Published:Updated:

20 நிமிட லேட், வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்: நாங்களும் லேட்டாக வருவோம் என ஊழியர்கள் பதிலடி!

வேலை

கடந்த 7 வருடங்களில் ஒருமுறைகூட நேரம் தவறி வராத ஊழியரை, 20 நிமிட தாமதத்துக்காக நிறுவனம் நீக்கியுள்ளது. இச்சம்பவம் அங்கு வேலை செய்பவர்களின் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

20 நிமிட லேட், வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்: நாங்களும் லேட்டாக வருவோம் என ஊழியர்கள் பதிலடி!

கடந்த 7 வருடங்களில் ஒருமுறைகூட நேரம் தவறி வராத ஊழியரை, 20 நிமிட தாமதத்துக்காக நிறுவனம் நீக்கியுள்ளது. இச்சம்பவம் அங்கு வேலை செய்பவர்களின் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
வேலை

`கால தாமதம்’ என்பது வேண்டுமென்றே நடைபெறுவது அல்ல. சரியான நேரத்தில் கிளம்பிச் சென்றாலும் சூழலால், சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதுண்டு. காரணங்களைச் சொல்லி எக்ஸ்கியூஸ் கேட்பது பெரும்பாலான நிறுவனங்களில் நடக்கும்.

Office
Office
Photo by kate.sade on Unsplash

ஆனால், தாமதமாக வந்ததற்காக ஒருநபரை வேலையில் இருந்து நீக்கிய சம்பவம் நிகழ்ந்து, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரெட்டிட் என்ற இணையதள நிறுவனம் ஒன்றில். 7 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரத்தில் ஒருநாள், 20 நிமிடங்கள் காலதாமதமாக வேலைக்கு வந்த அவரை, அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதில் கண்டிக்கத்தக்கது என்னவென்றால், 7 வருடங்களில் ஒரு முறைகூட நேரம் தவறி வராத அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கு வேலை செய்பவர்களின் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Office
Office
Photo by LYCS Architecture on Unsplash

இந்நிலையில் `வேலையில் இருந்து நீக்கப்பட்டவரை மீண்டும் வேலையில் சேர்க்கும் வரை, நாங்களும் தாமதமாகத்தான் அலுவலகத்துக்கு வருவோம்' என அந்நிறுவனத்தின் மற்ற பணியாளர்களும் தாமதாகச் செல்கின்றனர்.

இச்சம்பவம், நெட்டிசன்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. கால தாமதம் சகஜமான ஒன்று, அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என ஒரு தரப்பும், 8 மணி நேரம் 20 நிமிடங்கள் வேலை செய்பவரும், 7 மணி நேரம் 40 நிமிடங்கள் வேலை செய்பவரும் ஒரே சம்பளத்தை வாங்குகின்றனர். அப்படியென்றால் காலதாமதம் சரியா என மற்றொரு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.