Published:Updated:

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:
##~##

அ.குமரன், ஓசூர்.

 ''தமிழ்நாட்டில் உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் யார்... ஏன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''பிடிச்சவங்கன்னு யாரும் இல்லை. இப்போ அவாளோட கலாசாரம், பண்பாடு வேற. என்னோடது வேற. அவா சாராயம் குடிக்கிறா, சின்ன வீடு வெச்சுக்குறா, பொறுக்கித்தனம் பண்றா. பிறகு எப்படி எனக்குப் பிடிக்கும்? ஒரு காலத்தில் 'ஜெயலலிதா கெட்டிக்காரி’னு நினைச்சேன். ஆனா, சசிகலாகூட சேர்ந்து கெட்டுப் போயிட்டா. இந்தத் தடவை ஜெயலலிதா மாறிட்டதா எல்லாரும் சொல்றா. ஆனா, அப்படி மாறினதா சொல்ல முடியாது. முன்னாடி மாதிரி ஓப்பன் வன்முறை இல்லையே தவிர, மத்தபடி பணம் சம்பாதிக் கும் பொறுக்கிகளைக் கட்சிக்குள் சேர்த் துண்டு அவாளும் தப்புதான் பண்றா!''  

இராம.பாலு, திருப்பத்தூர்.

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

''ஸ்பெக்ட்ரம் வழக்கு கடைசியில் என்னதான் சார் ஆகும்?''

 ''எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும். அதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். சி.பி.ஐ. கேஸ் தவிர, என்னோட தனிப்பட்ட கேஸும் இருக்கு. ஒருவேளை சி.பி.ஐ. கேஸுல அவா வெளியில் வந்தாக்கூட, என் கேஸ்ல தப்ப முடியாது. ப.சிதம்பரமும் நிச்சயம் சிக்குவார். வெய்ட் அண்ட் ஸீ!''  

சு.மணி, திண்டிவனம்.

''நீங்கள் கிணறு வெட்டும்போது எல்லாம் பூதம் கிளம்புகிறதே எப்படி?''

''நான் எதையும் போற போக்குல சொல்றது இல்லை. ஆராய்ச்சி பண்ணி, ஆதாரம் கையில கிடைச்ச பிறகுதான் சொல்றேன். என்னை யாரும் பிளாக்மெயில் பண்ண முடியாது. நான் நைட் கிளப் போறது இல்லை, பொம்மனாட்டிகூடச் சுத்துறது இல்லை. என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரணும்னு நினைக்கலை. ஆனா, நான் எதைச் சொன்னாலும், 'சுவாமி இப்படித்தான் சும்மா சொல்லிண்டு இருப்பார்’னு மீடியாவுல எழுதுவா. இப்போ ஸ்பெக்ட்ரம் கேஸ்ல ப.சிதம்பரம் சிக்குவார்னு சொல்றேன். ஏதோ உள்நோக்கத்தில் பொய் சொல்றதா எல்லாரும் நினைக்கிறா. ஆனா, அவர் சிக்கும்போதுதான் எல்லாரும் சுவாமியைத் தேடி வருவா!''

சீ.ராதா, திருவண்ணாமலை.

 ''உங்கள் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்து, என் நண்பன், 'நையாண்டி தர்பார்’ என்கிறான். உங்கள் பதில்?''

 ''இது முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவாளும் விடுதலைப் புலிகளும் சேர்ந்து பரப்பும் வதந்தி. அவா ரொம்பக் காலமா இப்படித்தான் பேசிண்டு இருக்கா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவாளோட நினைப்பு என்னன்னா, 'பார்ப்பான்னா அடி கொடுத்தா ஓடிடுவான், பட்டாசு வெடிச்சா வீட்டுக்குள்ள ஒளிஞ்சுண்டுடுவான்’னு நினைக்கிறா. ஆனா, நான் அப்படி இல்லை. அதனால்தான் என்னை ஒரு காமெடியன்போலச் சித்திரிக்க முயற்சி பண்றா. உண்மையில வாய்ச்சொல் வீரர்கள்னா அவாள்தான். விடுதலைப் புலி களை ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தப்போ, 'தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்’னா. ஆனால், ஒரு சைக்கிள்கூட எரியலையே! அதனால, இப்படிப் பேசுறவாளை எல்லாம் கண்டுக்கக் கூடாது.''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

க.கோவிந்தன், செங்கல்பட்டு.

'' 'மதுரையை சிங்கப்பூரா மாத்துவேன்’னு சொன்னீங்களே... ஞாபகம் இருக்கா? அதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தீங்களா?''

 ''ஓ... நல்லா ஞாபகம் இருக்கே!

நான் எம்.பி-யா இருந்ததே ஒரு வருஷம்தான். அந்த ஒரு வருஷத்தில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரணுமோ, அவ்வளவும் கொண்டுவந்திருக்கேன். புது ஏர்போர்ட் நான் கொண்டுவந்ததுதான். ஏராளமான புதிய கம்பெனிகள் நான் கொண்டுவந்ததுதான். ஒருவேளை 'சிங்கப்பூரா மாத்துவேன்’னு சொன்னா, எல்லாமே ஃப்ரீயா கிடைச்சுடும்னு நெனச்சேள்னா, அதுக்கு நான் பொறுப்பு இல்லை. சிங்கப்பூர்ல சின்னச் சின்னத் தப்புகளுக்கும் கடுமையான தண்டனை தர்றா. அதுபோல இங்கே கொண்டுவர முடியுமா? சிங்கப்பூர்போல வளர்ந்த நாடா மாறணும்னா, அதுக்கு நீண்ட நாள் திட்டம் வேணும். அதைச் செயல்படுத்த நான் பதவியில் சில வருடங்கள் இருக்கணும். கொள்ளை அடிக்காத, ஊழல் செய்யாத அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருக்கணும். சும்மா, நான் மட்டும் ஆசைப்பட்டா போறாது!''

வி.ஆறுமுகம், விழுப்புரம்.

 ''உங்கள் பார்வையில் தி.மு.க... அ.தி.மு.க?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''அவா ரெண்டு பேர் கட்சிக்கும் திராவிட இயக்கம்தான் தாய்வீடு. ஒரு காலத்தில் திராவிட இயக்கத் துக்கு மதிப்பு இருந்தது. இப்போ நாடு முழுக்கத் தேசிய உணர்வுதான் அதிகமா இருக்கு. தமிழ்நாட்டுலயும் தேசிய உணர்வு அதிகரிச்சுண்டே போறது. இவா ஒரு காலத்துல பேசுன மாநில சுயாட்சிபத்தி இப்போ அவாளுக்கே தெரியுமானு தெரியலை. இந்தி படிக்கவிடாமச் செஞ்சு மக்களை முடக்குனது திராவிட இயக்கம்தான்னு தமிழ் மக்கள் இப்போ அனுபவத்துல புரிஞ்சுண்டு இருக்கா. கருணாநிதி வீட்டுல 'ஆதித்யா’னு ஒரு குழந்தைக்குப் பேர் வெச்சிருக்கா. அதுகூட சம்ஸ்கிருதப் பேர்தான். கருணாநிதியோட ஒரு மனைவி நல்ல பெரிய பொட்டு வெச்சிருக் காங்க. அதனால், திராவிட இயக் கத்துக்கு இப்போ எந்த அர்த்தமும் இல்லை. ஜெயலலிதாவைப் பொறுத்த வரை இந்தச் சூழலுக்குள் ஒரு கைதியா இருக்கா. நாம் ஏதாவது செஞ்சா, 'பாப்பாத்தி’னு சொல்லிடுவாளோ’ன்ற அச்சம் அவா மனசுல எப்பவும் இருக்கு. ஸோ... தலைவர் களைத் தவிர, இந்த ரெண்டு கட்சி களுக்கும் எந்தப் பெரிய வித்தியா சமும் இல்லை!''

கு.சேகர், திருவாரூர்.

''சினிமா பார்ப்பீங்களா..சமீபத்தில் என்ன படம் பார்த் தீங்க?''

 ''எப்பவாவது ஏரோபிளேன்ல போகும்போது ப்ளே பண்ற படத்தைப் பார்ப்பேன். அதுவும் என்ன படம்னு எல்லாம் தெரியாது. தியேட்டருக்குப் போய்ப் படம் பார்த்த ஞாபகமும் இல்லை. சமீபத்துல எந்தப் படமும் பார்க்கலை.''

க.செல்வராஜ், செய்யாறு.

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''உண்மையிலேயே உங்களுக்குத் தமிழ் சுத்தமாப் பேச வராதா? இல்லே, இதை ஒரு சாக்கா வெச்சு அவ இவ, அவன் இவன்னு கலாட்டா பண்றீங்களா?''

 ''இது என் ஸ்டைல்! திராவிட இயக்கத்துக்காரங்கபோல அடுக்குமொழியில் மக்களுக்குப் புரியாத தமிழ்ல பேசி என்ன பிரயோஜனம்? அதனால்தான் நான் எப்பவும்போல பேசுறேன். அதுவும் தவிர, சம்ஸ்கிருத வார்த்தைகள் எல்லா மொழியிலயும் பரவிக்கிடக்கு. அதைப் பயன்படுத்திப் பேசினா, தமிழ், கர்நாடகம், தெலுங்கு, இந்தினு எல்லா மொழிக்காரங்களும் புரிஞ்சுக்குவா. சம்ஸ்கிருதத்தை மக்கள் மத்தியில பிரபலமாக்கணும். நான் இப்படிப் பேச அதுவும் ஒரு காரணம்.''

ஆர்.மோகன், கொற்கை.

 ''உங்களை அமெரிக்காவின் ஏஜென்ட் என்கிறார்களே... உண்மையா?''

 ''அமெரிக்க ஏஜென்ட் என்றால், அது ரகசியமான வேலை. நான் அமெரிக்க ஏஜென்ட் என்றால், அப்படிச் சொல்றவாளுக்கு அது எப்படித் தெரிஞ்சுது? அப்போ அவாளும் சி.ஐ.ஏ. ஏஜென்டா? என் மேல இவா வேற எந்தக் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது. படிக்காதவன்னு சொல்ல முடியாது, பொறுக்கின்னு சொல்ல முடியாது, குடிகாரன்னு சொல்ல முடியாது, ஊழல் பண்ணினான்னு சொல்ல முடியாது. அதனால தான் இப்படி 'சி.ஐ.ஏ. ஏஜென்ட்’னு பொய்யைப் பரப்புரா. ஒருவேளை நான் அமெரிக்காவின் ஏஜென்ட்னா, இந்நேரத்துக்கு சோனியா காந்தி என்னை விட்டுவெச்சிருப் பாங்களா?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

ம.பாரதி, செங்கல்பட்டு.

''ஒருவேளை நீங்கள் இந்தியப் பிரதமரானால், நீங்கள் போடும் முதல் உத்தரவு என்ன?''

''அது என் கையில் இல்லையே... இது வரைக்கும் பிரதமர் ஆகணும்னு திட்டம் போட்ட யாரும் பிரதமர் ஆனது இல்லை. ஒருவேளை கற்பனையில் கேட்குறீங்கன்னா... நான் பிரதமர் ஆனால், முதலில் இந்த இன்கம்டாக்ஸ் என்பதையே ஒழிச்சுடுவேன். இன்கம்டாக்ஸ்தான் நாட்டுல நடக்குற எல்லா ஊழலுக்கும் அடிப்படை. அங்கே இருந்துதான் எல்லாம் ஆரம்பிக்குது. அதனால், அதை முதலில் ஒழிப்பேன். ரெண்டாவதா, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்திய அக்கவுன்ட் எல்லாத்தையும் முடக்கி, அந்தப் பணத்தை எல்லாம் தேசிய உடைமை ஆக்கிடுவேன்.''

 ''மன்மோகனில் ஆரம்பித்து கனிமொழி வரை அத்தனை அரசியல்வாதிகளின் தூக்கத்தையும் கெடுக்கிறீர்கள். ஆனால், தேர்தலில் உங்கள் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டுதானே இருக்கிறது?''

 ''அம்பேத்கர், காமராஜர்லாமே தோத்துப் போயிருக்கா. அதுக்காக அவாளை எல்லாம் தப்புனு சொல்வேளா? மக்கள் முட்டாளா இருந்தா, அதுக்கு என்ன செய்ய முடியும்?''

- அடுத்த வாரம்...

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''1996-ம் வருஷத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைக் கீழே இறக்க ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அப்போது உங்களிடமும் அது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தினாராமே... அப்போது என்ன பேசினீர்கள்?''

 ''முருகன் கடை இட்லி... சரவண பவன் இட்லி... எது சார் நல்லா இருக்கும்?''

 ''உண்மையைச் சொல்லுங்கள்... டெல்லியில் நீங்கள் ஜெயலலிதாவுடன் கொடுத்த டீ பார்ட்டியில் என்னதான் நடந்தது?''

- நிறையப் பேசலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism