Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

Published:Updated:

கருணாநிதி வெறும் கதாசிரியர்தான்!

விகடன் ஜன்னல்

''வீரமங்கை வேலு நாச்சியாருக்கு நிகரான வீரக் கொழுந்தாக விளங்குகிறார் ஜெயலலிதா!'' - வாய்கொள்ளாத பூரிப்பில் அம்மையாரைப் புகழ்ந்து தள்ளிவிட்டார் 'நாம் தமிழர்’ சீமான். இலங்கைக்கு எதிராக போர்க் குற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஜெயலலிதாவைப் பாராட்டி, சென்னை சைதாப்பேட்டை தேரடித் திடலில் பொதுக்கூட்டம். சத்யராஜ், மணிவண்ணன், 'தமிழ் முழக்கம்’ சாகுல்ஹமீது உள்ளிட்டோர் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள். இறுதியாக மைக் பிடித்த சீமான், ''எம்.ஜி.ஆர். ஒரு கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி, கருணாநிதி வெறும் கதாசிரியர்தான்! வஞ்சகம், பகை, திருப்பம் என படைப்பதே கருணாநிதியின் பழக்கமாகிவிட்டது. காங்கிரஸ் கூட்டணிக்கு இடம் கொடுக்காமல் ஜெயலலிதா போட்டியிட்டால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை வெல்லவைப்போம்!'' என்று சூளுரைத்தார் சீமான். பொதுக்கூட்டம் நடந்தபோது ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் இருந்தார். 'சீமானின் பாராட்டுக் கூட்டத்தை ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பலாமா?’ என ஜெயலலிதாவிடம் கேட்கப்பட, 'முழு நிகழ்ச்சியின் சி.டி. பதிவை அனுப்பிவையுங்கள்!’ எனச் சொன்னாராம். அடுத்த நாள் அம்மையாரிடம் இருந்து க்ரீன் சிக்னல் வர... பொதுக்கூட்ட நிகழ்ச்சியை ஜோராக ஒளிபரப்பியது ஜெயா டி.வி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அழகான டாக்குமென்டரி!

விகடன் ஜன்னல்

காமிக்ஸ் படிக்கும் சிறுசுகளை கர்னாடக சங்கீதத்தின் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் லக்ஷ்மி தேவ்நாத். தங்கள் இசையின் மூலம் உலகை ஆண்ட இசை ஆளுமைகளின் வாழ்க்கையைப் படக் கதைகளாக வெளியிட்டு, பள்ளிக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வதுதான் நோக்கம். Pictures of melody என்ற வரிசையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு வெளிவந்து இருக்கிறது. இசை ராணியின் குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்து, பாட்டுப் பயணத்து அத்தியாயங்களை 24 பக்கங்களில் படக் கதையாக எளிதில் படித்து மகிழும் வண்ணம் வெளியிட்டு இருக்கிறார்கள். கடைசிப் பக்கத்தில் 2004-ல் எம்.எஸ். மறைவதைக் குறிப்பிட்டுவிட்டு, க்ளோஸ் - அப் படத்தில் 'ஷ்ரேயோ பூயாம்...’ என்று அவர் பாடுவதைப் பார்க்கும்போது ஓர் அழகான டாக்குமென்டரி பார்த்த நிறைவு!

ஐ-போனில் ஜி.வி.பிரகாஷ்!

விகடன் ஜன்னல்

-போன் அப்ளிகேஷனில் இடம்பிடித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இந்தியாவிலேயே இசையமைப்பாளர்களில் முதன்முதலாக ஜி.வி.பிரகாஷ§க்குத்தான் இந்தப் பெருமை. ஜி.வி.பி-யின் ரசிகர்களின் முயற்சி இது. ஐ-போனில் ஜி.வி.பிரகாஷ் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தால், அவரைப்பற்றிய செய்திகள், இசையமைத்த பாடல்கள், இசையமைக்க இருக்கும் புதிய படங்கள், பாடல்கள் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் அனைத்தையும் அதில் படித்து, கண்டு ரசிக்கலாம்!

மர்மம் விலகாத புட்டபர்த்தி!

விகடன் ஜன்னல்

த்ய சாய்பாபா இறந்தபோதே, 'அவரது கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகிப்பது யார்?’ என்ற கேள்வி எழுந்தது. இப்போதோ இரண்டு மாதங்களாக மூடியேகிடந்த யஜூர் மந்திர் அறையைத் திறந்ததில் இன்னும் சிக்கல் அதிகரித்து இருக்கிறது. ஜூன் 15-ம் தேதி பௌர்ணமி தினத்தன்று, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட் நீதிபதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்ட அறையில்,

விகடன் ஜன்னல்

11.57 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி, தங்கக் காலணிகள் இருந்தனவாம். ஆனால், கோடிக்கணக்கான வெளிநாட்டு கரன்ஸிகள், வைரக் கற்கள், பிளாட்டினம், ஐம்பொன் சிலைகள், தங்கத்தினால் ஆன பொருட்கள், தந்தங்களும் இருந்தனவாம். ஆசிரம வட்டாரம் அதை மறைத்து விட்டதாக பிரசாந்தி நிலையத்தில் புலம்பல்கள் கேட்கின்றன. சாய் பாபா அறக்கட்டளைக்குச் சொந்த மான காரில் பெங்களூருக்கு

விகடன் ஜன்னல்

35 லட்சம் கடத்தப்பட்டபோது, ஹரிஸ் என்ற டிரைவர் சிக்கியுள்ளார். கடந்த நான்கு தினங்களில் புட்ட பர்த்தியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் சென்ற பேருந்துகளில் இருந்து லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வதந்திகள்!

இதைப் படிக்காதீங்க!

##~##

• நிழல் புள்ளி சிபாரிசு செய்த சிலருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கவில்லையாம். இதனால் கோபத்தில் இருந்தவர் வெளி மாநிலத்துக்குக் கிளம்பிப்போனார். இதற்கிடையில் மதிப்பான பதவியில் இருந்த உயரிய பெண்மணி சமீபத்தில் டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார். அவரும் நிழல் புள்ளியை நம்பி இருந்தவர்தானாம்!

• 'கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட டெண்டர்களுக்கான கமிஷனும் வேண்டும்’ என அதிகாரிகளிடம் கறார் வசூலுக்கு கட்டளை போட்டு இருக்கிறார் பவர்ஃபுல் பதவியில் இருக்கும் புதுமுக மாண்புமிகு! நட்புப் புள்ளிகள் நாசூக்காக எச்சரிக்க, 'கார்டன்ல இருந்துதான் வாங்கச் சொன்னாங்க!’ என முகத்தில் அடித்தாற்போல் சொன்னாராம்!

• பிரச்னைகளுடன் வரும் கலை உலக நண்பர்களைக் கண்டால், 'பஞ்சா யத்துக்கு எல்லாம் இங்க வராதீங்கப்பா. அதை எல்லாம் கடந்தாச்சு’ என்று கண் சிவக்கிறாராம் தலைவர்!

• ஒரே ஒரு பட ஹிட் மூலம் 10 லட்சம் சம்பளம் கேட்ட நடிகையிடம், டீலிங் பேசி, அவரின் சம்பளத்தை 40 லட்சத்துக்கு உயர்த்திய நடிகரின் மீது தயாரிப்புத் தரப்பு வருத்தத்தில் உள்ளதாம்!

• ஆழ்ந்த அமைதியைக் கண்டு அரண்டுகிடக்கிறாராம் முன்னாள் சினிமா தலைவர். கமிஷன், சேனல், தியேட்டர் விவகாரங்களை எப்போது தோண்டி எடுத்து தொல்லை தருவார்களோ என நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்!