Published:Updated:

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

##~##

வ.ராஜன், கன்னியாகுமரி.

'''இதை நாம பண்ணி இருக்கணும்’னு உங்களை நினைக்கவைத்த கேரக்டர் என்ன?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'' '16 வயதினிலே’ சப்பாணி!''

கு.கணேஷ், சென்னை-17.

 ''விக்ரமோட லைஃப் டைம் புராஜெக்ட் என்ன?''

''சினிமாவே என் லைஃப் டைம் புராஜெக்ட்தான் நண்பரே!  இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் ஒரு நடிகனாகப் பிறக்கத்தான் ஆசைப்படுகிறேன்!''

விகடன் மேடை - விக்ரம்

ம.பிரபாகரன், மயிலம்.

 ''இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களுக்கு சவாலான நடிகர் யார்? எப்படி?''

''இப்போ ரீசன்ட்டா ஒரு தமிழ்ப் படம் தியேட்டர்ல கலெக்ஷனும் கிளாப்ஸுமா கலந்துகட்டி அள்ளுதாமே... என்னமோ பேர் சொன்னாங் களே... ஆங்... 'தெய்வத் திருமகள்’! அதுல 'கிருஷ்ணா’ கேரக்டர் செஞ்சிருக்கிற அந்த நாலு எழுத்து நடிகர்தான் எப்பவும் எனக்குச் சவாலா இருக்கணும்னு ஆசைப்படுறேன்!''

பி.முத்து, மதுரை.

''யாருக்கு டப்பிங் கொடுத்தது உங்க மனசுக்கு நிறைவா இருந்தது?''

''நம் எல்லோருக்காகவும் குரல் கொடுத்த ஒருவருக்காக நான் குரல் கொடுத்தேன். அதை நினைக்குறப்ப மனசுக்குள் நிறைவு அல்ல... பெரிய பெருமிதம் வருது. ரிச்சர்ட் அட்டன் பரோவோட 'காந்தி’ படத்தில் காந்தியின் இளம் வயசுக் கதாபாத்திரத்துக்கு நான் குரல் மாத்தி டப்பிங் செய்தேன். என் கேரியர்ல மறக்கவே முடியாத முத்திரை அது!''

கே.ரவி, தஞ்சாவூர்.

 ''படம் இயக்கும் ஆசை உண்டா?''

''நம்புவீங்களா? போன வருஷம் வரைக்கும் அந்த விபரீத ஆசை எனக்குள்ளும் இருந்தது. ஆனா, ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு திரும்பிப் பார்த்தா, நிறைய நல்ல கதாசிரியர்கள், நல்ல இயக்குநர்கள் உருவாகி இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை. ஏகப்பட்ட வெரைட்டி. அவங்க ஒவ்வொருத்தர்கூடவும் படம் பண்ணணும், இன்னும் இன்னும் நிறைய நடிக்கணும்போல இருக்கு. ஸோ, இப்போதைக்கு 'இயக்கப்படுவதில்’தான் எனக்கு ஆசை!''

விகடன் மேடை - விக்ரம்

பி.கமலநாதன், மதுரை.

'' 'சேது’ என்று ஒரு படம் வரவில்லை என்றால்..?''

''நான் சாதுவாகவே இருந்து இருப்பேன்!''

மா.கதிரேசன், நீடாமங்கலம்.

'' 'சேது’, 'காசி’, 'தெய்வத் திருமகள்’ போன்ற கிளாஸிக் படங்கள்... 'தில்’ 'தூள்’, 'ஜெமினி’,  மாதிரியான கமர்ஷியல் படங்கள்... இதில் எதில் நடிக்க உங்களுக்கு விருப்பம் அதிகம்?''

''உங்களோட ரெண்டு கண்ணுல எந்தக் கண்ணு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுங்க... நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றேன்!''

ஆ.காசி, செய்யாறு.

''மலையாளப் படங்களில் நடித்த அனுபவம்பற்றி...''

''லைவ் சினிமானு கேள்விப்பட்டு இருப்பீங்க... மலையாள சினிமாக்களை 'லைவ் வாழ்க்கை’னு சொல்லலாம். அவ்வளவு யதார்த்தமான சினிமா மேக்கிங். ஒவ்வொரு ஃப்ரேமும் நிஜ வாழ்க்கைக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கும். 'மெத்தட் ஆக்டிங்’னு ஒரு விஷயத்தைப்பத்தி தெரியா தப்பவே, அங்கே மெத்தட் ஆக்டிங் பண்ணிட்டு இருந்தாங்க. நான் நடிப்புத் திறனைக் கத்துக் கிட்ட ஸ்கூல், மலையாள சினிமாதான். நல்ல ஸ்கூல்ல படிச்ச ஸ்டூடன்ட்... காலேஜ், யுனிவர் சிட்டினு எல்லா இடத்திலும் நல்ல பேர் வாங்குவான் இல்லையா? நான் ஒரு நல்ல ஸ்டூடன்ட்ன்னு நம்புறேன்!''  

வ.பிரகாஷ், ஆரணி.

''சினிமா தவிர, வேறு எதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்?''

''நான் ஒரு சினிமா பைத்தியம். அதைவிட்டால், போட்டோகிராஃபி. ஒண்ணு, கேமரா முன்னாடி நிப்பேன். இல்லேன்னா, கேமரா பின்னாடி நிப்பேன்!''

கி.மோகன், மேல்மருவத்தூர்.

 ''நீங்கள் ஊட்டி கான்வென்ட்டில் படிச்சீங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஸ்கூல்ல நீங்க எப்படி... முதல் பெஞ்ச்சா... கடைசி பெஞ்ச்சா?''

''ஊட்டி இல்லை... ஏற்காடு. நடு பெஞ்ச்சில் இருந்தும், பள்ளியில் (Science group) ஃபர்ஸ்ட் கிளாஸ். லயோலா காலேஜில் டிஸ்டிங்ஷன்!''

விகடன் மேடை - விக்ரம்

வி.ராமன், காஞ்சிபுரம்.

 '' 'பிதாமகன்’ படத்துக்குப் பிறகு பாலாவுடன் ஏற்பட்ட பிணக்கு சரியாகிவிட்டதா?''

''அப்படியா?

பின் குறிப்பு: பிணக்கு ஜிணக்குன்னு சொல்லி, எங்கள் நட்பைப் பின்னுக்கு அனுப்பிடாதீங்க!''

மா.சங்கர், வேலூர்.

விகடன் மேடை - விக்ரம்

 ''நீங்கள் தேசிய விருது வென்ற செய்தி கிடைத்த தருணம் குறித்து?''

'' 'சேது’வுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. என் டிரைவர் தொலைபேசி மூலம் 'பிதாமகன்’ படத்துக்கு விருது கிடைச்சிருக்கு’னு தகவல் சொல்லும்போது ஜிம்மில் இருந்தேன். 'யாருக்கு?’னு கேட்டேன். 'அண்ணா... உங்களுக்குத்தான்’னு சந்தோஷமா சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலை ஒரு நொடிக்கு!

இன்னும் அந்த மாதிரி நிறைய நொடிகளுக்காக நான் காத்திருக்கேன்!''  

வி.ராமஜெயம், மதுரை.

''உங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஸ்ரீதர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

'' 'Perfectionist’! ஷாட்ஸ் வைப்பதில் வல்லவர். நிறையப் பழைய ஷூட்டிங் சம்பவங்களைப்பற்றி சொல்லிச் சொல்லி ஆச்சர்யப்படுத்துவார்!''

- அடுத்த வாரம்...

 ''வயசுக்கு ஏற்ற மாதிரி நடிக்க விக்ரம் தயாரா?''

''ரஜினி-கமல், விஜய்-அஜீத், சிம்பு- தனுஷ், விக்ரம்-?''

 ''சேதுவுக்கு முன், படங்களே இல்லாமல் இருந்த காலகட்டத்தில் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?''

- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - விக்ரம்