Published:Updated:

விகடன் ஜன்னல்!

ரைட்டர்படம் : எல்.ராஜேந்திரன்

விகடன் ஜன்னல்!

ரைட்டர்படம் : எல்.ராஜேந்திரன்

Published:Updated:

      சக்தே இந்தியா!

விகடன் ஜன்னல்!

 ட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்  போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்திய ஹாக்கி அணி. எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் ஆன இந்தியா, இப்போது அதில் கலந்துகொள்வதே கொண்டாட்டமாகிப்போன நிலைமை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆன ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாப்ஸின் அசத்தல் வேகமும் வியூக மும்தான் அணிக்குப் புது வேகத்தைப் பாய்ச்சி இருக்கிறது. பாகிஸ்தானை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் தட்டியது, தென் ஆப்பிரிக்க சாம்பியன் சேலஞ்ச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தது இந்தியா. டெல்லியில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் சிங்கப்பூர், இத்தாலி, கனடா, போலந்து, பிரான்ஸ் என அனைத்து அணி களுக்கு எதிராகவும் தொடர் வெற்றிகளைக் குவித்து லண்டன் ஒலிம்பிக்குக்குள் நுழைந்து இருக்கிறது இந்தியா. ஆறு போட்டிகளில் 16 கோல்கள் அடித்து சாதனைப் படைத்திருக்கிறார் இந்திய அணியின் சந்தீப் சிங். இறுதிப் போட்டி யில் மட்டும் ஐந்து கோல்கள் சந்தீப் சிங்குடையது. ஒருபுறம் இந்த சந்தோஷம்இருக்க மறுபுறம் தொடர் வெற்றிகளைப் பெற்றும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்திருக்கிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி. சியர் அப் கேர்ள்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   'கர்ணன்’ ரிட்டர்ன்ஸ்!

விகடன் ஜன்னல்!
##~##

''இன்றைய இளைய தலைமுறையினரைக் கொடை வள்ளல் ஆகுங்கன்னோ, வாரிவாரி கொடுங்கன்னோ சொல்லலை. ஒரு வாக்குறுதி கொடுத்தா அதைக் காப்பாத்துங்க. அவ்வளவு தான். அதுக்கு இந்தப் படத்தைப் பார்க்க ரெண்டரை மணி நேரம் ஒதுக்குங்க!'' - அர்த்தம் பொதிந்துப் பேசும் சாந்தி சொக்க லிங்கம்தான் 1964-ல் வெளியான 'கர்ணன்’ படத்தை மீண்டும் வெளியிடும் தயாரிப் பாளர்.

''ஏற்கெனவே 'உலகம் சுற்றும் வாலிபன்’, 'ராஜா’, 'நாடோடி மன்னன்’, 'தெய்வ மகன்’ படங்களை ரீ-ரிலீஸ் பண்ணியிருக்கோம். இதுல 'கர்ணன்’ ரொம்பவே ஸ்பெஷல். ரொம்ப சிதைஞ்ச நிலையில்தான் படத்தோட ஃபிலிம் ரோல் கிடைச்சுது. ரொம்ப மெனக் கெட்டு பார்த்துப் பார்த்து டெக்னாலஜி விஷயங் களைச் சேர்த்திருக்கோம். 35 எம்.எம்-ல இருந்து சினிமா ஸ்கோப்பா மாத்தி டி.டி.எஸ். பண்ணியிருக்கோம். மூணு வருஷ புராஜெக்ட். கிட்டத்தட்ட 50 லட்ச ரூபா செலவாகி இருக்கு. வெளியான டிரைலருக்கு நல்ல வரவேற்பு.  மார்ச் ரெண்டாவது வாரம் ரிலீஸ். 'நான்... நீ’ன்னு தமிழ்நாடு முழுக்கக் கிட்டத்தட்ட 100 தியேட்டர்க்காரங்க போட்டி போட்டு உரிமை வாங்கியிருக்காங்க!'' என்கிறார் சாந்தி.

அஜீத் படத்தைவிட பெரிய ஓப்பனிங் கிடைக்கும் போல!

      கதைக் கதையாம் காரணமாம்!

திர்க் கட்சிகளைத் தாக்க, விரோதிகளை விரட்ட, சொந்தக் கட்சியினரைக் காக்க என, மேடைதோறும் குட்டிக் கதைகள் சொல்லி அசத்திவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா! கதைகளின் சூத்ரதாரி யார்?

'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் புதிய ஆசிரியர் மருது அழகுராஜ். இவர் ஏற்கெனவே 'சித்திரகுப்தன்’ என்ற பெயரில் 'நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் கட்டுரைகள் எழுதிவந்தவர். ஜெ-தான் இந்தப் புனைப்பெயரை அவருக்குச் சூட்டினாராம்! ஜெ. கலந்துகொள்ளும் நிகழ்ச்சி, சூழல், இடம் என எல்லாவற் றையும் தெரிந்துகொண்டு, அந்தந்தச் சூழல்களுக்கு ஏற்ப கிட்டத்தட்ட பத்துக் கதைகளின் சாராம்சங்களை கார்டனுக்கு அனுப்புவாராம் மருது. அவற்றில் ஜெ. டிக் அடிக்கும் கதைகள் தான் விரிவாக டெவலப் செய்யப்பட்டு, கூட்டத்தில் ஜெ. பேச்சை அலங்கரிக்கின்றனவாம். கதை உருவாகும் கதையும் நல்லாத்தான் இருக்கு!

              சங்கரன்கோவில்... வரம் யாருக்கு?

விகடன் ஜன்னல்!

'தங்கள் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்காதா?’ என்று பிற தமிழர்கள் பொங்கும் அளவுக்கு 'சங்கரன்கோவில்’வாசிகள் குதூகலத்தில் இருக்கிறார்கள்! தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே மின்வெட்டு (!)  முதல்வரின் சுற்றுப் பயணத்துக்காகப் பளபளப்பாகும் சாலைகள், கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களின் தொகுதி ஜாகை காரண மாக புரளும் பணப் புழக்கம் என மினுமினுக்கிறது சங்கரன்கோவில். தேர்தல் ஆணையத்தின் அதிரடியையும் மீறி, கடைசி நேரத்தில் வீட்டுக்கு வீடு 'பொருள்’ வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள். 'விலையில்லா வாக்கு’ போட்டு பழகுங்கப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism