Published:Updated:

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

Published:Updated:
##~##

மு.செந்தில்குமார், செய்யாறு.

 ''வயசுக்கு ஏற்ற மாதிரி நடிக்க விக்ரம் தயாரா?''

''வயசான பிறகு... அதைப்பத்தி யோசிக்கிறேன். ஓ.கே-வா!''

கி.மனோகரன், திண்டிவனம்.

 ''ரஜினி-கமல், விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ், விக்ரம்-?''

''விக்ரம் - கிருஷ்ணா!''

வி.பிரவீன், தூத்துக்குடி.

'''சேது’வுக்கு முன், படங்களே இல்லாமல் இருந்த காலகட்டத்தில் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?''

''கொஞ்சம் தமிழ், கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் டப்பிங்கும் செய்தேன்!''

விகடன் மேடை - விக்ரம்

செ.காந்தி, சென்னை-17.

 ''உங்களின் கனவு கேரக்டர் எது?''

''எனக்குக் கனவு கேரக்டர்னு ஒண்ணும் கிடையாது!

எல்லா கேரக்டர்களையும் செய்யணும். வித்தியாசமாக!

அப்புறம், 'பிதாமகன்’ ஒரு கற்பனைக் கதாபாத்திரம். சித்தன் நிஜ வாழ்க்கையில்  பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம்.  அதனை உருவாக்கி, உயிர் குடுத்தார் பாலா. ஒரு கற்பனைக் கதா பாத்திரம் யதார்த்தமாகி, தேசிய விருது வரை சென்றது.

இயக்குநர்கள் சிந்தனையில் பிறக்கும் சித்தன்போன்ற கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கிறேன்!''

எம்.ஜெரால்டு, சீர்காழி.

 ''உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? பிடித்த கடவுள் யார்?''

''பயங்கர நம்பிக்கை இருக்கு. ஆனால்,  அவருக்கு முகம் கிடையாது. அவர் ஒரு  supreme being. அவ்வளவுதான். கடவுள் நிச்சயமாக இருக்கிறார். ஆனால், அவருக்கு வெவ்வேறு முகங்கள் கொடுத்து, வெவ்வேறு மதங்கள்  படைச்சுட்டாங்க. சாதியம், தீண்டாமை, மத வெறி... முக்கியமாக தீவிரவாதம்னு எவ்வளவு நடக்குது. இன்றைக்கு உலகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை மத வெறியும், மதத்தின் பேரால் நடக்கும் தீவிரவாதச் செயல்களும்தான். மதம்தான் பூமியில் எல்லைக்கோடுகளை உருவாக்கி வெச்சு இருக்கு. எல்லை இல்லாத உலகம் என்னிக்குக் கிடைக்கும்கிறது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!''

மு.இளவரசு, காஞ்சிபுரம்.

''மறுபடியும் விக்ரம் - பாலா காம்பினேஷனைப் பார்க்க முடியுமா? அப்படி என்றால் எப்போது?''

''எனக்குச் சிறந்த இயக்குநர்களாகவே அமைஞ்சாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் விசேஷமானவங்க!

ஷங்கர் சாரை எடுத்துக்கிட்டா பிரமாண் டம், புதுப் புது தீம்!

விகடன் மேடை - விக்ரம்

மணி சார்னா, ஃபிலிம் மேக்கிங்!

தரணி சார்கிட்டதான் நான் கமர்ஷியல் மசாலா சினிமாவுக்கான மேஜிக்கையும் ஹீரோயிசத்தையும் கத்துக்கிட்டேன்!

ஹரிகிட்ட பயங்கர வேகமும் ப்ளானும், விறுவிறுப்பான ஸ்க்ரிப்ட்டும் இருக்கும்!

லிங்குகிட்ட ஆக்‌ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ் இப்படி... அப்புறம் பிரபு, பாலாஜி சக்திவேல், சரண்... இப்படி யாரை எடுத்துக்கிட்டாலும் அவங்கவங்களுக் குன்னு ஒரு சிறப்பு இருக்கும். எல்லோர் கூடவும் வேலை செய்ய எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆனா, பாலா எனக்கு ஸ்பெஷல். ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் ஒரே பட்டறையில் இருந்து வந்தவங்க. எங்க ரெண்டு பேருக்குமே அது முதல் படம் மாதிரி. ஒரு வெற்றிக்காகக் காத்திருந்தவங்க நாங்க. எனக்குள் தீப்பிழம்பு மாதிரி சினிமா மேல் இருந்த அளவு கடந்த நேசத்தை அவர் ஊட்டி வளர்த்தார். அவருக்குள் இருந்ததை நான் வளர்த்தேன். அவர்தான் எனக்குள் இருந்த நடிகனை விழித்துகொள்ளவைத்தார். வித்தியாசமாக இருக்கக் கற்றுத்தந்தார்.

அவரோட வேலை பார்க்கிறது திரும்பவும் ஸ்கூலுக்குப் போற மாதிரி. சந்தோஷமான பள்ளி நாட்களை இழந்துட்டு, மறுபடியும் போக ஏக்கப்படுற மாதிரி... 'சேது’, 'பிதாமகன்’போல ஒரு ஸ்க்ரிப்ட்டுக்காக நாங்க காத்திருக்கோம். அடுத்த வருஷம் அந்த படத்தைப் பண்ணலாம்னு ஒரு  திட்டம் இருக்கு. உங்களுக்கு அற்புதமான செய்திதானே இது... எனக்கும்தான்!''

கு.பாஸ்கர், திருநெல்வேலி.

''உங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? உங்கள் மகனை நடிகராக்குவீர்களா?''

''என் குழந்தைகள் அக்‌ஷிதாவும் துருவும்தான் உலகிலேயே க்யூட்டான குழந்தைகள். அவங்க எந்த கிளாஸ் படிக்கிறாங்கனு நான் சொல்ல விரும்பலை. ஏன்னா, அவங்க அம்மாவோட வயசை நீங்க கண்டுபிடிச்சுரக் கூடாது இல்லையா?

என் பையன் பயங்கர கிரியேட்டிவ். என்னைத்தான் புரொஃபஷனல் போட்டோகிராஃபர்னு சொல்வாங்க. ஆனா, சின்னப் பையனா இருந்தாலும், அவன் வைக்கிற ஃப்ரேம் என்னை அதிரவைக்குது. என்னைவிட சில சமயம் நல்லாப் பண்றான். அதுவும் இந்த வயசிலேயே! எதிர் காலத்துக்கு நிறைய நல்ல ஸ்க்ரிப்ட் ஐடியா எல்லாம் வெச்சு இருப்பான். சினிமா சம்பந்தப்பட்ட ஏதாச்சும் ஒரு விஷயம் அவன் செய்வான். நீரவ் ஷா, ரவி.கேசந்திரன் யார்கிட்டயாவது கேமரா கத்துக்கணும்னு ஆசைப்படுறான். அவன் இயக்குநராகவோ அல்லது நடிகனாகவோ ஆகலாம். எனக்குத் தெரியலை.

ஆனா, அவன் இயக்குநர் ஆனா, 'பீமா’வை ஒரு பாசிட்டிவான முடிவோட ரீ-மேக் பண்ணப்போறதா சொன்னான். அவனுக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்ச படம். ரொம்பக் குறும்பா என்னைப் பார்த்துக்கிட்டே, 'அப்பா! நான் டைரக்டராகும் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. அதுக்குள்ள முடி எல்லாம் கொட்டி, வழுக்கையாகிடாமப் பாத்துக்கோங்க’னு சொல்றான்!''

ச.ஆதி, கோவில்பத்து.

விகடன் மேடை - விக்ரம்

''உங்களுக்கு ஏற்ற சரியான திரை ஜோடி யார் என நினைக்கிறீர்கள்?''

''குறும்புக்கு ஜோ! அவங்களோட நடிக்கும்போது 'தூள்’ ஆகட்டும், 'அருள்’ ஆகட்டும்... காமெடி களைகட்டும். அவங்க நல்ல நடிகை. எப்பவுமே எங்களுக்குள்ள எல்லா ஸீன்லயும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.

ரொமான்ஸுக்கு த்ரிஷா! அவங்களோட ரொமான்டிக் ஸீன்ஸ் பண்ணும்போது ஒரு ஸ்பெஷல் மேஜிக் நிலவும். அது நடிப்புக்கும் ஸ்க்ரிப்ட்டுக்கும் அப்பாற்பட்டது. அவங்க பாட்டி 'பீமா’ பார்த்துட்டு, 'உனக்கும் விக்ரமுக்கும் பாடல் காட்சிகளில் அளவுக்கு அதிகமா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுது’னு சொன்னாங்களாம். பாட்டி சொல்லைத் தட்டக் கூடாது த்ரிஷா!

பாசத்துக்கு காவ்யா மாதவன்(காசி)! நிஜத்துல நாங்க அண்ணன் - தங்கையாப் பழகுற மாதிரியே படத்திலும் நிறைய டச்சிங்கான ஸீன்ஸ் இருக்கு. இன்னிக்கு வரை அவங்க என்னை 'அண்ணா’னுதான் கூப்பிடுறாங்க.

போட்டிக்கு அனுஷ்கா! 'தெய்வத் திருமகள்’ படத்தில், சாரா பாப்பாதான் இடைவேளைக்கு முன்னாடி வர்ற ஹீரோன்னு சொன்னா, இடைவேளைக்குப் பின்னால், அனுஷ்காதான் ஹீரோ. பொதுவா, தமிழ் சினிமாவில் ஒரு பொண்ணுக்குக் கஷ்டம் வர்றப்போ, ஹீரோதான் தீர்த்துவெச்சு வழிகாட்டுவார். ஆனா, இதுல அனுஷ்கா கேரக்டர்தான் என் கஷ்டங்களைத் தீர்த்துவெச்சு, க்ளைமாக்ஸ் வரைக்கும் வழிகாட்டும். ஷூட்டிங் பூராவுமே எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்துச்சு. அவங்க நிஜப் பேர் ஸ்வீட்டி. எவ்வளவு கரெக்ட்டா பேர் வெச்சு இருக்காங்க பாருங்க!

ஆனா, ஒட்டுமொத்த மேஜிக் குக்கு... நிலா பாப்பா!

நிலாவும் நானும் பகிர்ந்துகிட்ட மேஜிக்கை இனி ஒரு முறை நாங்க மறுபடி கொண்டுவர முடியாது. அவள் என்னை எப்போதும் 'அப்பா’னுதான் கூப்பிடுவா. அப்படித்தான் நாங்க ஒருவருக்கொருவர் உணர்ந்தோம். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்குள் ஒரு ஸ்பெஷல் பிணைப்பு இருந்துச்சு. அதுதான் முக்கியமா மக்கள் மனசுல 'தெய்வத் திருமகள்’ படத்தை உட்காரவெச்சு இருக்கு.  Thank u my nila. For being the lovely daughter that u are!’’'

- அடுத்த வாரம்...

''இந்த வயதிலும் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக் கிறீர்கள். உங்கள் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''

''நிறையக் கிளிகள் வளர்க் கிறீர்கள் என்று ஒரு பேட்டியில் படித்தேன். உங்கள் செல்லப் பிராணிகள்பற்றிச் சொல்ல முடியுமா?''

''நல்ல நடிகனுக்கு எது இலக்கணம்?''

-விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - விக்ரம்