Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் டீம்படம் : வீ.நாகமணி

விகடன் ஜன்னல்

விகடன் டீம்படம் : வீ.நாகமணி

Published:Updated:

''நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா?''

விகடன் ஜன்னல்

கப்பட்ட திருப்பங்களோடு நடந்து முடிந்திருக்கிறது டெசோ நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. 'மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு’ என்ற தமிழக அரசின் அஸ்திரத்தை எதிர்பார்த்த தி.மு.க. முகாம், 'மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது’ என்ற மத்திய அரசின் தடையைச் சத்தியமாக   எதிர்பார்க்கவில்லை. டி.ஆர்.பாலுவை வைத்துக்கொண்டு பிரதமர் மன்மோகனுக்கு போன் போடச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. 'மம்தாபோல ஆட்சிக்கு நாங்கள் இடையூறு செய்திருக்கிறோமா? இலங்கையில் நடந்த இறுதிப் போரில் காங்கிரஸ் விமர்சனத்துக்கு உள்ளானதைவிட, நாங்கள் உலகத் தமிழர்களிடம் காயம்பட்டதுதான் அதிகம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மாநாட்டையே நடத்துகிறோம். அதில் ஈழம் என்கிற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்றால், மாநாட்டில் வேறு என்னதான் பேச முடியும். தமிழ்நாட்டில் பிரதானக் கட்சியான நாங்கள் அரசியல் நடத்த வேண்டாமா?’ என்றெல்லாம் ஆவேசம் காட்டிய பிறகுதான், 'ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்’ என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈழ ஆதரவுக் கட்சிகளை ஒரு கூட்டணிக்குள் கொண்டுவர முனைந்த தி.மு.க-வின் சூட்சுமத்துக்குப் பணிந்து வந்தது விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே. ஆனால், இந்த மாநாட்டுக்காக காங்கிரஸைப் பகைத்துக்கொண்டதோடு, 'ஈழம் என்கிற வார்த்தைக்கே தடை’ என்று தமிழர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது தி.மு.க.

ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புங்க ஈமுவை!

விகடன் ஜன்னல்

கோடிக்கணக்கான பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு ஈமு கோழிப் பண்ணைகளின் முதலாளிகள் தலைமறைவாகிவிட, ஒருவேளை உணவுகூட இல்லாமல் இறந்து விழுகின்றன ஈமு கோழிகள். கோவை புறநகர், ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பண்ணைகளில் உயிரோடு இருக்கும் ஈமுக்கள் அழுகிப்போன இறந்த ஈமுக்களைத் தின்று தங்கள் மிச்ச நாட்களை நகர்த்திவருகின்றன. இந்த ஈமுக்களை 'காட்டில் விட்டுவிடலாம்; வன சரணாலயங்களில் விட்டுவிடலாம்’ என்று பலரும் பல்வேறு யோசனைகளைச் சொல்லிவருகிறார்கள். ஆனால், அது இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

''ஈமுக்களின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவைத் தவிர, உலகில் வேறு எங்கும் வசிக்காத அரிய வகை ஓரிட வாழ்விகள் ஈமுக்கள். பண்ணைகளில் 50 முதல் 70 வாரம் வரை வளரும் ஈமுக்கள் தினசரி இரண்டு வேளை தலா மூன்று கிலோ பச்சைப் புற்களை உண்கின்றன. ஓரிட வாழ்விகளான ஈமுக்கள் அதன் வாழ்விடமான ஆஸ்திரேலியக் காட்டில் இருந்த வரை பிரச்னை இல்லை. அதனை நாடு கடத்தி பண்ணையில் அடைத்த போதும் பிரச்னை இல்லை. ஆனால், இந்தியக் காடுகளில் ஈமுக்களைவிட்டால் காடுகளின் உயிர்ச் சூழல் பாழாகிவிடும். 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மீன் வளம் பெருகும் என்று சொல்லி, ஆப்பிரிக்க நாட்டின் கேட் ஃபிஷ் எனப்படும் நொய் மீனைத் தமிழகத் தின் ஆறுகளிலும் கண்மாய்களிலும் வளரவிட்டார்கள். ஆனால், அந்த மீன் இனம், நம் நீர் நிலைகளின் பாரம்பரிய மீன்களை எல்லாம் சாப்பிட்டு அழித்து விட்டது.

அதேபோல ஈமுக்களை நமது காடுகளில்விட்டால் அவற்றின் இனம் பெருகி, நம் வனங்களில் இருக்கும் சோலைக்காட்டுப் புற்கள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஈமுக்கள் தினமும் கபளீகரம் செய்யும் புற்களால், பூமிக்குள் மழைநீர் சேகரமாகாமல் ஓடி கடலில் கலந்து வீணாகும்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும். தவிர, நம் நாட்டுப் பறவைகளான மயில், காடை, கவுதாரி போன்ற இனங்களுக்கும் ஈமுவால் ஆபத்து நேரும். அதனால், இப்போது தமிழகத்தில் இருக்கும் சுமார் 10,000 ஈமுக்களை ஆஸ்திரேலிய வனச் சரணாலயங்களுக்கு அனுப்புவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்'' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

ஒரு வெள்ளிப் பதக்கமும் சில ஆலு பரோட்டாக்களும்!

விகடன் ஜன்னல்

லிம்பிக் துவக்கப் போட்டியில் இந்தியக் கொடி ஏந்திவந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார், மீண்டும் ஒரு முறை இந்தியாவைத் தலை நிமிரச் செய்து உள்ளார். 66 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்று 'இந்தியாவின் சிறந்த ஒலிம்பிக்’ என்ற அந்தஸ்தை எட்ட உதவியிருக்கிறார் சுஷில். கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷிலுக்கு இந்த முறை தங்கப் பதக்கம்தான் இலக்கு. ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உடலில் நீர்ச்சத்து சராசரியைவிடக் குறைந்துபோனது சுஷிலுக்கு. ஆனாலும், இறுதிப் போட்டியில் எதிராளிக்குக் கடும் போட்டியைக் கொடுத்தார் சுஷில். ''திறமையோடு அதிர்ஷ்டமும் கைகொடுத்த தாலேயே என்னால் தங்கம் வெல்ல முடிந்தது'' என்று இறுதிப் போட்டியில் சுஷில் குமாரைத் தோற்கடித்த ஜப்பான் வீரர் யனமிட்ஷ§ கூறியதே சுஷிலின் திறமைக்குச் சான்று. ''போதும்... என்னைச் சில நாட்கள் நிம்மதியாக இருக்கவிடுங்கள். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு நிமிடம்கூட ஓய்வின்றி இந்த வெற்றிக்காகப் பாடுபட்டு இருக்கிறேன். இன்றிரவு என் மனைவி எனக்கு வாங்கிக் கொடுக்கும் ஆலு பரோட்டோக்களைச் சாப்பிடுவது மட்டும்தான் இப்போதைய எனது அடுத்த இலக்கு'' என்று மீடியா மக்களிடம் கூறியிருக்கிறார் சுஷில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism