அக்டோபர் பிளான்!

மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருக்கும் இந்திய ஜூனியர் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் 18 வயது சென்னைப் பையன் பாபா அபராஜித். பாகிஸ்தானுக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி இந்திய ஜூனியர் அணியின் சாம்பியன் கனவைச் சாத்தியமாக்கியவர் அபராஜித், ப்ளஸ் டூ மாணவன்.

''பாகிஸ்தானுடனான கால் இறுதிப் போட்டியில் 136தான் டார்கெட். கால் இறுதிப் போட்டி அன்று ரம்ஜான் என்பதால் பாகிஸ்தான் அணியினர் வெற்றியைப் பறிக்க உயிரைக் கொடுத்து ஆடினார்கள். இதனால் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. ஒரே ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை களத்தில் நின்றால் வெற்றி நிச்சயம் என்பது கேம் பிளான். நான் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டேன்'' என்று சிரிக்கும் அபராஜித்துக்கு ப்ளஸ் டூ தேர்வில் விடுபட்டுப்போன மூன்று பரீட்சைகளை அக்டோபர் மாதம் க்ளியர் செய்வதுதான் அடுத்த இலக்கு!

''கோலிவுட்தான் பெஸ்ட்!''

இந்திய ஹீரோயின்களில் நீண்ட கால சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமாவில் நடித்து 26 வருடங்கள்... சினிமாவில் நடித்தே 15 வருடங்கள்... இப்போது 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ மூலம் பன்மொழி தரிசனம்!

''படத்தோட இங்கிலீஷ் தெரியாமத் திண்டாடும் சசி கேரக்டர் கிட்டத்தட்ட என் ரியல் கேரக்டர். தமிழ்ல இருந்து மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம்னு மொழி மாறி மாறி நடிச்சப்ப நிறைய அவஸ்தைப்பட்டு இருக்கேன்'' என்கிறார்.

''பாலிவுட்... கோலிவுட்... எது பெஸ்ட்?''

''பாலிவுட், ஹாலிவுட்லாம் தாண்டி தமிழ் சினிமா எங்கேயோ போயிட்டு இருக்கு. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஃப்ளேவர்ல பண்றாங்க!''

''இப்போ இருக்கிற ஹீரோக்களில் யார்கூட ஜோடியா நடிக்க ஆசை?''

''அஜித்!''

''இது ரீ மேக் சீஸன்... 'மூன்றாம் பிறை’யை ரீ மேக் பண்ணா உங்க கேரக்டருக்கு இப்போ யார் சாய்ஸ்?''

''ஏன் நானே நடிக்கக் கூடாதா?''

''காற்றில் விதைக்கிறார்!''
கே.பியின் ராஜா நெகிழ்ச்சி

'நீ தானே எங்கள் பொன்வசந்தம்’ என்று இளையராஜா புகழ் போற்றும் விழாவாக 'நீதானே என் பொன்வசந்தம்’ பாடல் வெளியீட்டு விழாவை அரங்கேற்றினார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். திரையுலக ஜாம்ப வான்கள் திரண்டு வந்து இளையராஜாவை வாழ்த்திய விழாவில் இருந்து சில துளிகள்...

'ஜனனி ஜனனி’ பாடிய இளையராஜா மகிழ்வும் நெகிழ்வுமாக பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ''பாவலர் வரதராஜன் ஆர்மோனியப் பெட்டியை எடுத்தாலே கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடிப்பார். அவர் இல்லாத சமயத்தில் கள்ளக்காதலனும் கள்ளக் காதலியும் சந்திச்சுக் கிற மாதிரிதான் ஆர்மோனியப் பெட்டியைத் தொடுவேன். இப்போ அது என்கூடவே இருக்கு. இந்த ஆர்மோனியப் பெட்டியை எங்களோடு தூக்கிச் சுமந்து வந்தவன் பாரதிராஜா. இப்போ அவன் எங்கேயோ, நான் எங்கேயோ இருக்கோம்'' என்று இளையராஜா சொல்ல, தன் உரையில் அதற்குப் பதில் அளித்தார் பாரதிராஜா.

''உங்களுக்கெல்லாம்தான் அவன் இளையராஜா. எனக்கு அவன் ராஜாதான். ஐ லவ் மை ராஜா. அவன் என்னைப் பத்திப் பேச மாட்டான். ஆனா, நான் நிறையப் பேசுவேன். 'டிக் டிக் டிக்’ படத்துல ஒரு ஸீனுக்கு எப்படி மியூஸிக் வேணும்னு சொல்லாம வீட்டுக்கு சாப்பிடப் போய்ட்டேன். அங்கே போனதும் 'கோரஸ் வேணுமே... அது வேணுமே.. இது வேணுமே’னு மனசு பதற்றமாகிருச்சு. வந்து பார்த்தா நான் மனசுல என்னலாம் நினைச்சேனோ, அப்படியே மியூஸிக் பண்ணியிருந்தான் ராஜா'' என்றெல்லாம் பாரதி ராஜா நெகிழ, இளையராஜாவின் கண்களில் நீர்.

''இதுவரைக்கும் 35 ஆண்டுகளில் 'மூடுபனி’ தொடங்கி 'அது ஒரு கனாக்காலம்’ வரை நான் இயக்கின 22 படங்களுக்கு ராஜாதான் இசை. இப்போது ராஜாவுக்கே தெரியாத ஒரு ரகசியம் சொல்கிறேன். அது நான் இயக்கவிருக்கும் அடுத்த படத்துக்கும் அவர்தான் இசை'' என்றார் பாலுமகேந்திரா.

'நீதானே என் பொன்வசந்தம்’ ஆல்பத்தை வெளியிட்டது 'புதுப்புது அர்த்தங்கள்’ படத்துக்குப் பிறகு இளையராஜா வுடன் இணைந்து பணிபுரியாத கே.பாலசந்தர். ''ராஜாவும் நானும் சேர்ந்து பாடறிந்த படிப்பறிந்த கதையை ஊரறியும். மற்றவர் எல்லாம் படைப்புகளைப் படைக்கிறார்கள். ஆனால், ராஜா தன் படைப்புகளைக் காற்றில் விதைக்கிறார்!'' என்று சுருக்கமாக, நெருக்கமாக ராஜா மீதான தன் அபிமானத்தை உணர்த்தினார் கே.பி.

''ஏழு பாடல்களை கம்போஸ் செய்து வைத்துக்கொண்டு அத்தனையும் ஒரே படத்தில் வந்தால் அந்த ஏழு டியூன்களைத் தருகிறேன் என்று சொல்லியிருந்தார் ராஜா. அந்த ஏழு டியூன்களுக்காகவே நான் கதையைத் தயாரித்து எடுத்த படம்தான் 'வைதேகி காத்திருந்தாள்’!'' என்று மலரும் நினைவில் ஆழ்ந்தார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.

''அதற்கு முன் சீனியர் இயக்குநர்கள் வேண்டாம் என்று நிராகரித்த டியூன்களைத்தான் நான் 'எஜமான்’ படத்துக்குப் பயன்படுத்தினேன். 'நிலவே முகம் காட்டு’, 'ஒரு நாளும் உனை மறவாத’ ஆகியவை அது'' என்று நினைவை மீட்டினார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.