Published:Updated:

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:
##~##

மு.இளவரசு, காஞ்சிபுரம்.

''1996-ம் வருஷத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைக் கீழே இறக்க ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அப்போது உங்களி டமும் அது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தினாராமே... அப்போது என்ன பேசினீங்க?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''அந்தத் தேர்தலுக்கெல்லாம் முன்னாடியே ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரா, ரஜினிகூட ஆலோசனை பண்ணேன். நான் ஜெயலலிதாவை எதிர்த்துப் போராட்டம் பண்ணிண்டு இருந்தப்போ, ஒரு நாள் சோ வீட்டில் ரஜினி என்னைச் சந்திச்சார். 'ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து இறக்கணும்’னு சொன்னார். 'ஜெயலலிதாவை இறக்குறது ஒண்ணும் பெரிசு இல்லை. ஆனா, அதுக்குப் பதிலா யார் வரப் போறது? கருணாநிதிதானே... அவர் ரொம்ப மோசம்’னு சொன்னேன். அதுக்கு ரஜினி, 'நான் கேரன்டி கொடுக்குறேன். அவர் நன்னா இருப்பார். பழைய மாதிரி இல்லை. நிறைய மாறிட்டார்’னு சொன்னார். 'உங்களுக்குத் தெரியாது ரஜினி. நீங்க சொல்றதுக்காக இப்போ நான் தி.மு.க-வை ஆதரிப்பேன். ஆனா,

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

தேர்தலில் கருணாநிதி கட்சிக்காரங்க எனக்கு எதிராவே ஆளை நிறுத்துவாங்க’னு சொன்னேன். உடனே ரஜினி, 'நோ... நோ... அது எப்படி முடியும்? அதுக்கு நான் கேரன்டி. நீங்க நிக்குற தொகுதியில் தி.மு.க. வேட் பாளர் நிற்க மாட்டார்’னு சொன்னார்.கடைசியில் நான் சொன்ன மாதிரிதான் நடந்துச்சு. ரஜினிகிட்ட கேட்டா, 'நான் அப்படிச் சொல்லவே இல்லை’னு மாத்திப் பேசினார். 'ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி’னு ரஜினி சொல்றது எல்லாம் சினிமா டயலாக். உண்மையில் அவர் அப்படி இல்லை!''

தி.முருகன், செய்யாறு.

 ''முருகன் கடை இட்லி... சரவண பவன் இட்லி... எது சார் நல்லா இருக்கும்?''

 ''என்ன நெனைப்புல இந்தக் கேள்வியை என்னன்ட கேக்குறேள்னு தெரியலை... பாஸ்... பாஸ்...''

எம்.மணிவாசகன், மாதவரம்.

''உண்மையைச் சொல்லுங்கள்... டெல்லியில் நீங்கள் ஜெயலலிதாவுடன் கொடுத்த டீ பார்ட்டியில் என்னதான் நடந்தது?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''அப்போ பா.ஜ.க. கவர்ன்மென்ட். சோனியா காந்தி என்னைச் சந்திச்சு, 'என் கணவர் ராஜீவ் காந்திக்கு வி.பி.சிங் அரசைக் கவிழ்த்துக்கொடுத்தேள். அதுபோல, எனக்கு இந்த பா.ஜ.க. அரசாங்கத்தைக் கவிழ்த்துத் தாங்கோ’னு கேட்டா. ஜெயலலிதாவும் அதே மாதிரி கேட்டா. சோனியாவையும் ஜெயலலிதாவையும் ஒண்ணு சேர்க்குறதுக்காக, நான் டீ பார்ட்டி நடத்தினேன். அவ்வளவுதான்.''

க.குணசேகரன், மேட்டுப்பாளையம்.

 ''உங்க பொழுதுபோக்கு என்ன?''

''புத்தகம் படிப்பேன். வரலாறு படிப்பேன். அதுதான் எனக்குப் பொழுதுபோக்கு. சைனீஷ் மொழி தெரியுங்குறதால, அதில் பிராக்டீஸ் பண்ணுவேன். எனக்குத் தமிழ், இந்தி, இங்கிலீஷ், சம்ஸ்கிருதம், சைனீஷ், குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலினு எட்டு மொழிகள் தெரியும். அதனால் புத்தகங்கள் படிக்கிறதுதான் என் முக்கியமான பொழுதுபோக்கு!''

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

 ''பல்கலைக்கழகத்தில் பாடம் எடுக்கிறீர்கள். அரசியலில் இருக்கிறீர்கள். நீதிமன்றத்தில் வாதாடுகிறீர்கள். எதில் நீங்கள் திருப்தியாக உணர்கிறீர்கள்?''

''அது எப்படிச் சொல்ல முடியும்? எனக்கு தோசை, ஐஸ்க்ரீம், காபி... மூணுமே பிடிக்கும். தனித் தனியா பிரிச்சுக் கேட்டா எப்படி? எனக்கு நல்ல வசதி இருக்கு. கோர்ட்ல கேஸ் போட்டுத்தான் பணம் சம்பாதிக்கணும்னு அவசியம் இல்லை. அதனால் ஒரு திருப்திக்காகத்தான் வக்கீலா பிராக்டீஸ் செய்றேன். அரசியலும் எனக்குப் பிடிச்சுதான் செய்றேன். புரொஃபசரா இருக்கிறதும் மனசுக்குப் பிடிச்ச வேலைதான். அதனால மூணுமே எனக்கு ஹேப்பிதான்.''  

ஆ.முகம்மது, சென்னை-72.

 ''உங்களுடைய மறக்க முடியாத மாணவர்கள்?''

''அது நிறைய இருக்கா? 'இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ சேர்மன் ராஜேஷ் குப்தா என் ஸ்டூடன்ட் தான். அவா இப்போ ஒரு கேஸ்ல சிக்கிண்டு இருக்கா. டி.என். சேஷன்கூட என் ஸ்டூடன்ட்தான். ஆனா, அவா கடைசி நேரத்துல கெட்டுப்போயிட்டா. 77-ல் ப.சிதம்பரம், 'நான் சுவாமியோட ஸ்டூடன்ட்’னு அறிக்கை கொடுத்தா. இப்போ ஒப்புக்குவாளானு தெரியலை. அவர் அப்படி ஒண்ணும் நல்ல ஸ்டூடன்ட்டும் கிடையாது.''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

மு.ராஜகோபால், மதுரவாயல்.

 ''தேர்தல் பிரசார அனுபவத்தில் மறக்க முடியாத விஷயம்?''

''1970-களில் பாம்பே நார்த் ஈஸ்ட் தொகுதியில் மிகப் பெரிய மெஜாரிட்டியில் மக்களவைத் தேர்தல்ல ஜெயிச்சேன். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசம். அப்போ நான் பாம்பேக்குப் புதுசு. எனக்கு அங்கே தனிப்பட்ட வகையில் யாரையும் தெரியாது. மக்களுக்கும் என்னைத் தெரியாது. ஆனாலும், என்னைப் பெரிய அளவில் ஜெயிக்கவெச்சா. திராவிடக் கட்சிகள் எல்லாம், 'மதுரை எங்க ஊர். இங்கே கால்வைக்க முடியாது’னு சும்மா வாய்ஜாலம் காட்டிண்டு இருந்தப்போ, 96-ல் நான் மதுரையில் நின்னேன். கருணாநிதி யோட சதியால் ரெண்டாவது இடத்தில் வந்தேன். அப்புறமாதான் ஜெயலலிதாவோட கூட்டு போட்டு மறுபடியும் ஜெயிச்சேன். உடனே, 'மதுரையில் ஒரு பாப்பான் ஜெயிச்சுட்டான்’னு இவாள்லாம் என்னா கூச்சல் போட்டா தெரியுமோ? 2004-ல் நான் தோத்ததுக்குக்கூட எலெக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் ஃபிராடு நடந்ததுதான் காரணம்.''

எஸ்.ஐயப்பன், காஞ்சிபுரம்.

 ''சந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் நீங்கள் அமைச்சர். இனி, அப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று நினைக் கிறீர்களா?''

''அதைப் பத்தி எனக்கென்ன கவலை? நான் எதையும் எதிர்பார்க்கலையே. நான் யாருடைய உதவியாலும் வர மாட்டேன். வந்தால், தனியாத்தான் வருவேன். சேர்ந்து வந்தா, நான் செய்யுறதை எல்லாம் தான் செஞ்சதா பல பேர் சொல்லிண்டுர்றா. சந்திரசேகர் அமைச்சரவையில் நான் சீனியர் மோஸ்ட் அமைச்சரா இருந்தேன். பொருளா தாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தேன். ஆனா,

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

எல்லாத்தையும் மன்மோகன் சிங்தான் கொண்டுவந்ததா இப்போ எல்லாரும் சொல்லிண்டு இருக்கா!''

எஸ்.பூபால், பம்மல்.

 ''எமர்ஜென்சி காலத்தில் மாறுவேடம் பூண்டு வலம் வந்தீர்களே... அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

 ''அஞ்சு மாசம் அப்படி மாறுவேஷத் தில் அலைஞ்சுண்டு இருந்தேன். சர்தார்ஜி மாதிரி தாடிலாம் வெச்சுண்டு டெல்லியில் அலைஞ்சு திரிஞ்சேன். அதே வேஷத்தில் சுற்றுப்பயணம் எல்லாம் போனேன். மெதுவா எனக்கு இவாளோட நோக்கம் என்னன்னு புரிஞ்சுடுத்து. பிறகு, தாடி எடுத்துட்டு பைஜாமாவுக்கு மாறிட்டேன்.''

சி.ராஜராஜன், செய்யாறு.

 ''சந்திரலேகா இப்போது என்ன செய்கிறார்?''

''அவாதான் ஜனதா கட்சிக்குத் தமிழ்நாட்டுத் தலைவர். அந்த வேலையைப் பார்த்துண்டு இருக்கா. அவா ஒண்ணும் மத்த திராவிடக் கட்சித் தலைவர்கள்போல இல்லை. அவா, கலெக்டரா இருந்தவா. ஐ.ஏ.எஸ். படிச்சவா. பொறுப்பான பதவியில் இருந்தவா. இவாளாட்டாம் ஆர்ப்பாட்டமா கூட்டம் போட்டு அரசியல் செய்ய நாங்க ஊழல் செஞ்சு பணம் எதுவும் சேர்த்து வைக்கலையே!''

மு.மதியழகன், வேளச்சேரி.

 ''தொண்டர் பலம்கூட இல்லாத நீங்கள் அரசியல் அரங்கில் பல விஷயங் களைச் சாதிக்க முடிவது எப்படி? நேர்மை யான பதில் தேவை?

''இது தவறான பிரசாரம். எங்களுக்குத் தொண்டர் பலம் இல்லேனு யார் சொன்னது? தொண்டர் பலம் இல்லேன்னா, எப்படி அஞ்சு தடவை தேர்தலில் ஜெயிச்சிருப்பேன்? எங்க கட்சித் தொண்டர்களின் எண்ணிக்கை எல்லாம் லெட்ஜர் வெச்சு நோட் பண்ணி எண்ணுறது இல்லை. ஆனா, நிறையப் பேர் இருக்கா. கோடிக் கோடியாக் கொட்டி செலவு பண்ணி ஊர்வலம் போட்டு, ஆர்ப்பாட்டம் செஞ்சு கூட்டம் காட்டுறதுக்கு எங்ககிட்ட பணம் இல்லை. ஒருவேளை மக்களே பணம் கொடுத்தா, இதையெல்லாம் நாங்களும் செய்வோம்!''

அ.கருணாகரன், திருவண்ணாமலை.

''உலக விஷயங்களை எல்லாம் பேசுகிறீர்கள்... சரி! சோழவந்தானில் பிறந்த நீங்கள் ஏன் இன்னமும் தமிழ் பேசக் கற்றுக்கொள்ளவில்லை?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

''நல்ல தமிழ் பேசினா, மக்களுக்குப் புரியாது. மக்களுக்குப் புரியாமல் இலக்கணத்துடன் நான் பேசி என்ன பிரயோஜனம்? சினிமா வசனம் மாதிரி பேச முடியுமா? காந்தி பேசுன இந்தியைக்கூடத்தான் எல்லாரும் கிண்டல் பண்ணா. 'நான் பேசுறது மக்களுக் குப் புரியறது. அது போறும்’னு காந்தி சொல்லிட்டார். அதையேதான் நானும்சொல் றேன். நான் பேசுறது மக்களுக்குப் புரியறது. வேற என்ன வேணும்?!''

பஞ்சநாதன், பம்மல்.

''தனி காஷ்மீரில் உங்களுக்கு ஒப்புதல் இருக்காது என்று தெரியும். ஆனால், ஒப்பந்தப்படி இந்தியா விடுதலை அடைந்த துமே காஷ்மீர் மக்களிடம் இந்தியாவோடு இணைந்திருப்பதுபற்றி வாக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டாமா? இன்று வரை இந்திய பிரதமர் பதவியில் இருந்த யாரும் அதை நடத்தவில்லை. இது ஜனநாயக சர்வாதிகாரம்தானே? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

 ''மக்கள்கிட்ட வாக்கெடுப்பு நடத்தணும்னு யார் சொன்னா? அப்படி எந்தச் சட்டமும் இல்லையே. நேரு சொன்னார் என்றால், அது அவரோட தனிப்பட்ட கருத்து. அவரோட கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்து இல்லை, இந்திய மக்களின் கருத்து இல்லை. பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்த வெள்ளைக்காரன் அரசாங் கம், முஸ்லிம்கள் அதிகமா வாழும் பகுதி களை பாகிஸ்தானில் சேர்த்தது. மற்ற பகுதிகளை இந்தியானு பிரிச்சது. அதற்கான அறிவிப்பில், 'இப்படி ராஜாக்கள் ஆளும் பகுதிகளை இரண்டு நாடுகளுடன் இணைப்பதற்கு மக்களின் அபிப்பிராயம் கேட்கத் தேவை இல்லை’னு தெளிவா சொல்லிஇருக்கான். பிறகு எதுக்கு வாக்கெடுப்பு நடத்தணும்? நேரு சொல்லிட்டா, நான் கேட்கணுமா? காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தணும்னு யார் சொன்னாலும் அவா, பாகிஸ் தான் சார்பா பேசுறதாதான் அர்த்தம்!''

-அடுத்த வாரம்...

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''அபாண்டமாகப் பழி சுமத்தி தி.மு.க. ஆட்சியைக் கலைத்தீர்கள் என்று உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு குறித்து?''

''பல நாடுகளின் உளவுத் துறைகளில் இருந்தும் தகவல் வந்தது என்று கூறுகிறீர் கள். ஓர் அரசியல் தலைவர் வெளிநாட்டு உளவு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பது தவறான விஷயம் ஆச்சே?''

''தமிழக எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகள் எப்படி அமைந்திருக்கின்றன?''

- நிறையப் பேசலாம்...