Published:Updated:

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

பிரீமியம் ஸ்டோரி

ப.முரளி, திருச்சி.

 ''நமீதா, பவர் ஸ்டார் சீனிவாசன், மதுரை ஆதீனம், ரஞ்சிதா... இவர்கள் எல்லாம் யார் என்று தெரியுமா?''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி
##~##

 ''மதுரை ஆதீனம் தெரியும். விடுதலைப் புலிகளுக்காகப் பேசுவார். மத்தவா எல்லாம் யாருன்னு எனக்குத் தெரியலை.''

எம்.வரதன், தெள்ளூர்.

 ''ஊரில் எல்லா அரசியல்வாதிகளும் கறுப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறீர்களே... உங்கள் சொத்து விவரம் என்ன?''

''இதை நான் உங்ககிட்ட ஏன் சொல்லணும்? நீங்க என்ன இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் ஆபீஸரா? தேர்தல் வர்றப்போ, என் பிராப்பர்ட்டி டீடெய்ல்ஸ் சொல்லுவேன்.''

சி.பார்த்திபன், ராஜபாளையம்.

 ''உங்களுக்கு ஒரு நாள் பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?''

 ''ஒரே நாள்ல ஒண்ணும் பண்ண முடியாது. அதனால இந்த ஆஃபரை நான் ரிஜெக்ட் பண்றேன்.''

தா.சங்கர், மதுரை.

'' 'அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் புரொஃபசர்' என்பது உங்கள் அடையாளங்களுள் ஒன்று. அந்த அனுபவத்தைக் கொஞ்சம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே?''

 ''ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் ஏழு வருஷம் எகனாமிக்ஸ் புரொஃபசரா வேலை பார்த்திருக்கேன். அப்புறம் சம்மர் கோர்ஸ் நடக்கிறப்ப, என்னை க்ளாஸ் எடுக்கக் கூப்பிடுவா. போவேன். கடந்த பத்து வருஷமா அங்கே விசிட்டிங் புரொஃபசரா இருந்தேன். அதுல வர்ற சம்பளத்தைவெச்சு வருஷம் முழுக்க எனக்கான எக்ஸ்பென்சஸைச் சமாளிப்பேன். இந்த வருஷம் அவா என்னைக் கூப்பிடலை. போன வருஷம் அங்கே இருந்தப்ப, நான் எழுதிய ஒரு ரைட்-அப் இந்தியாவில் பப்ளிஷ் ஆச்சு. சில வேலை வெட்டி இல்லாதவா 'சாமி, மத உணர்வைத் தூண்டுறார்'னு அதை இஷ்யூ ஆக்குனாங்க. அதை ஏதோ பெரிய க்ரைம் கணக்கா யுனிவர்சிட்டிக்கு யாரோ ஃபார்வர்ட் பண்ணிட்டா. அதனாலயோ என்னவோ அவங்க என்னைக் கூப்பிடலை. நானும் போகலை!''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

மு.இளவரசு, காஞ்சிபுரம்.

 ''தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களே முக்கியத்துவம் பெறுகிறார்களே? இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

 ''நான் என்னத்த நினைக்கிறது? பப்ளிக் என்ன நினைக்கிறாங்கங்கிறதுதான் முக்கியம். ஆனா, அவாள்லாம் இதைப் பத்தி வொர்ரி பண்ணிக்கிறதே இல்லைபோல. நன்னா நடிக்கிறவா, பேச மட்டுமே செய்றவாளால எந்தப் பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு காண முடியாது. எதையும் தள்ளிப்போட்டுக்கிட்டே போவா. அதான் அவாளுக்குத் தெரிஞ்ச டெக்னிக். மக்கள் அதை அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும்.

பெரியாறு டேம் நீர்மட்டத்தை உயர்த்தணும்னு நான்தான் கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச் சேன். இங்கே இருக்கிறவா அதுவரை என்ன பண்ணிட்டு இருந்தா? ஒண்ணுமே பண்ணலையே. நான் கோர்ட்டுல ஆர்டர் வாங்கின அப்புறம், இவா எல்லாம் அதுக்குச் சொந்தம் கொண்டாடி சண்டை போட்டா. அவாளால அதுதான் முடியும். அதான் சொல்றேன்... சினிமா வேற... நிஜம் வேற.''

ஆர்.கே.பாண்டியன், பல்லாவரம்.

''பாகிஸ்தானைவிட சீனாதானே நமக்கு மிரட்டல் எதிரி?''

 ''நீங்க அப்படிப் பார்க்கிறேள்... என் பாயின்ட் ஆஃப் வியூ என்ன தெரியுமா? சீனாவும் இந்தியாவும் கை கோத்துண்டா, அந்த காம்பினேஷன்தான் உலகின் சூப்பர் பவர். அந்த அளவுக்கு அத்தனை டிபார்ட்மென்ட்லயும் ரெண்டு கன்ட்ரியும் டெவலப் ஆகியிருக்கு. சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் - மானசரோவர் சீனா பார்டரில்தான் இருக்கு. அங்கே இந்தியன்ஸ் போய்ட்டு வர நான்தான் சீனா கவர் மென்ட்கிட்ட பேசி அனுமதி வாங்கித் தந்தேன்.''

ம.சம்பத், அறந்தாங்கி.

 ''மோடி, ராகுல் காந்தி... இருவரில் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் யார்? இதுவரை இருந்த பிரதமர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?''

 ''இந்தியாவின் பிரதமரை சும்மா ஒரு போஸ்ட் கார்டு கேள்வியில ஃபிக்ஸ் பண்ண முடியுமா? 2004-ல மன்மோகன் சிங்தான் பிரதமர்னு கடைசி நிமிஷம் வரை அவருக்கே தெரியாதே?

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

இப்படித்தானே நரசிம்ம ராவ், தேவ கவுடா, குஜ்ரால் எல்லாரும் சர்ப்ரைஸா பி.எம். ஆனா. அதுக்கு முன்னாடி அவா யாரு, பேரு என்னன்னு யாருக்குமே தெரியாதே? இவா எல்லாரோடயும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் பழக்கம் உண்டுதான். நரசிம்ம ராவ் பீரியட்லதான் பெரிய எகனாமிக் பூம் வந்தது. சந்திரசேகர் எக்ஸ்பிரஸ் டெசிஷன்ஸ் எடுப்பார். ராஜீவ் காந்திக்குத் தேச பக்தி உண்டு. ஆனா, அவரோட மனைவி சோனியா காந்தியின் பண ஆசை அவரை மாத்திடுச்சு. எனக்குப் பிடிக்காத ரெண்டு பி.எம். நேருவும் இந்திராவும். அவா அவா ஃபேமிலி, அவாளோட இமேஜ்தான் முக்கியம்னு செயல் பட்டா.''

மு.ஜோதி, வந்தவாசி.

''அடிக்கடி 'ஆதாரம் இருக்கு... ஆதாரம் இருக்கு'னு சொல்றீங்களே... எங்கே ஏதாச்சும் ஒரு சம்பவத்துக்கு ஆதாரம் சொல்லுங்க?''

 ''இது ஒரு முட்டாள்தனமான கேள்வி.

எந்தச் சம்பவமா இருந்தாலும் அது சம்பந்தமான ஆதாரத்தை முதல்ல கோர்ட்லதான் கொடுக்கணும். உங்ககிட்ட எதுக்குத் தரணும்? நான் அடிக்கடி ஆதாரம் இருக்குனு சொல்றதை, சிலர் சும்மானாச்சுக்கும் சொல்றதா நினைக்கிறா. சென்ட்ரல் மினிஸ்டரா இருந்த எனக்கு இப்பவும் டெல்லியில் பலர் ஃப்ரெண்ட்ஸா இருக்கா. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி ஆளுங்க, மீடியானு தினமும் எத்தனையோ பேரைச் சந்திக்கிறேன். எனக்குப் பல சேனல்கள்ல ஆதாரங்கள் கிடைக்கும். அதையெல்லாம் நான் கோர்ட்லதான் சப்மிட் பண்ணுவேன். ஸ்பெக்ட்ரம் ஊழல்ல நான் ஆதாரம் கொடுக் காமலா, சம்பந்தப்பட்டவாளைப் பிடிச்சு உள்ளே போட்டா?''  

அன்பழகன், செங்காடு.

 ''நில அபகரிப்பு, மோசடி வழக்கில் சிக்கிய தி.மு.க. பிரமுகர்களை ஜெயலலிதா அரசு சிறையில் அடைத்தது. அவர்கள் மீது சட்டப்படியாகக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்தியதைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?''  

 ''ஹா... ஹா..! அதுல நினைக்க என்ன இருக்கு? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்துல சிக்கி ஆசியாவின் மிகப் பெரிய திகார் ஜெயிலில் இருந்திருக்காங்க ஆ.ராசாவும் கனிமொழியும். அவா ரெண்டு பேருக்கும் அங்கே கிடைச்ச ஜெயில் அனுபவங்களை தி.மு.க. மெம்பர்ஸ் எல்லாரும் அட்லீஸ்ட்... தமிழ்நாட்லயாவது அனுபவிக்கட்டுமேனு கருணாநிதி நினைச்சார்போல... மத்தபடி அந்தப் போராட்டம்லாம் சும்மா பம்மாத்து.''

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி

ராதாகிருஷ்ணன், கொற்கை.

 ''சுவாமி செய்தால் தப்பில்லை. கருணாநிதி செய்தால் தப்பு... இதுதானே உங்கள் தியரி. திராவிடப் பாரம்பரியம் பேசும் கருணாநிதி, எப்படி பிராமணரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறீர்களே... இந்துத்வா கொள்கைகளுக்காகக் குரல் கொடுக்கும் நீங்கள் மட்டும் கிறிஸ்துவரான பி.ஏ. சங்மாவை எப்படி ஆதரிக்கலாம்? அவரை ஜெயிக்கவைக்க தீவிரமாகக் களம் இறங்கி கேன்வாஸ் செய்கிறீர்களே... தங்கள் முயற்சி பலிக்குமா?''

 ''இப்படி விதண்டாவாதமாப் பேசினா என்ன பண்றது?  பிரசிடென்ட் எலெக்ஷன்ல இன்னும் க்ளைமாக்ஸ் வரலியே? அதுக்குள்ள ஏன் பரபரக்குறேள்? கடைசி நிமிஷத்துலகூட அதிசயம் நடக்கலாம். கருணாநிதியைப் பத்தி நான் சொன்னதை நீங்க உங்க வசதிக் குப் புரட்டிப் பேசாதீங்க. இந்து பாரம்பர்யத் தின் மீது மதிப்பும் மரியாதையும் வெச்சிருக் கிறவா எந்த மதத்தைச் சேர்ந்தவாளா இருந்தாலும், அவாளுக்கு என் ஆதரவு உண்டு. அப்படிப் பாத்தா பி.ஏ.சங்மா கிறிஸ்துவரா இருந்தாலும், இந்து மதக் கலாசாரத் தின் மீது மிகுந்த அக்கறை உள்ளவா. அவரைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் நான் அவரை ஆதரிக்கிறேன்.''

சு.அருளாளன், ஆரணி.

 ''பல வருடங்களுக்கு முன்பு, ஈழத் தமிழர்களுக்காக மதுரையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். இப்போது வரும் ஆகஸ்டில் கருணாநிதி நடத்த இருக்கும் டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் போவீர்களா?''

 ''இப்போ நான் உங்களுக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்குறேன்... அதைச் செய்யுங்கோ. ஒரு பேப்பர், பேனா எடுத்துட்டு, தமிழ்நாட்டின் முக்கிய விஷயங்களை வரிசையாப் பட்டியல் போடுங்கோ. கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது அந்த விவகாரங் களைப் பத்தி என்ன பேசினார்? இப்போ அவர் ஆட்சியில் இல்லாதப்போ என்ன பேசுறார்... இதையெல்லாம் மேட்ச் பண்ணிப் பாருங்கோ. எப்படிலாம் அவர் பல்டி அடிச்சிருப்பார்னு தெரியும். எவ்வளவு தூரம் குழப்பமாகவும் முரண்பாடாகவும் பேசக்கூடியவர் கருணாநிதினு அப்போ உங்களுக்கு பளிச்னு புரியும். அந்தப் பட்டியல்ல இலங்கைப் பிரச்னையும் உண்டு. இப்போ நீங்களே சொல்லுங்கோ... கருணாநிதியை எப்படி நம்புறது?''

அ.பாஸ்கரன், மதுரவாயல்.

 ''எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த லில் நீங்கள் தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாமே?''

 ''இங்கே நிக்கப்போறேன்... அங்கே நிக்கப்போறேன்னு நான் கன்டிஷன் போட்டு கன்டெஸ்ட் பண்ண முடியாது. நான் எங்கே நிக்கணும்னு பப்ளிக்தான் டிசைட் பண்ணணும். 'காஸ்ட்லி அரசியல்... சினிமா கவர்ச்சி... இப்படிலாம் எந்தப் போலி வேஷமும் இல்லாத நேர்மையான, ஊழலைத் தட்டிக்கேட்கக்கூடிய ஒன் அண்ட் ஒன்லி பெர்சன் சுவாமிதான்'னு என்னை நம்புறவா அவங்களோட தொகுதிக்கு என்னை இன்வைட் பண்ணட்டும். சந்தேகம் இருந்தா என் பயோடேட்டாவை கூகுள்ல போய்ப் பார்த்துட்டு, சேட்டிஸ்ஃபைடா இருந்தா, 'எங்க தொகுதியில் வந்து நில்லுங்க... உங்களை ஜெயிக்கவைக்கிறோம்'னு சொன்னா, நான் 'டாண்'னு அங்கே வந்து நிப்பேன். என்ன ஓ.கே-வா?''  

விகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு