Published:Updated:

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:

அ.பாஸ்கரன், நல்லாலம்.

 '' 'அபாண்டமாகப் பழி சுமத்தி, தி.மு.க. ஆட்சியைக் கலைத்தீர்கள்’ என்று உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகுறித்து?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சுக் கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்குற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ-க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச்சொல்லி, 'கருணாநிதி, தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்றா. அவா அரசைக் கலைச்சிடுவோம்’னு சொன்னேன். அவர் பயந்தார். சுத்தி இருந்தவாள்லாம், 'இந்தக் காரணத்துக்காக அரசைக் கலைச்சா, தமிழ்நாட்டில் பெரிய கலவரம் வெடிக்கும்’னு பயமுறுத்தினா. 'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. கலைங்கோ’னு தைரியம் கொடுத்து நான்தான் கலைக்க வெச்சேன். அதில் என்ன தப்பு?''

இலட்சுமி.சரவணன்,  எம்.எம்.டி.ஏ. சென்னை.

 ''பல நாடுகளின் உளவுத் துறைகளில் இருந்தும் தகவல் வந்தது என்று கூறுகிறீர் கள். ஓர் அரசியல் தலைவர் வெளிநாட்டு உளவு நிறுவனங்களுடன் தொடர்புவைத்திருப்பது தவறான விஷயம் ஆச்சே?''

''எனக்கு வெளிநாட்டு உளவுத் துறை யோட தொடர்பு இருக்குனு நான் எப்பவும் சொன்னது இல்லை. என் நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், மாணவர்கள், என்கூட பேராசிரியரா வொர்க் பண்ணவா, பொலிட்டீஷியன்ஸ், பத்திரிகையாளர்னு எனக்குப் பலரைத் தெரியும். அவங்கதான் என் சோர்ஸ். இவ்வளவு ஏன்... சி.பி.ஐ, இந்திய உளவுத் துறையிலும் எனக்கு நண்பர்கள் இருக்காங்க!''

இராம.வெங்கட், வந்தவாசி.

 ''எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் செல்லும் பாதை சரியா?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்குறேன்... நீங்க அதுக்குப் பதில் சொல்லுங்கோ... அவருக்கு என்ன பாதை இருக்கு? அவர் அதுல டிராவல் பண்றது சரியா, தப்பானு நான் சொல்றதுக்கு. அவரைச் சொல்லியும் தப்பு இல்லை. அவருக்கு பெஸ்ட் ரோல் மாடல்னு யாரும் இல்லையே... அவரும் என்னதான் பண்ணுவார்? அவருக்கு முந்தி எதிர்க் கட்சித் தலைவரா இருந்த கருணாநிதி, ஜெயலலிதா என்ன பாதையில போனாங்களோ... அந்தப் பாதையில்தான் இவரும் போறார். இவாள்லாம் எதிர்க் கட்சித் தலைவரா இருக்குறப்போ, சட்டசபைக்குக்கூட ஒழுங்காப் போறது இல்லை. சட்டசபைக்கு உண்டான மரியாதையே இவாளுக்குப் புரியறதில்லை. ஏன்னா, மூணு பேரும் சினிமா ஸ்டார்ஸ். இவாகிட்ட இதுக்கு மேல அரசியல் டிசிப்ளினை எதிர்பார்க்க முடியாது. சட்டசபைக்கு இவா போறாளா... இல்லையானு மக்களும் கவலைப்படுறது இல்லை.

வருஷம் முழுக்க எல்லோரும் எல்லாரையும் திட்டிக் குமிச்சுண்டே இருக்கா. ஆனா, தேர்தல்னு வர்றப்போ ஜனங்க அவாளுக்குத் தான் ஓட்டுப் போடுறா. நீங்க வேணா எழுதி வெச்சுக்கோங்க... எப்படி எதிர்க் கட்சித் தலைவரா விஜயகாந்த் அவா மாதிரியே டிராவல் பண்றாளோ... ஒருவேளை சி.எம். ஆனா,

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

அப்பவும் அவா மாதிரியேதான் ஆட்சியும் பண்ணுவா... வேற சாய்ஸ் தேடுங்கோ.''    

ஆ.சங்கரி, சென்னை.

 ''உங்கள் கட்சியின் கொள்கைதான் என்ன? அப்படி எதுவும் இருந்தால் அதைச் செயல்படுத்த ஏதேனும் முயற்சி எடுத்திருக்கிறீர்களா?''

''அரசியல்ல எங்கே ஊழல் நடந்தாலும் நான் தட்டிக்கேட்பேன். இதுதான் எங்க கொள்கை. அரசியல்ல ஏதாவது நல்லது நடக்கணும்னா, என்கிட்ட வர்றா. 'நீங்க எம்.எல்.ஏ-வும் இல்லே... எம்.பி-யும்இல்லே. ஆனா, அரசியல்ல நீங்க சொல்றதுலாம் நடக்குதே’னு என்கிட்டயே ஆச்சர்யமாக் கேப்பா. அதுதான் சுவாமி!''

கணேசன், அழிவிடைதாங்கி.

 ''எல்லாரைப் பத்தியும் குத்தம் சொல்ல ஆதாரம் திரட்டச் செலவழிக்கிற நேரத்தை, தமிழ்நாட்டில் உங்கள் கட்சி யைப் பலப்படுத்த செலவழிக்கலாமே?''  

''நீங்களே இவ்ளோ யோசிச்சா, எனக்கு அந்த நெனைப்பு இல்லாம இருக்குமா? ஆனா, ஒரு உண்மையை நீங்க புரிஞ்சுக் கணும். அ.தி.மு.க., தி.மு.க., ரெண்டு பேருமே நாம ஆட்சிக்கு வர்றது அவாளுக் குப் பெரிய ஆபத்துனு நினைக்கிறா. ஏன்னா, நாங்க வந்தா நிறைய நல்ல திட்டங்கள் வரும். அப்புறம் நாளப்பின்ன அவா ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லாமப் போயிடும். வேஷ்டி கலரை மட்டும் மாத்திக்கிட்டு இங்கேயும் அங்கேயும் மாறி மாறி சேஃப் கேம் ஆட முடியாமப் போயிடுமேனு அவா பயப்படுறா!

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

அந்தப் பயத்துல நம்மளை டார்க்கெட் பண்ணி டேமேஜ் பண்றா. சரி... அதைத் தாண்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல நம்ம பண்ண சாதனைகளைச் சொல்லி எல்லாத் தொகுதியிலயும் நாம வேட்பாளரை நிறுத் தினா, மெஜாரிட்டியில் ஜெயிக்கலாம். ஆனா, அதை விளம்பரப்படுத்த ஏராளமாப் பணம் செலவாகும். அது நம்மகிட்ட இல்லையே? ஓட்டு போடுற மக்களும் பணத்தை வாங்கித்தானே பழக்கப்பட்டு இருக்கா? அப்புறம் நம்ம மாதிரி நல்ல கட்சிக்காரங்க ஆட்சிக்கு எப்படி வர முடியும்? அதுக்கும் ஒரு காலம் வரும். அப்போ அடிக்கற அலையில நமக்குத்தான் ஜெயம்!''

எம்.சுகுமாரன், கோயம்புத்தூர்.

 ''நீங்க ஏன் இந்திய ஜனாதிபதிபதவிக் குப் போட்டியிடக் கூடாது?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''அதெல்லாம் போட்டி போட்டுப் பிடிக்கிற பதவியா என்ன? அவாளே வந்து என்கிட்டே கேட்கணும். 2007-ல நான் ஹார்வர்ட் யூனிவர்சிட்டியில ரொம்ப பிஸியா இருந்தேன். அப்போ, இங்கே மூன்றாவது அணி இருந் துச்சு. சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங், ஜெய லலிதா... இவாள்லாம் அதுல இருந்தாங்க. ஜெயலலிதா என்னை போன்ல கூப்பிட்டு, அந்த அணி சார்பா போட்டியிடணும்னு கேட்டா. 'இங்கே கான்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கேன். அதை கேன்சல் பண்ணிட்டு வந்தா தப்பா நினைப்பா. ஸாரி’னு சொல்லிட் டேன். அப்ப வந்த வாய்ப்பு முடிஞ்சுபோச்சு.

இப்போ ஜனாதிபதி கேண்டிடேட்டா நிக்கச் சொல்லி என்னை யாரும் கேட்கலை. ஆனா, இவாள்லாம் ஏன் ஜனாதிபதியை செலெக்ட் பண்ண இவ்வளவு அக்கப்போர் பண்றானு புரியலை. 'தனக்கு ரப்பர் ஸ்டாம்பா இவாதான் இருக்கணும்’னு சோனியா கணக் குப் போடுறா. பிரணாப் வட நாட்டுக்காரர் - பிராமணர். அப்துல் கலாம் தமிழ்நாட்டுக்காரர் - முஸ்லிம். இவர்தானே திராவிடர். இவருக்குத் தானே கருணாநிதி ஓட் பண்ணணும்? ஆனா, ஆதரவு தர மாட்டாராம். தேவை இல்லாம கலகம் பண்றார்.

என்னையும் ஜெயலலிதாவையும் 'பாப்பான்’னு கமென்ட் பண்றா கருணாநிதி. ஆனா, அவரு திராவிடரை சப்போர்ட் பண்ணலை. திராவிடம் பேசுற கருணாநிதி பிரணாப்பை ஆதரிக்கிறா ராம். எல்லாரும் கூட்டணி போட்டுக் காமெடி பண்றா!''

டி.ராமகிருஷ்ணன், பம்மல்-75

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

''அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோர் ஊழலுக்கு எதிராகப் போராடுவதைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தானே செயல்படுகிறார்கள்?''

''ஆட்சியில் இருக்கிறவங்களுக்குத்தானே ஊழல் செய்யும் வாய்ப்புகள் அதிகம். அதான், ஊழல் செய்யும் காங்கிரஸ்காரங்களை ஹஜாரேவும் ராம்தேவும் குத்தம் சொல்றா. 15 கேபினட் மினிஸ்டர்ஸ் மேல குத்தம் சொல்லியிருக்கும் ஹஜாரே, சோனியாவை ஏன் அந்த லிஸ்ட்ல சேர்க்கலைனு  எனக்குப் புரியலை. அதுவும் நேஷனல் அட்வைஸரி கவுன்சில் தலைவரும் சோனியாதான். கேபினட் மந்திரிக்கு ஈக்குவலான அந்த போஸ்ட்ல இருக்குற சோனியாவோட கவனத்துக்குப் போகாம, கவர்மென்ட்ல ஒரு விஷயமும் நடக்காது.

நக்சலைட்போலச் செயல்படும் நபர்கள் கிட்டே இருந்து விலகி, என்னுடனும் ராம்தேவுடனும் இணைந்து ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஜாரே போராடணும். ஊழல் மினிஸ்டர்ஸ் மேல போலீஸ் எஃப்.ஐ.ஆர். போடுற வரை ஹஜாரே டீம் போராடணும். அதுக்கு என்கிட்ட நிறைய ஐடியாஸ் இருக்கு!''

சு.ராமஜெயம், ஆரணி.

 ''ஜெயலலிதாவின் ஒராண்டு கால ஆட்சியின் நிறை குறைகளை உங்கள் பாணியில் விமர்சியுங்களேன்?''

''நான் சொல்றதைக் கேட்டு அவா தப்பைத் திருத்திக்கவா போறா! ஆனா, என்னதான் சொன்னாலும் ஜெயலலிதா ஒரு தனி மனுஷியாத்தான் தப்பு பண்ணுவா. ஆனா, கருணாநிதி ஒரு கட்சி வெச்சு அராஜகம் பண்ணிண்டு இருக்கா. அது அவரைச் சுத்தி இருக்குறவா ரத்தத்துலயும் ஊறி இருக்கு. என் பெர்சனல் ஓப்பீனியன் என்னன்னா, ஜெயலலிதாகிட்ட திறமையும், அறிவும் நிறைய இருக்கு. ஆனா, அது முழுக்க மக்கள் நலனுக்காகப் பயன்படுறது இல்லை. அது போக, இந்த ஒரு வருஷத்தை வெச்சு ஜெயலலிதா ஆட்சியின் ப்ளஸ் மைனஸை நான் சொல்ல முடியாது. அஞ்சு வருஷம் போகட்டும். அப்புறமா டீடெய்லா விமர்சிக்கிறேன்!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

 ''அடுத்த டீ பார்ட்டி எப்போ? எங்கே? எதற்கு?''

 ''உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையோ படங்களையோ பகிர்ந்து கொள்வதே இல்லையே நீங்கள்... ஏதேனும் முன்னெச்சரிக்கையா?''

''சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் விவகாரத் தால் டெல்லியில் தமிழ் அரசியல்வாதிகள் மீது என்ன விதமான பார்வை இருக் கிறது?''

நிறையப் பேசலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism