Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் ஜன்னல்

விகடன் ஜன்னல்

விகடன் ஜன்னல்

Published:Updated:

கவுண்டரம்மா!

விகடன் ஜன்னல்

பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்திமலை செல்லும் வழியில் உள்ளது வல்லகொண்டபுரம். இது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்த ஊர். அவரின் அம்மா அன்னம் அந்தக் கிராமத்தில்தான் வசித்து வருகிறார். சமீபத்தில் 'வேலாயுதம்’ படப்பிடிப்புக்காக வல்லகொண்டபுரம் சென்ற விஜய், கவுண்டரின் தாயாரைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். ''வீட்ல பொஞ்சாதி புள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்களா? நீ நடிச்ச எல்லா படத்தையும் பாத்துட்டேன். நீயும் மணியும் ஒண்ணு ரெண்டு படத்துல சேர்ந்து நடிச்சதா எனக்கு ஞாபகம். அதுக்குப் பிறகு ஏன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலை?'' என்று கவுண்டரிடம் பேசுவதுபோலவே வெகுநேரம் விஜய், இயக்குநர் ராஜாவிடமும் பேசிக்கொண்டு இருந்தாராம் அன்னம் பாட்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய சாம்பியன்ஸ்!

விகடன் ஜன்னல்

ந்த ஆண்டு விம்பிள்டன் ரொம்பவே விசேஷம். காரணம், விம்பிள்டன் டென்னிஸுக்கு இந்த வருடம் வயது 125!

இந்த ஆண்டு ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும், பெண்கள் பிரிவில் க்விட்டோவாவும் முன்னாள்சாம்பியன் களை வீழ்த்திப் பட்டம் பெற்றிருக்கிறார்கள். மரியா ஷரபோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும்  க்விட்டோவா செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர். ஆறடி உயர க்விட்டோவாவுக்கு வயது வெறும் 21. இடது கை ஆட்டக்காரர். மார்ட்டினா நவரத்திலோவாவுக்குப் பிறகு இடது கை ஆட்டக்காரர் ஒருவர் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. ஆண்கள் பிரிவில் ஜோகோவிச், நடாலைத் தோற்கடித்து சாம்பியன் ஆகியிருக்கிறார்!

உருகி மருகிய கலைஞர்!

விகடன் ஜன்னல்

ஜினியில் தொடங்கி கருணாநிதியில் முடிந்து இருக்கிறது கலைஞர் டி.வி-யின் 'ரசிகன்’ நிகழ்ச்சி. இதற்கு இடையில் கருணாநிதியிடம் இருந்து 'ரசிகன்’ யூனிட்டுக்கு அழைப்பு. 'ரசிகன்’ இயக்குநர் மணிவண்ணனும் தயாரிப்பாளர் விஜயகுமாரும் கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்திக்க, வெகுநேரம் சிலாகித்துப் பேசி இருக்கிறார் கருணாநிதி. ''அய்யா, உங்ககிட்ட ஒரு பேட்டி வேணுமே'' என மணிவண்ணன் கேட்க, ''அதுக்கு என்ன இப்பவே கேளுங்க'' என்று பதில் சொல்லி இருக்கிறார் கருணாநிதி. பேட்டி முடிந்ததும் ''என் காலத்துக்கு அப்புறம் மக்கள் என்னை மறந்துடு வாங்களோனு மனசுக்குள்ள சின்ன சந்தேகம் இருந்துச்சு. உங்க நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்தச் சந்தேகம் பறந்துடுச்சு. ரொம்ப நன்றிப்பா!'' என நெக்குருகி இருக்கிறார் கருணாநிதி!

இப்படியும் ஒருத்தி!

மேற்கு வங்காளம் நாடியா மாவட்டத்தின் சிறு கிராமமான தண்டாலாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி மம்பி. அவளுடைய அப்பா மிர்துள் சர்க்காருக்குக் கண் குறைபாடு. சகோதரன் மனோஜித்துக்குச் சிறுநீரகப் பிரச்னை. துயரம் பொறுக்க முடியாமல், தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தாள் மம்பி. 'நான் இறந்துவிட்டால், என் உறுப்புகளை தந்தைக்கும் சகோதரனுக்கும் கொடுத்துவிடுங்கள்!’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு பூச்சிக்கொல்லியைக் குடித்து விட்டாள். வயலுக்குச் சென்று தந்தையிடம், 'என் வாயில் யாரோ விஷத்தை ஊற்றிவிட்டார்கள்’ என்றாள்.  பதறி அடித்து மம்பியை மருத்துவமனைக்கு அள்ளிச் சென்றபோது, உயிர் பிரிந்து இருந்தது. அவளுடைய ஆசை நிறைவேறியதா? அவள் புதைக் கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர்தான் அந்தக் கடிதம் அவளது குடும்பத்தினரின் கைகளுக்கு அகப் பட்டு இருக்கிறது. மம்பியின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

கோல்டு லேடி!

விகடன் ஜன்னல்

ரத்குமாருடன் 'நேதாஜி’ படத்தில் நடித்த லிசா ரேவை ஞாபகம் இருக்கிறதா? கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத் தட்ட இரண்டு வருடங்களாக நோயோடு போராடியபடியே, மாடலிங், நடிப்பு எனத் தொடர் பரபரப்பிலேயே இருப்பவர். தற்போது டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். டிஸ்கவரி நிறுவனத்தின் மற்றொரு டி.வி. சேனல் ஆன 'டி.எல்.சி’-யில் 'ஓ... மை கோல்டு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். ''இந்தியா முழுக்க உள்ள ஆன்டிக் ஆபரணங்கள் பற்றிய தொகுப்புதான் இந்த நிகழ்ச்சி. இங்கே தங்கம் இல்லாமல் பெண்களுடைய மேக்கப் முழுமை பெறாது. சென்னையில் பூ விற்றுக்கொண்டே சைடு பிசினஸ் ஆக தங்கமும் விற்கும் பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இப்படி தங்கம் குறித்த அனைத்து சுவாரஸ்யங்களையும் இந்த நிகழ்ச்சியில் பா£க்கலாம்!'' என்கிறார் லிசா ரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism