கா.வினோதினி, திண்டுக்கல்.

''ஜனாதிபதி பதவிக் காலத்தில் தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, நாடு முழுவதும் இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை விதைத்தேன்.

ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியைக் கிராமப்புறங்கள் அடைய வேண்டி, நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற 'புரா’ திட்டத்தைப் பிரபலப்படுத்தினேன்.

வளர்ச்சி அரசியல்தான் நாட்டுக்குத் தேவை என மக்களிடம் வலியுறுத்தினேன். அதன் பயன்பாடு இந்தியா முழுமைக்கும் இப்போது எதிரொலிக்கிறது.

இந்தியா வளர்ந்தால் என் தமிழ்நாடும் வளரும் அல்லவா!''

எஸ்.சிவகாமி, திருச்சி.

''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.

ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''

கு.அருள்மொழி, காங்கேயம்.

''நீங்கள் குழந்தைகளை அதிகம் நேசிப் பதன் காரணம் என்ன?''

''குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். எனவேதான், அவர்கள் மனதில் விதைக்கும் ஒவ்வொரு நற்செயலும், கண்டிப்பாகப் பிற்காலத்தில் நாட்டின் மேன்மைக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அது உத்வேகமாக இருக்கும். அதனால்தான் நான் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்!''

நா.கணேசலிங்கம், லிங்கேசன்புதூர்.

''அறிவியல் துறையில் உங்கள் முன்னோடி யாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?''

''அறிவியல் துறையில் நான் முன்னோடியாகக் கருதுபவர், ராக்கெட் சமன்பாட்டைக் கண்டு பிடித்த ரஷ்யாவின் கான்ஸ்ஸான்டின் டிஸ்யோல்ஸ்கி என்பவர். அவர்தான் ராக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் முன்னோடி. எனது குரு விக்ரம் சாராபாய் அவர்கள்தான் என் அறிவியல் முன்னோடி!''

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

எஸ்.வேணுகோபால், திருநெல்வேலி.

''ஜப்பானின் அணு உலைகள் வெடித்துச் சேதம் விளைவிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டோம். இந்நிலையில்... கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூட வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் - கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது - விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!

ஜப்பானில் மோசமான ஒரு சூழ்நிலையில், சுனாமியும் பூகம்பமும் ஒருங்கே நிகழ்த்திய சோகம் அது. அதை எதிர் பாராததால், மாற்று மின் சக்தியைச் சரியான நேரத்தில் கொடுக்கத் தவறியதால், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் குளிர்ச்சியாகாத காரணத்தால், விபத்து நேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தன்மையில் அவ்வப்போது மாற்றம் செய்யாத தின் விளைவே அந்த விபத்து.

எனவே, உலகின் அனைத்து அணு உலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, அவற்றுக்கு இப்படிப்பட்ட சிக்கலான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப அணு மின் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த உலக நாடு கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தனது அணு உலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறது. அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சி யில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை. அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!''

இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்.

'' 'ஃபுகுசிமா’ அனுபவத்தில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?''

''அதாவது, பாதுகாப்புக்குத் தேவையானவற்றை... வரக்கூடிய இயற்கைச் சீற்றங்களை அளவிட்டுப் பலப் படுத்த வேண்டும் என்பதுதான். உலகம் இப்போது விழித்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையில்

இறங்கி உள்ளது!''

- அடுத்த வாரம்...

''தனுஷ்கோடி அழிவுகள் பற்றிய உங்கள் நினைவுகள்...''

''அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்நாளில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே!''

'' 'உங்களால்தான் சோனியா காந்தி பிரதமர் ஆக முடியாமல் போய்விட்டது’ என்று ஓர் அரசியல் கிசுகிசு உண்டு. உண்மையா?''

- கலாம் பதில்கள் தொடர்கின்றன...