறவு. அந்த உரிமைதான் அம்மணி!

ஆனால், அவர்களை 'நீ’ என்று ஒருமையில் அழைப்பதைத் தவிர, வேறு எந்த உரிமையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை அம்மணி!''

கமலேஷ், விழுப்புரம்.

''உங்கள் பார்வையில் நல்ல நடிகன் என்பவன்?''

''திரையில் மட்டும் நடிப்பவன்! மற்றும் தான் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டது போன்ற உணர்வைப் பார்ப்பவர்களுக்குத் தோற்றுவித்து, தன்னைச் சிறிதும் இழக்காமல் இருப்பவன். சாதனை செய்த மற்ற நல்ல நடிகர்களைப் பார்த்து பொறாமையில் வெந்துபோகாமல், வலியச் சென்று அவனைப் பாராட்டி, தன்னைத்தானே திறமையில் உயர்த்திக்கொள்ள நினைப்பவன்!''

எஸ்.கார்த்திகேயன், சிவகாசி.

''ரஜினிபற்றி இதுவரை சொல்லாத ரகசியம் ஏதாவது ஒன்று சொல்லுங்கள்?''

''இந்த ரகசியத்தைச் சொல்வதற்கு ஒரு நேரம் இருக்கிறது... அதற்காகக் காத்திருக்கிறேன்.

ஆனால், மிஸ்டர் கார்த்திகேயன்... உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அருகே வாருங்கள்... காதைக் கொடுங்கள்... என்ன கேட்டீர்களா! உஷ்... KEEP IT TO YOURSELF. என்னைப் போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்!''

எஸ்.ஷீலா, திருவேற்காடு.

''மகா நடிகன் நாகேஷ§க்கு எந்த விருதும் வழங்கப்படவில்லையே?''

''அதேதான் எனது கேள்வியும்... நாம் இருவருமே சேர்ந்து கேட்போம்... யாரிடம் கேட்பது? THE POWERS THAT BE... இது ஒரு மகா சரித்திரத் தவறு. ஒரு புறக்கணிப்பு என்று சொல்லிக்கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? என் மனதில் ஆறாத காயங்களில் இதுவும், எம்.எஸ்.வி. அவர்களுக்கும் பெரிய அளவில் விருது வழங்கப்படாமல் இருப்பதுவும் உறுத்திக்கொண்டே இருக்கின்றன!''

பி.பீட்டர், தஞ்சாவூர்.

''சின்னத் திரை, பெரிய திரை இரண்டிலுமே வெற்றிக் கொடி நாட்டியவர் நீங்கள்! இரண்டுக்கும் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன?''

''சின்னத் திரை... எழுத்தாளனின் களம். பெரிய திரை... இயக்குநரின் தளம். அதில் கோடை ரோடாக்கலாம். இதில் காலனியை வீடாக்க வேண்டும். அதில் விதவிதமான புதுமைகளைச் செய்யலாம், புதுமுகங்களைக் காட்டலாம். இதில் விநியோகஸ்தரின் முகங்களைத் தவிர, வேறு முகத்தைப் பார்ப்பது கடினம்.

சின்னத் திரையின் வீச்சு பெரியது; அபாரமானது. 24 மணி நேரமும் ஓட்டிக்கொண்டே இருக்கலாம். வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டே பார்க்கலாம். பிடிக்கவில்லை என்றால், பாதியில் நிறுத்திவிடலாம். சின்னத் திரையில் ஒரு வீட்டுக்குள்ளேயே மொத்தக் கதையும் எடுக்கலாம்... பெரிய திரைக்கு சுவிட்சர்லாண்ட் எங்கே... ஸ்வீடன் எங்கே என்று போக வேண்டும்.

மிகமிக முக்கியமான வித்தியாசம்... பாட்டே இல்லாமல் சீரியல் எடுக்கலாம்... வார்த்தைகளே புரியாமல் ஆறேழு பாடல்கள் எடுக்க வேண்டும் பெரிய திரைக்கு. என்னைப் பொறுத்த வரை சொல்கிறேன்... இயக்குநரின் கவனம், செயல்பாடு, ஈடுபாடு, உழைப்பு, வேகம், ஜட்ஜ்மென்ட் எல்லாமே இரண்டுக்கும் பொதுவாகவே ஒன்றுதான்!''

எம்.சாரதி, திருவல்லிக்கேணி.

''இளைய தலைமுறை இயக்குநர்களில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?''

''நிறையப் பேர் வருகிறார்கள்; வந்திருக்கிறார்கள். என்னைப் பொறாமைப்படவைக்கிறார்கள். தமிழ்த் திரையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போகிறது என்ற நம்பிக்கையையும் தருகிறார்கள்.

'ஆடுகளம்’ படத்தின் மூலம் இரட்டை தேசிய விருதுகள் பெற்று வெற்றிமாறன் பொறாமைப்படவைக்கிறாரே!''

ரா.வசந்தா, திருநெல்வேலி.

''உங்களுக்கு யாருடைய டைரக்ஷனில் நடிக்க ஆசை?''

''அப்படி ஆசைப்பட்டால், நல்ல புத்திசாலியான ஒரு புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க ஆசை!

இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறார் 'சிகரம் இயக்குநர்’!''

கே.பிரியா, வேலூர்.

''உங்களின் கலை வாரிசு என்று யாரைச் சொல்வீர்கள்?''

''நானும் யாருடைய வாரிசாகவும் இருக்கவில்லை; என்னிடம் பயின்று செல்பவர்களும் அப்படியே. வானத்துக்கும் ஞானத்துக்கும் வாரிசு கிடையாது!''

- அடுத்த வாரம்...

பாரதிராஜா ஸ்கூலில் இருந்துதான் பாக்யராஜ், மணிவண்ணன், பாண்டியராஜன், பார்த்திபன் என்று ஏராளமான இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், பாலசந்தர் ஸ்கூலில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகாதது ஏன்?

நீங்கள் அறிமுகப்படுத்திய புதுமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த முகம்?

சினிமாவை வெறும் நாடகபாணிக்குக் கொண்டுசென்றீர்கள் என உங்களைப்பற்றி ஒரு கருத்து நிலவுகிறது... அது எந்த அளவுக்கு உண்மை?

- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...