Published:Updated:

நகங்களே இல்லாத கை விரல்கள்! - அதிர்ச்சிக்குள்ளாக்கிய வைரல் புகைப்படம்... பின்னணி என்ன?

Anonychia congenita ( social media post )

அதெப்படி நகங்களே இல்லாமல் இருக்க முடியும்.? `Anonychia congenita’- வால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில், அவரின் கை மற்றும் கால் விரல்களில் நகங்கள் இருக்காது.

சமூக வலைதளத்தில் வெளிவரும் பதிவுகளில் பல அதிர்ச்சியைக் கிளப்புவதுண்டு. அந்தப் பதிவுகளைப் பார்த்தவுடன் இது உண்மையா, பொய்யா போன்ற கேள்விகள் நெஞ்சைத் துளையிட ஆரம்பித்துவிடும். அந்த வகையில் சமீபத்தில் கை விரல்களில் நகங்களே இல்லாமல் ஒரு புகைப்படம் வைரலானது. 

நகங்களே இல்லாத கை விரல்கள்! - அதிர்ச்சிக்குள்ளாக்கிய வைரல் புகைப்படம்... பின்னணி என்ன?
pixabay

அதெப்படி நகங்களே இல்லாமல் இருக்க முடியும். ஏதோ ஒரு மெல்லிய கையுறையை அவர்கள் அணிந்திருக்கலாம் அல்லது அனிமேஷன் செய்திருக்கலாம் என, சற்று உற்று அந்தப் படத்தைக் கவனித்தாலும், அப்படி ஏதும் இல்லை. 

இந்தப் புகைப்படம் `Anonychia congenita’-வால் பாதிக்கப்பட்ட நபரின் உண்மையான கையைக் காட்டுகிறது. இந்தப் பிரச்னையால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில், அவரின் கை மற்றும் கால் விரல்களில் நகங்கள் இருக்காது. 

பிறவியிலேயே உண்டாகும் எக்டோடெர்மல் குறைபாடு,  தொடர்ச்சியாக தடித்த, உலர்ந்த மீன் செதில் போன்ற சருமத்தை ஏற்படுத்தும் Ichthyosis நிலை, கடுமையான தொற்று, ஒவ்வாமை, டெர்மடைடிஸ் போன்றவற்றால் `Anonychia congenita’- உண்டாகிறது.  

birth
birth
pixabay

இந்த நிலை, இரு கைகள் மற்றும் இரு கால்களையும் பாதிக்கும். பெரும்பாலும் இந்த நிலையால் பாதித்தவர்கள், பிறவியிலிருந்தே நகங்கள் இல்லாமல் இருக்கின்றனர். சிலருக்கு நகத்தின் ஒரு பகுதி மட்டும் இல்லாமல் இருக்கும் அல்லது அனைத்து கை விரல்களும், கால் விரல்களும் பாதிக்கப்படாமல், ஒரு சில விரல்கள் மட்டும் பாதிக்கப்பட்டு இருக்கும். இதற்கு Hyponychia என்று பெயர். 

இந்த நிலை குறித்து மக்கள் அரிதாகவே அறிந்துள்ளனர். எனவேதான் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.