Published:Updated:

`காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்கலாம்' - கனடா உயிரியல் பூங்காவின் புது யோசனை!

முன்னாள் காதலர் பெயரை கரப்பான் பூச்சிக்கு வைக்கலாம்... ( @TZWConservancy )

காதலர் தினம் விரைவில் வரவிருக்கிறது. அதை முன்னிட்டு இந்த திட்டம் லான்ச் செய்யப்பட்டிருக்கிறது. காதல் தோல்வியடைந்தவர்கள் பலரும் தன்னுடைய பழைய காதலி அல்லது காதலன் மீது வெறுப்போடு இருக்கலாம்.

பல உறவுகள் நம்முடைய வாழ்வில் பயணித்தாலும், அவர்கள் மீதுள்ள வெறுப்பையோ, கோபத்தையோ நம்மால் அவ்வளவு எளிதாக வெளிப்படுத்த முடியாது. சகித்துக் கொண்டு வாழும் நிலையில் இருக்கலாம். அந்த வெறுப்புகளை ஏன் மனக்குமுறலிலேயே வைத்திருக்க வேண்டும்? அதை வேறு வழியில் வெளிப்படுத்தி விடலாமே என்ற ஐடியாவோடு களமிறங்கி இருக்கிறது கனடாவைச் சேர்ந்த `டொரான்டோ உயிரியல் பூங்கா வனவிலங்கு பாதுகாப்பு' ஒன்று. அதென்ன யோசனை என்று கேட்கிறீர்களா..?

breakup
breakup
pexels

காதலர் தினம் விரைவில் வரவிருக்கிறது. அதை முன்னிட்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. காதலில் தோல்வியடைந்தவர்கள் பலரும் தன்னுடைய பழைய காதலி அல்லது காதலன் மீது வெறுப்போடு இருக்கலாம். அவர்களின் பெயரை ஒரு கரப்பான் பூச்சிக்கு வைக்கலாம் என்பதுதான் ஐடியா.

காதலர்கள் மட்டுமில்லாமல், சிடுமூஞ்சி பாஸ், புலம்பிக் கொண்டே இருக்கும் சொந்தக்காரர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அறிவித்துள்ளது. கரப்பான் பூச்சிக்குப் பெயர் வைக்கக் குறைந்தபட்சம் 25 அமெரிக்க டாலரை  (1507 ரூபாய்) உயிரியல் பூங்காவிற்கு வழங்க வேண்டும். ஆன்லைனில் இதற்கான அனைத்து செயல்முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

கரப்பான் பூச்சிக்குப் பெயர் வைக்க அனுமதித்தாலும், வெறுப்புண்டாக்குகிற அல்லது அவதூறான பெயர்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உயிரியல் பூங்கா சிறியது பெரியது என அனைத்து உயிரினங்களையும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உயிரியல் பூங்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

உயிரியல் பூங்காவின் இந்த புதுவித யோசனை பலரின் கவனத்தை பெற்று வருகிறது.