''சிம்பு - பரத்... ரெண்டு பேருமே லவ் பண்றாங்க!''

'இங்கிட்டு சோபிக்கண்ணு... அங்கிட்டு’ என்று கடலை போட்டுத் திரிந்த 'சரோஜா’ வேகாவுக்கு, 'வானம்’... செகண்ட் இன்னிங்ஸ்!

'''பசங்க’ படத்துக்குப் பிறகு வந்த வாய்ப்புகள் எல் லாமே அதே மாதிரியே இருந்தன. அந்த கேரக்டர்கள்லாம் தவிர்த்த பிறகு கிடைச்சதுதான் 'வானம்’. ஒரே படத்தில் சிம்பு - பரத்கூட நடிக்கும் அனுபவம். மிஸ் பண்ண முடியுமா?''

''சிம்பு - பரத்... ரெண்டு பேர்ல யார் பெஸ்ட்?''

''படத்தில் எனக்கு ஜோடி பரத். சிம்புவோடு எனக்கு அதிக ஸீன்கள் இல்லை. ரெண்டு பேருமே பெஸ்ட்தான். ரெண்டு பேருமே டான்ஸ்ல பிச்சு உதர்றாங்க. டான்ஸ்ல மட்டும் அவங்ககூட தாக்குப் பிடிக்கவே முடியலை!''

அச்சமூட்டும் ஆன்மா!

திகில் படங்களால் பயமுறுத்தும் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட்டின் அடுத்த அவதாரம் 'ஹாண்டட்’ 3டி. முதலில் 2டி அனிமேஷனில் படம் பிடித்து, பிறகு 3டி அனிமேஷனுக்கு மாற்றும் பழக்கத்தை உடைத்தது 'அவதார்’. அதற்குப் பிறகு அந்த நேரடி 3டி முறையில் படம் பிடிக்கப்படும் படம் என்ற சுவாரஸ்யத்தோடு வருகிறது 'ஹாண்டட்’. இந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு தமிழில் 'ஆத்மா’ என்று பெயர். ''திகில், த்ரில் சேர்ந்து அனிமேஷன் மிரட்டல் நிச்சயம். இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மஹாக்ஷே சக்ரவர்த்தி ஹீரோ!'' என்கிறார் விக்ரம் பட் உற்சாகமாக!

'நாடக சூடாமணி’ டி.எஸ்.ஸ்ரீதர் (மெரீனா)

விகடன் உருவாக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் ஸ்ரீதர். ஆரம்ப கால விகடனில் இவர் வரைந்த அரசியல் நையாண்டிக் கேலிச் சித்திரங்கள் மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கின. இந்தியா முழுவதும் தல யாத்திரைப் பயணம் செய்து 'பரணீதரன்’ என்ற பெயரில் இவர் எழுதிய ஆன்மிகப் பயணக் கட்டு ரைகள் பிரசித்தம். இதைத் தவிர ஸ்ரீதருக்கு, 'நகைச்சுவை நாடகாசிரியர்’ என்ற மூன்றாவது முகமும் உண்டு. 'மெரீனா’ என்கிற பெயரில் விகடனில் வந்த இவரின் 'ஊர்வம்பு’, 'கால்கட்டு’, 'தனிக்குடித்தனம்’ போன்ற நாடகங்களைப் படித்துவிட்டுச் சிரிக்காத வாசகர்களே இல்லை. மூன்று முக மனிதரான ஸ்ரீதருக்கு, கடந்த வாரம் ஸ்ரீகிருஷ்ண கான சபா 'நாடக சூடாமணி’ விருது வழங்கிக் கௌரவித்தது.

''எஸ்.எஸ்.வாசன் என்னை உருவாக் கினார். அவருக்குப் பின்பு, அவர் மகன் எஸ்.பாலசுப்பிரமணியன் எனக்கு சுதந்திரமும் உற்சாகமும் கொடுத்தார். இப்போது அவருடைய பிள்ளை சீனிவாசனும் என் மீது அபிமானம்கொண்டு இருக்கிறார். இப்படி மூன்று தலைமுறையின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான பாக்கியம் பெற்றவன் நான்!'' என்ற உணர்வுபூர்வமாக ஏற்புரை நிகழ்த்தினார் ஸ்ரீதர் (எ) பரணீதரன் (எ) மெரீனா!

அம்மாவின் விராலிமலை தீர்க்கம்!

தேர்தல் முடிந்த பிறகு போடி தொகுதி யில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறு வது சிரமம் எனக் கணிப்பு வர, அது குறித்து விசாரித்தார் ஜெ. ''கடைசி ஒரு வார பிரசாரத்தில் தொகுதியை முழுக்க எனக்கு ஆதரவாக மாற்றி இருக்கிறேன் அம்மா. நிச்சயம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்!'' எனச் சொல்லி, போனிலேயே வாழ்த்துப் பெற் றார் ஓ.பி.எஸ். ஜெ. ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ரகுபதி தி.மு.க-வுக்குத் தாவி விராலிமலை தொகுதியில் போட்டியிட்டார். அவரை வீழ்த்தியே தீரவேண்டும் என்கிற நோக்கில் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் விஜய பாஸ்கரை விராலிமலை தொகுதிக்கு மாற்றினார் ஜெ. இந்த வியூகம் விராலிமலையில் மிகச் சரியாக எடுபட்டதாகத் தகவல் கிடைக்க, அம்மாவின் குஷிக்கு அளவே இல்லையாம்!

இதைப் படிக்காதீங்க!

வேட்பாளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக மன்னார்குடி தம்பிக்கும் கொங்கு மண்டலத்தின் இதிகாச வில்லனுக்கும் மோதல் தூள் பறக்கிறது. ''நான் தேர்வு செய்து கொடுத்த வேட்பாளர்கள்தான் அதிகமாக வெற்றி பெறுவார்கள். இது பொய்யானால், இனி கட்சி விஷயத்திலேயே தலையிட மாட்டேன்!'' என சபதம் ப்ள்ஸ் சத்தியம் செய்திருக்கிறார் தம்பியார்!

ஸ்மால் ப்ளஸ் பிக் ஸ்க்ரீன் நட்சத்திரங்கள் கருத்துக் கணிப்பும் ஆருடங்களும் தரும் நம்பிக்கையில் கார்டனை நோக்கிப் படை எடுத்தபடி இருக்கிறார்கள். ஆனால், அம்மாவோ... கொடநாடுக்கு எஸ்கேப்!

பம்பரமாக வலம் வந்து தலைவர் தொகுதி மக்களை ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தவர் மூத்த மகள். கடைசி நாள் பிரசாரத்துக்காக தொகுதிக்கு வந்த தலைவர், அக்கா வீட்டில் சில மணித் துளிகள் ஓய்வில் இருக்கும்போது பிரசாரம்பற்றி பேச்சு வந்திருக்கிறது. மூத்த மகளை தலைவர் பாராட்டுவார் என்று மகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருக்க, 'பாவம்மா அது... உடம்பை வருத்திக்கிட்டு தமிழ்நாடு பூரா சுத்தி வருது’ என்று எதிர் அணியைப் பற்றி தலைவர் புகழ, எரிச்சலின் உச்சத்துக்குப் போனாராம் மூத்த மகள்!