Published:Updated:

விகடன் ஜன்னல்

ரைட்டர்படங்கள் : சு,குமரேசன், பா.காளிமுத்து

விகடன் ஜன்னல்

ரைட்டர்படங்கள் : சு,குமரேசன், பா.காளிமுத்து

Published:Updated:

அசராத அமைச்சர்

விகடன் ஜன்னல்

 இடைத்தேர்தலையட்டி புதுக்கோலம் பூண்டு நிற்கிறது புதுக்கோட்டை. தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் ஆகியவை தேர்தலைப் புறக்கணிக்க, அ.தி.மு.க - தே.மு.தி.க. மட்டும் நேரடியாகக் களத்தில் இருக்கின்றன. '49 ஓ போடுங்க’ என முன்னாள் அமைச்சர் ரகுபதியும் 'புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யணும்’ என முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவனும் 'வாக்குச் சாவடிப் பக்கமே போகக் கூடாது’ என மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசுவும் மாறிமாறிக் குழப்பி அடிப்பதால், என்ன செய்வது என்று புரியாத நிலையில் உடன்பிறப்புகள் உள்ளனர். ஆனால், தே.மு.தி.க. வட்டாரமோ, ''10-ம் தேதி வரைக்கும் இப்படித்தாம்பா பேசிட்டு இருப்பாங்க. சரியா வாக்குப் பதிவுக்கு முதல் நாள், 'எல்லாரும் தே.மு.தி.க-வுக்குக் குத்துங்கப்பா!’னு கலைஞரே சொல்லிடுவாருப்பா'' என ஏதோ ஒரு நம்பிக்கையில் பேசிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க. வட்டாரத்தில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சுற்றிச் சுழன்றாலும், உணவு அமைச்சர் காமராஜின் பிரசாரம்தான் செம காமெடி. வயல்களில் வேலை செய்பவர்களுடன் போய் அமர்ந்துகொண்டு, அவர்கள் எடுத்துவந்திருக்கும் பழைய சோறு, பழைய குழம்பைப் பிசைந்து சாப்பிட்டபடி வாக்குச் சேகரிக்கிறார். எத்தனை தூக்குவாளிகள் இருந்தாலும் அமைச்சர் அசருவதே இல்லை. மறைந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வான முத்துக்குமரனின் மனைவி, தமிழக அரசுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'நான் பி.எட். முடித்து உள்ளதால் எனக்கு ஆசிரியர் பணி வழங்கினால் சொந்த ஊரிலேயே குழந்தைகளுடன் இருப்பேன்’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டு உள்ளார். அதனால், தேர்தல் பிரசாரத்துக்காக புதுக்கோட்டைக்கு வரும் ஜெ. இவரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரேதான்!

விகடன் ஜன்னல்

சிகலா மீண்டும் கட்சியில் சேர்ந்ததில் இருந்து அதிகபட்ச உதறலில் கிடப்பது காவிரி டெல்டா அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தான். இதற்கிடையில் சசியின் கணவர்   ம.நடராசனும் ஜாமீனில் வெளியில் வர... அவரை ர.ர-க்கள் ஒவ்வொருவராகச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அடக்கம், விசுவாசம், பணிவுக்குப் பெயர்போன அமைச்சர் சமீபத் தில் நடராசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துத் திரும்பி இருக்கிறார். 'அவரே பார்த்துட்டு வந்துட்டாரு... நமக்கென்ன?’ என இப்போது நடராசன் வீடு நோக்கிப் படை எடுக்கிறார்களாம் ர.ர-க்கள்!

நடுக்கடல் சமாதானம்!

விகடன் ஜன்னல்

''அண்ணன் - தம்பி அடிச்சுக்குறாங்கப்பா... அப்பா வுக்கு நிம்மதியே இல்லை'' என்று தொடந்து வந்த செய்தியை அடுத்து, ஆச்சர்ய சந்திப்பு ஒன்று நடந்து இருக்கிறது. சமீபத்தில் லண்டன் சென்ற ஸ்டாலின் அங்கு சிகிச்சை முடிந்து குடும்பத்துடன் நார்வே பயண மானார். அங்கு இவர்களுக்காக அழகிரி குடும்பத்தார், செல்வி, தயாநிதி மாறன் குடும்பம் என 40 பேர் கப்பலில் காத்திருந்தார்கள். நான்கு நாட்கள் கப்பலி லேயே தங்கிவிட்டது மொத்த மு.க. குடும்பமும்.   ஆ.ராசா விடுதலை, ஸ்பெக்ட்ரம், ஜெ. ஆட்சி தொடுத்த வழக்கு கள், பொதுத் தேர்தல், சினிமா, தொலைக்காட்சி என ஏகப்பட்ட விஷயங்கள் கப்பலிலேயே அலசப்பட்டு, சங்கடங்கள் தீர்க்கப்பட்டனவாம்!

சகாயம்... மணல் கொள்ளையர்க்கு கசாயம்!

விகடன் ஜன்னல்

'மாற்றம் என்பதுதான் மாறாதது... என் பணியைச் சிறப்பாகவே செய்தேன்’ என்று தன் இடமாற்றத்தை சகாயம் சாஃப்டாக எடுத்துக்கொண்டாலும், மதுரை மக்களால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. சகாயம் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தினம் ஓர் ஆர்பாட்டம், போராட்டம் எனப் பரபரப்பாக இருக்கிறது மதுரை. கிரானைட் மாஃபியா மன்னரான அந்த மூன்றெழுத்து இனிஷியல்காரர்தான் சகாயம் இடமாற்றத்துக்குக் காரணம் எனச் செய்திகள் அலைஅடிக்கின்றன. 'மதுரை குவாரிகளின் மூலம் 16,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையைத் தொடர்ந்து, அந்த மூன்றெழுத்துக்காரர் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து 25 கோடிகளைக் கப்பம் கட்டிவிட்டாராம். அதன் விளைவே சகாயம் டிரான்ஸ்ஃபர் என்கிறார்கள். நெசமாவா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism