அம்மா ஆர்டர்!

எப்போதுமே, ''பத்திரிகைக்காரர்களிடம் இருந்து விலகியே இருங்கள்'' என்பதே கட்சி சீனியர்களுக்கு ஜெயலலிதா இட்டிருந்த கட்டளை. ஆனால், இப்போது இறங்கி வருகிறார். ''துறை விஷயங்களை விரல் நுனியில் வைத்திருங்கள். பத்திரிகையாளர்கள் கேட்டால் தெளிவாக விளக்கம் அளியுங்கள்'' என அமைச்சர்களுக்கு உத்தரவு இட்டுள்ளார் ஜெ.

நிராயுதபாணியான நீதி!

எகிறிக்கொண்டே போகும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தைக் கட்டுப்படுத்தக் கடைசி நம்பிக்கையாக இருந்த அமைப்பும் தகர்ந்தது. நீதிபதி ரவிராஜ பாண்டியன் திடீரெனத் தன் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்று கல்வித் துறையில் பரபரப்பு. ''ஞாயிற்றுக் கிழமை இரவு தாண்டி, திங்கள் அதிகாலை 3 மணி வரை, கட்டண நிர்ணய ஆணை யில் ஐயா கையெழுத்து போட்டார்'' என்று விவரித்த கல்வித் துறை அதிகாரிகள், திங்கள் கிழமை கமிட்டி அலுவலகத்தில் நீதிபதியின் பெயர்ப் பலகை காணாமல்போனதைப்பற்றி மட்டும் மூச்சு விடவில்லை!

ஜனநாயகத்தின் விலை!

மும்பையின் மூத்த பத்திரிகையாளர் ஜோதிர்மாயி டேவைப் பறிகொடுத்ததன் மூலம் ஜனநாயகத்துக்காகத் தன்னுடைய அடுத்த காவைக் கொடுத்து இருக்கிறது இந்தியப் பத்திரிகைத் துறை. மும்பை நிழல் உலக நடப்புகளை வெளிக்கொண்டு வந்ததில் முக்கியமானவர் ஜோதிர்மாயி டே. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்’, 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகைகளில் பணியாற்றிய காலம் தொட்டு, மும்பை தாதாக்கள் பற்றி பல திடுக்கிடும் செய்திகளைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருந்தவர். கொஞ்ச நாளாகவே 'ஆயில் மாஃபியா’க்களிடம் இருந்து தொடர் மிரட்டல்களைச் சந்தித்து வந்த அவர், மும்பையில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் நேர்மையான வாழ்வை வரித்துக்கொண்டதற்காக இப்படி உயிர் இழந்த இந்தியப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 27!

வீரபெருமாள் ரிடர்ன்ஸ்!

10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. வீரபெருமாளைத் தேடிப் பிடித்து மீண்டும் அவரை அந்தப் பதவியில் நியமித்து இருக்கிறார் ஜெயலலிதா. முதல்வரே தன்னை ஞாபகம் வைத்து அழைத்து மீண்டும் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்ததை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தபடி இருக்கிறார் வீரபெருமாள்!

கடித புர்ர்ட்சி!

மத்திய அமைச்சர்கள் அனைவரும் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அவர்களுடைய சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அமைச் சரவைச் செயலர் மூலம் கடிதம் அனுப்பச் சொல்லி இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அமைச்சர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் அமைச்சரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அமைச்சரோ, அவரைச் சார்ந்தவர் களோ, எங்கேனும் பணியாற்றுகிறார்களா?; வியாபாரம் எதிலும் ஈடுபட்டு இருக்கிறார்களா என்று தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டு இருக் கிறது. ஊடகங்கள் இதை ஒரு புரட்சிகரமான புதிய செய்திபோல வெளிப்படுத்தினாலும், ''காலாகாலமாக நடக்கிற கதைதான் இது. பிரதமர்கள் இப்படி கணக்குக் கேட்டு எழுதுவதும் அமைச்சர்கள் அதைக் குப்பைத்தொட்டியில் கடாசுவதும் சகஜம்தான்'' என்கின்றன பிரதமர் அலுவலக வட்டாரங்கள்!

இதைப் படிக்காதீங்க!

நீதியின் விருப்பம்!

சமீபத்திய நீதி - அதிகார மீட்டிங்கில் பல விஷயங்கள் பகிரப்பட்டனவாம். ''சமச்சீர் கல்வியைத் தங்களுக்குக் கிடைத்த வரமாக சாதாரண மக்கள் கொண்டாடுகிறார்கள். புத்தகங்கள் தயாரான நிலையில், அதை மறுப்பது சரியானது அல்ல. உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தாலும் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப் படுத்துங்கள்'' என்று அதிகாரத்துக்கு அறிவுரை வழங்கியதாம் நீதி. மையமாகத் தலையாட்டி அமைதி ஆனதாம் அதிகாரம்!

ராஜ்ராம்வேல்!

ஐ.பி.எஸ். பந்தாட்டத்தின் பின்னணியில் தோட்டத்தில் இருந்து செயல்படும் மூவர் அணியே காரணம் என்கிறார்கள். ஓய்வுபெற்ற 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்களைக்கொண்ட இந்த டீம்தான் உயர் அதிகாரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறதாம். இந்த மூவர் அணியின் பெயர்களைச் சுருக்கி 'ராஜ்ராம்வேல்’ என்று அறியப்படும் இவர்களுக்கு அதிகாரிகள் மத்தியில் இப்போது ஏகோபித்த செல்வாக்கு!

மாற்றுப் பட்டியலில் மாற்றம்!

மாற்றுப் பட்டியலில் கையெழுத்து இடுபவரே மாற்றலான விஷயம்தான் கடந்த வார ஹைலைட். தன் நெருங்கிய காக்கி தோழியிடம், ''உனக்குத் தெரியாததா? இன்னும் அவர் திருந்தவில்லை. மாற்றுப் பட்டியலில் கையெழுத்திடுவதே வேலையாகிவிட்டது. மற்ற எந்தப் பணிகளும் இன்றி இதுவே நிரந்தரமாகிவிடுமோனு பயமா இருக்கு'' என்று புலம்பியது காக்கி தோழியின் வழியாக அதிகாரத்தை அடைந்ததுதான் மாற்றமே மாற்றப்பட்டதற்கான காரணம் என்கிறார்கள்!

'காவலன்’ காமெடி!

கடந்த வாரம் சீனாவில் நடந்த திரைப்பட விழாவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற ஒரே திரைப்படம் 'காவலன்’. இந்தத் திரைப்பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஜய் பங்கேற்றார். படத்தைப் பார்த்த சீன ரசிகர்கள், வடிவேலு - விஜய் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார் களாம். விஜயையும் அவர்கள் 'ஆஹா... ஓஹோ...’ எனப் புகழ... அவரால் நம்ப முடியவில்லையாம். விஜய் தன் அடுத்தடுத்த படங்களை நேரடியாக சீனாவிலும் வெளியிடும் திட்டத்தோடுதான் சென்னை வருவார் என்கிறார்கள்!

ரெடி, ஒன்... டூ... த்ரி...

பரபரவென பாலிவுட் பறந்தவர், சென்னைக்கே திரும்பு கிறார். இதற்கு வசதியாக சென்னை வீடு புதுப்பிக்கப் படுகிறதாம். காரணம் கேட்டால் 'பார்ட்டிக்குக் கூப்பிடுறாங்க’ என்று வழக்கமான சால்ஜாப்புகளை அவிழ்த்துவிடுகிறார். ஆனால், உண்மையில் வரிசை கட்டிய ஃப்ளாப்புகள்தான் பின்னடைவுக்கான காரணம்!