பிரீமியம் ஸ்டோரி

இதுதான் நிஜ இறுதி மரியாதை!

விகடன் ஜன்னல்

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமரன் மறைவையட்டி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் தா.பாண்டியன். முத்துக்குமரனின் பணிகளைப் பட்டியலிட்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், புதுகை இடைத்தேர்தலில் முத்துக்குமரனின் மனைவியை ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதுதான் அவருடைய பொதுவாழ்க்கைக்கு நாம் செய்யும் சரியான மரியாதையாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக ஜெ-வைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறும் கேட்டிருந்தாராம் தா.பா. ஆனால், தோட்டத்தில் இருந்து எந்தப் பதிலும் இல்லையாம். சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மனம் நொந்து இதைக் குறிப்பிட்டு இருக்கிறார் தா.பா!

டீ எடு... கொண்டாடு!

விகடன் ஜன்னல்

ந்தியாவின் தேசிய பானமாகிறது டீ! ''இந்தியாவில் 83 சதவிகித இல்லங்களில் டீ குடிக்கின்றனர். தேயிலைத் தொழிலில் உள்ள தொழிலாளர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பெண்கள் பணியாற்றுகின்றனர். முறைசார்ந்த தொழிலாளிகள் இடையே அதிக வேலைவாய்ப்பு அளிப்பது தேயிலைத் தொழில்தான். அதனால், இந்தியாவின் தேசிய பானமாக டீயை அறிவிக்கத் திட்டக் குழு பரிந்துரைக்கும். அஸ்ஸாம் மாநிலத்தில் முதன்முதலில் தேயிலையைப் பயிரிட்ட மணிராம் திவானின் பிறந்த நாள் ஏப்ரல் 17. அவர் நினைவைப் போற்றும் வகையில் அடுத்த ஆண்டு ஏப். 17-க்குள் டீ தேசிய பானமாக அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்து இருக்கிறார் திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா. அலுவாலியாவின் அறிவிப்பு அரசின் அறிவிப்பாகிவிடுவது உறுதி என்றாலும், டீயைத் தேசிய பானமாக அறிவிக்கக் கூடாது என்பதற்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்து இருக்கின்றன. ''தேசிய பானமாக டீயை அறிவிக்கக் கூடாது; பால்தான்அதற்குத் தகுதியானது'' என்று போர்க் குரல் எழுப்பி இருக்கிறார் 'அமுல்’ நிறுவனத் தலைவரான சோதி!

வெளியே வேண்டாம்... உள்ளேதான் சேஃப்!

விகடன் ஜன்னல்

ர் ஆண்டைக் கடந்து திகார் சிறைக் கம்பிகளுக்குப் பின் அடை பட்டுக்கிடக்கிறார் ஆ.ராசா. அலைக் கற்றை வழக்கில் தொடர்பு உடையவர் கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்ட நிலையில், ராசா மட்டும் ஏன் வெளியே வரவில்லை என்று கேட்டால், வெளியே இருப்பதைவிட உள்ளே இருப்பதுதான் இப்போதைக்கு அவருக்குப் பாதுகாப்பு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!

ஒரு வருஷம் டும் டும் டும்!

.தி.மு.க. ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியோடு ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. ஒரு வருடக் கொண்டாட்டத்தைத் தடபுடலாக நடத்தப்போகிறார்கள். இதற்காக அரசின் சார்பில் பத்திரிகைகளில் தருவதற்காகப் பக்கம்பக்கமாக விளம்பரங்கள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. அதோடு, கட்சிக்காரர்களையும் அமர்க்களமாகக் கொண்டாடச் சொல்லி அறிக்கையும் வரப்போகிறது. ஹைலைட்டாக சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்துகொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், கூட்டத் தொடரின் கடைசி நாளான மே 12-ம் தேதி சிறப்பு விவாதம் நடைபெறுமாம்!

இணைந்த கைகள்!

விகடன் ஜன்னல்

ரு காலத்தில் அழகிரிக்கும் பொட்டு சுரேஷ§க்கும் இருந்த நெருக்கம் ஊர் அறிந்தது. அப்புறம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்களும் எல்லோருக்கும் தெரியும். இப்போது மீண்டும் வசந்த காலம். சீனா சென்றிருந்த அழகிரி அங்கிருந்து சுரேஷை தொலைபேசியில் அழைத்துப் பேசினாராம். நீண்ட நேரம் நடந்த இந்த உரையாடல்தான் மதுரையில் இப்போது டாக் ஆஃப் தி டவுன்!

இன்னுமோர் இழப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக் கல்வியில் முதலாமாண்டு சிவில் இன்ஜீனியரிங் படித்த தைரியலட்சுமியும் தற்கொலை செய்துகொண்ட மாணவர் பட்டியலில் இணைந் துள்ளார். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மடப்பட்டுக்கு அருகில் உள்ள கருவேப்பிலைபாளையத்தின் தைரியலட்சுமி மிகவும் பிற்படுத்தப்பட்ட

விகடன் ஜன்னல்

சமூகத்தைச் சார்ந்தவர். அப்பா சக்திவேல் விவசாயக் கூலி. அம்மா உமா ஐந்து வருடங்களுக்கு முன்பு காசநோயால் இறந்துபோனார். சிந்துஜா, ஜெயஸ்ரீ எனும் இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். கூலிக்குக் களை எடுத்து, நாற்று நடுவது உள்ளிட்ட விவசாய வேலைகளைச் செய்து பாட்டி சாரதாம்மாள்தான் தன் மூன்று பேத்திகளையும் படிக்கவைத்து இருக்கிறார். வறுமை யின் வாசம் தெரிந்த தைரியலட்சுமி பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண்களும் ப்ளஸ் டூ-வில் 1012 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜீனியரிங் தமிழ்வழிக் கல்வியில் படிக்க ஆர்வமாகச் சேர்ந்தவர், இரண்டு செமஸ்டர்கள்கூட முடியாத நிலையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிட்டார்.

'என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. என் குடும்பத்துக்கு நான் வேஸ்ட். யாரும் இதற்குக் காரணமல்ல’ என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருக்கிறார்.

தமிழ்வழிக் கல்வியை முழுமையாகக் கொண்டுவராததே தைரியலட்சுமியின் தற்கொலைக் குக் காரணம். ஆங்கிலமும் தமிழும் கலந்து கற்றுத்தருவதைக் கிராமப்புற மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. தாழ்வுமனப்பான்மையும் அரியர் வைத்துவிடுவோமோ என்ற பதற்றத்துடன் கூடிய பயமும்தான் தைரியலட்சுமி உயிரைப் பறித்திருக்கிறது. பாடப்புத்தகம் இன்னொரு மாணவியைக் காவு வாங்கி இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு