Published:Updated:

விகடன் ஜன்னல்!

ரைட்டர்

விகடன் ஜன்னல்!

ரைட்டர்

Published:Updated:

மணல் அனல்!

விகடன் ஜன்னல்!

 த்தியப்பிரதேசத்தில் சுரங்கக் குவாரி மாஃபியா கும்பலுக்கு நரேந்திரகுமார் சிங் என்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரி பலியான செய்தியின் சுவடு மறைவதற்குள் திருநெல் வேலி மாவட்டம், மிட்டாதார்குளம் கிராமத்தில் மணல் மாஃபியாவுக்குத் தன் உயிரைப் பலி கொடுத்திருக்கிறார் சதீஷ்குமாரன் என்ற 21 வயது இளைஞர். நம்பியாற்றுப் படுகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஊர் மக்களே முறை போட்டுக்கொண்டு மணல் கொள்ளையைத் தடுப்பது என்ற அடிப்படையில், 11-ம் தேதி இரவு எஸ்டாக் வின்சென்ட் என்பவர் தலைமையில் அவரு டைய மகன் சதீஷ்குமாரன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு நள்ளிரவுக் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறது. அதிகாலை 3 மணிக்கு இரு குழுக்களாகப் பிரிந்து மணல் அள்ளி வந்த லாரிகளை மறித்து நின்றிருக்கிறார்கள். நிறுத்தச் சொல்லி கூக்குரலிட்ட இவர்களை மதிக்காத லாரிகளில் ஒன்று, சதீஷை இடித்துத்தள்ளி நசுக்கிப் பறந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே தந்தை வின்சென்ட்டின் கண் முன்னேயே இறந்திருக்கிறார் சதீஷ். ஐந்து தம்பிகள், ஒரு தங்கையுடன் பிறந்த சதீஷ்தான் அந்தக் குடும்பத்தின் பற்றுக்கோலாக இருந்திருக்கிறார்! தற்போது மிட்டாதார்குளம் மக்கள் 'மணல் கொள்ளைக்கு நிரந்தரத் தீர்வு காண்’ எனப் போராட்டத்தில் குதித்துஉள்ளனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தந்தை’ இராவணன்!

விகடன் ஜன்னல்!

ழக்கு மேல் வழக்கு பாய்ந்து கோவை சிறையில் கதிகலங்கி நிற்கும் இராவணனின் 'மகன் பாசம்’ காவல் அதிகாரிகளையே கலங்கவைக்கிறதாம். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும், 'நான் மறுபடியும் எப்படியாவது அம்மாகிட்ட சேர்ந்துடுவேன். தயவுசெஞ்சு இப்ப எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க... என் மகனுக்கு போன் பண்ணிக்கொடுங்க. ரெண்டே ரெண்டு நிமிஷம் மட்டும் பேசிக்கிறேன்!’ என்று கெஞ்சிக் கதறுகிறாராம். சமயங்களில் மனம் இரங்கி போன் போட்டுக்கொடுத் தால், அந்த இரண்டு நிமிடங்களும் ஒரு வரி உரையாடல்கூட இல்லாமல் அழுகையிலேயே கரைகிறதாம்!

காமெடியா... கவன ஈர்ப்பா?

விகடன் ஜன்னல்!

திருச்சி சிறையில் உள்ள சசிகலா வின் கணவர் ம.நடராஜன், 'நான் இல்லாம பெங்களூரு கேஸைமுடிக்க முடியாதுய்யா. சசிகலாவே நினைச்சா லும் அந்த கேஸை முடிக்க முடியாது!’ என்று அக்கம்பக்கத்தினர் காதில் விழுவதுபோல் சவுண்ட் விட்டுக் கொண்டே இருக்கிறாராம். அதை காமெடியாக எடுத்துக்கொள்வதா அல்லது அம்மாவுக்கு நோட் போட்டு அனுப்புவதா எனக் குழம்பித் தவிக்கிறார்களாம் சிறைத் துறை உளவுப் பிரிவு போலீஸார்!

பீர்மோர் பந்தல்!

விகடன் ஜன்னல்!

டைத்தேர்தல் புகழ் சங்கரன்கோவில் ரகளையும் கலகலப்புமாக பரபரப்பேறிக்கிடக்கிறது! குஷ்பு மீது வழக்குப் பதிவு, டி.எஸ்.பி. மாற்றம், ம.தி.மு.க - சரத்குமார் கட்சியினர் மோதல் என ஒவ்வொரு நாளும் தேர்தல் ஜுரம் தகிக்கிறது. கஞ்சித் தொட்டிபோல் கிராமங் களில் கழகங்கள் திறந்துள்ள சரக்குத் தொட்டிகள்தான் இந்த வார சென்சேஷன்! மொத்தமாக எடுத்து வரப்படும் சரக்குகள் பெரிய அண்டாக்களில் ஊற்றப்பட்டு,  அதில் குடம்குடமாகத் தண்ணீர் கலந்து, ஆங்காங்கே கட்சி அலுவலகங்களில் மோர்ப் பந்தல்போல் வாசலில் வைக்கிறார்கள். கட்சிப் பேதம் இன்றி வருகிறவர் போகிறவர்கள் எல்லாம், மொண்டு குடித்தபடியே செல்கிறார்கள். 'எங்க வேணும்னாலும் குடிச்சிக்கோ. எந்தக் கட்சி தர்ற சரக்கு நல்லா இருக்கோ அந்தக் கட்சிக்கு உன் ஓட்டைக் குத்து!’ என்று களை கட்டுகிறதாம் சரக்குக் கச்சேரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism