Published:Updated:

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

Published:Updated:

ஆர்.வேல்குமார், திருச்சி.

 ''முதல் பாட்டுக்கு நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு? இப்போது வாங்கும் தொகை எவ்வளவு?''

 ''முதல் பாட்டுக்கு வாங்கியது ரூபாய் எழுபத்தைந்து;

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று வாங்குவது ரூபாய் எழுபத்தைந்தாயிரம்!''

கே.வசந்தி, கானாடுகாத்தான்.

விகடன் மேடை - வாலி

 ''நாத்திகவாதியான வீரமணிக்கும் தங்களுக்கும் இடையிலான நட்பின் 'கெமிஸ்ட்ரி’ என்னவோ?''

 ''சேலம் செத்தபோது - ஈரோடு ஈமவனம் வரை சென்று - ஒரு குழந்தைபோல் குலுங்கிக் குலுங்கி அழுததைக் குவலயம் அறியும்.

ஈரோடு - குன்றக்குடிக்குச் சென்று அடியாரோடு அளவளாவியதை அகிலம் அறியும்.

கல்கி மகள் செல்வி ஆனந்தியின் கல்யாணம். தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முனைந்த தம்பதியை 'இருங்க! இருங்க!’ என்று தடுத்து நிறுத்தி - விபூதியும் குங்குமமும் கொண்டுவரச் சொல்லி -

மணமக்கள் நெற்றியில் இட்டது, தந்தை பெரியாரின் தகவல்லவா!

தந்தை பெரியாரின் தடக்கை விரல் பற்றி நடந்தவர் திரு.வீரமணி அவர்கள் -

என்னளவில் பெரியாரின் நகல். மாற்றுக் கருத்துடையோரையும் ஏற்றுக்கொள்ளும் மாண்புமிக்கவர்.

நான் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு 'அப்பல்லோ’வில் இருந்தபோது - எனக்கு நம்பிக்கை தந்து நல்வாழ்த்துச் சொன்னவர்.

நீங்களும் உங்கள் உள்ளக் குடுவையில், அம்பது விழுக்காடு அன்பு; மற்ற அம்பது விழுக்காடு பண்பு; பரிவு; பாசம் - எனப் போட்டு உலுக்குங்கள்.

எனக்கும் திரு.வீரமணிக்கும் உள்ள  கெமிஸ்ட்ரி உங்களிடமும் உண்டாகும். இதில் ஏதுமில்லை மிஸ்ட்ரி; இதுதான் காலம் பதிவு செய்யும் ஹிஸ்ட்ரி!''

சி.ராஜராஜன், கோவிலூர்.

''எம்.ஜி.ஆர்., சிவாஜி பற்றி எக்ஸ்க் ளூசிவ் தகவல் ஒன்று சொல்லுங்கள்?''

விகடன் மேடை - வாலி

 ''நல்ல வேளை; நீங்கள் ஒரு தகவலைத் தான் கேட்டிருக்கிறீர்கள். சொல்கிறேன்.

இரண்டு படங்கள். ஒன்று 'காத்தவராயன்; இன்னொன்று 'ராணி லலிதாங்கி’.

இவை இரண்டிலும் ஆரம்பத்தில் திரு.எம்.ஜி.ஆர்-தான் கதாநாயகனாக நடித் தார். பிறகு - அவ்விரு கதைகளும் தான் ஏற்றிருக்கும் பகுத்தறிவுக் கொள்கைக்கு ஏற்புடையவையல்லவென்று எம்.ஜி.ஆர். விலகிக்கொள்ள -

திரு.சிவாஜி அந்தப் படங்களில் நடித்தார்!

கோவிலூர் திரு.ராஜராஜனைக் குஷிப்படுத்துவதற்காக நானறிந்த பல EXCLUSIVE தகவல்களை - அற்றை நாள் நிகழ்வுகளை இற்றை நாளில் பிரசுரித்துப் பிரகடனப்படுத்தல் அறமாகாது!

மரித்தார்மாட்டு மரியாதை காட்டல் நம் மண்ணின் மரபு!''

வி.மாணிக்கம், புதுச்சேரி.

விகடன் மேடை - வாலி

''நீங்கள் ரசித்து வர்ணித்து எழுதிய ஹீரோயின் யார்? இப்போதைய ஹீரோயின்களில் யாரை வர்ணிக்கப் பிடிக்கும்?''

 ''ஒரு  POETக்கு அன்று PROVOKING  BEAUTY- ஆக இருந்தது திருமதி.சரோஜா தேவி; அவர்களுடைய FEATURE, WAS A FEAST FOR THE EYES! ! இன்று-YET TO COME!

அதுசரி -

கதாநாயகன்தான், கதாநாயகியின் அழகை ரசித்து வர்ணித்துப் பாடுகிறான். அவனிடத்தில் நானிருப்பதாக எண்ணிஎழுதுகிறேனே தவிர - இதில் என் விருப்பு வெறுப்புக்கு ஏது இடம்?

தழுவுவது கதாநாயகன்... நாணி, நழுவுவது கதாநாயகி! இதில் - நான் SILENT PARTNER! WHAT A CURSE?
 

அ.ஜெகதீஸ், சேலம்.

''பாடலாசிரியர் ஆகவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள்?''

 ''ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக ஆகியிருப்பேன்!''

ஆ.நந்தினி, திருநெல்வேலி.

''உங்களது தாடிக்குப் பின்னால் எதுவும் கதை இருக்கிறதா?''

 ''தாடி வளர்ப்பதும்; தண்ணி அடிப்பதும் - காதல் தோல்வியைச் சுட்டுகின்றன என்பதால் -

என் தாடிக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு சோகக் கதை இருக்கும் என எண்ணுகிறீர்கள் போலும்!

அப்படி எதுவுமில்லை, சகோதரி! தினம் மழித்தலில் உள்ள மெனக்கெடு தாளாமல் - ஒருமுறை அப்படியே பத்து நாள்கள் விட்டேன்.

மனைவி சொன்னாள்: 'உங்களுக்குத் தாடி நன்றாக இருக்கிறது... DON'T REMOVE IT’.

விகடன் மேடை - வாலி

மனைவி சொல்லே மந்திரமாக -மோவாயி லிருந்து இன்று பூப்பூவாய் வெள்ளைத் தாடி மார்பை நோக்கி இறங்குகிறது!

அவ்வப்போது TRIM செய்கிறேன், அடையார் PARKல்!

மு.கலைவாணன், திருவாரூர்.

''இன்றைய இளந்தலைமுறைக் கவிஞர்களின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த சில பாடல்களைப் பட்டியலிடுங்களேன்... அவை ஏன் பிடிக்கும் என்ற காரணங்களோடு?''

 ''நா.முத்துக்குமார்; பா.விஜய்; இவர் களது பாடல் எழுதும் புலமை நான் வியந்து பாராட்டத் தக்கதாயினும் - எந்தப் பாட்டை யும் நினைவில் வைக்க இசையமைப்பாளர் அனுமதிப்பதில்லை. பாட்டு வரிகள் கேட்டாலல்லவோ - நான் பட்டியலிட!''

ம.பிரதாப், பெங்களூரு.

 ''எத்தனையோ அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர் நீங்கள். ஒரு முறைகூட அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணம் வந்தது இல்லையா? அரசியலுக்கு வரச் சொல்லி எதுவும் அழைப்பு வந்ததா?''

 ''  'சிரித்து வாழ வேண்டும்’ பட பூஜை யில் - திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் என்னைத் தன் கட்சியில் சேரச் சொல்லி அன்போடு வேண்டினார்கள். நான் - பவ்வியமாக மறுத்து விட்டேன்.

விகடன் மேடை - வாலி

காரணம் கண்ணதாசன்தான்.

பம்பாயில் - அப்போது 'மும்பை’ என்று ஆகவில்லை. நானும், கண்ணதாசனும், திரு. எம்.எஸ்.வி-யும் ஒரு மீட்டிங்குக்காகச் சென்று - ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். கண்ணதாசன் SCOTCHஐ- ஓப்பன் செய்தார். மூவரும் மெல்ல மெல்ல அதில் மூழ்கிக் கொண்டிருந்தபோது -

கண்ணதாசன் எனக்கு மூன்று கட்டளை இட்டார்.

ஒன்று - ஒன்றிருக்க ஒன்றை நாடாதே!

இரண்டு - சொந்தப் படம் எடுக்காதே!

மூன்று-எந்த அரசியல் கட்சியிலும் சேராதே!

அன்று முதல், அடியேன் கவியரசர் கண்ணதாசன் கட்டளையை சிரமேற் கொண்டேன்!''

க.தேவி, சென்னை-37.

''எம்.ஜி.ஆரின் இன்னும் மாறாத இவ்வளவு புகழுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?''

 ''ஏழை எளியவர்களின் பங்காளனாக - மிகமிக வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் ஜனசமூகம் அவரை ஏற்றுக் கொண்டிருப்பதால்தான். அவர் - உண்மை யிலேயே உழைக்கும் வர்க்கத்தோடுதான் அதிகம் உறவாடினார். 'ஈ’ என்று வந்தோர்க் கெல்லாம் ஈந்தவர் அவர்; நான் நேரில் கண்டதைத்தான் இங்கு எழுதுகிறேன்!''

 - அடுத்த வாரம்...

 ''ஜெயலலிதாவுடனான நட்புபற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

''எம்.எஸ்.வி., இளையராஜா இருவரு டனும் நீங்கள் பணி புரிந்திருக்கிறீர்கள்... இருவருமே தமிழ் சினிமாவின் மேதைகள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இளையராஜாவுக்குக் கிடைத்த அங்கீகாரம், மரியாதை, விருது, கௌரவம்... எம்.எஸ்.வி -க்குக் கிடைக்கவில்லை என்பது என் தாழ்மையான கருத்து... சூழல் ஏன் இப்படி அமைந்தது?''

 '' 'தரை மேல் பிறக்க வைத்தான்’ பாடலை எழுதிய கைகள் 'சமைஞ்சது எப்படி’ எழுதுவது தகுமா?''

- இன்னும் சொல்வார்...

விகடன் மேடை - வாலி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism