Published:Updated:

`குழந்தைக்கு ஆண்களும் டயாப்பர் மாற்றலாம்': பெங்களூரு விமான நிலையத்தில் புதிய வசதி!

டையப்பர் மாற்றும் அறை

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (BLR Airport) ஆண்களின் கழிவறையோடு, டயாப்பரை மாற்றும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

`குழந்தைக்கு ஆண்களும் டயாப்பர் மாற்றலாம்': பெங்களூரு விமான நிலையத்தில் புதிய வசதி!

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (BLR Airport) ஆண்களின் கழிவறையோடு, டயாப்பரை மாற்றும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
டையப்பர் மாற்றும் அறை

குழந்தை யாரிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருந்தாலும், திடீரென சிறுநீரோ, மலமோ கழித்துவிட்டால், உடனே குழந்தை அம்மாவின் கைகளுக்குத் தள்ளப்பட்டுவிடும். அம்மாவுக்கென்றே நேர்ந்துவிட்ட பணி போல, குழந்தையின் டயாப்பரை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

``இவ்வளவு நேரம் தூக்கிவெச்சுக் கொஞ்சத் தெரிஞ்சுதில்ல, குழந்தைக்கு கொஞ்சம் டயாப்பர்தான் மாத்திவிட்டா என்ன" என்று, தனது கணவரிடம் கோபிக்காத மனைவிகள் அரிது.

டயாப்பர்
டயாப்பர்
pixabay

இதை உறுதிப்படுத்தும் விதமாக, பொது இடங்களிலும், விமான நிலையங்களிலும், பெண்களின் கழிவறையில்தான் டயாப்பர் மாற்றும் அறை இணைக்கப்பட்டு இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (BLR Airport) ஆண்களின் கழிவறையோடு, டயாப்பரை மாற்றும் அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதை கவனித்த சுக்தா என்ற பயணி, ``பெங்களூரு விமான நிலையத்தில் டயாப்பரை மாற்றும் அறையை ஆண்கள் கழிப்பறையில் கண்டேன். குழந்தைப் பராமரிப்பு என்பது பெண்களின் பொறுப்பு மட்டுமல்ல. பெங்களூரு விமான நிலையத்தின் இந்தச் செயல் கொண்டப்பட வேண்டிய விஷயம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டி உள்ளார்.

சுக்தாவின் பதிவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ``பாலினத்தைக் கருத்தில் கொள்ளாமல் வசதியாக, தனியாக குழந்தைக்கு டயாப்பர் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அறை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என பெங்களூரு விமானநிலையம் ட்வீட் செய்துள்ளது.