Published:Updated:

20 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு கருப்பை, சினைப்பை இருப்பதை அறிந்து அதிர்ந்த ஆண்!

Abdominal Pain ( Pixabay )

தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேல் வயிற்றுவலி நீடித்ததால், அப்பெண்டிசைட்டிஸ் எனப்படும் குடல் வால் அழற்சியால் (Appendicitis) அவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனக்கருதி, அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் மேற்கொண்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு கருப்பை, சினைப்பை இருப்பதை அறிந்து அதிர்ந்த ஆண்!

தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேல் வயிற்றுவலி நீடித்ததால், அப்பெண்டிசைட்டிஸ் எனப்படும் குடல் வால் அழற்சியால் (Appendicitis) அவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனக்கருதி, அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் மேற்கொண்டுள்ளார்.

Published:Updated:
Abdominal Pain ( Pixabay )

சீனாவை சேர்ந்த 33 வயது ஆண் ஒருவர், நீண்டகாலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்றுவலியோடு இவருக்கு சிறுநீரில் ரத்தமும் வெளியேறி உள்ளது. இந்த வேதனையை அவர் தொடர்ந்து 20 வருடங்களாக அனுபவித்து வந்துள்ளார்.

சமீபத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட குரோமோசோம் சோதனையில், இவர் உயிரியல்ரீதியாகப் பெண் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

சிறுநீர் கழிப்பதில் அலட்சியம்
சிறுநீர் கழிப்பதில் அலட்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தவிர, இவருக்கு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை மற்றும் சினைப்பை உள்ளதையும் கண்டு பிடித்துள்ளனர். 20 வருடங்கள் கழித்து இந்த நபர், தான் பெண் என்பதை அறிந்துள்ளார்.

அதாவது, பல வருடங்களாக இவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் (irregular urination) இருந்துள்ளது. சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரிசெய்யும் நேரத்தில் அவர் பருவமடைந்தது தெரியாமல் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலிருந்து சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரோடு ரத்தமும், வயிற்றில் அசௌகர்யமும் வலியும் தொடர்ந்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேல் வயிற்றுவலி நீடித்ததால், மருத்துவர், இவர் அப்பெண்டிசைட்டிஸ் எனப்படும் குடல்வால் அழற்சியால் (Appendicitis) பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கருதி அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துள்ளார். அப்போதும் வலி தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், கடந்த வருடம் இவருக்கு குரோமோசோம் பகுப்பாய்வு சோதனையும், இன்ன பிற மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் இவருக்கு பெண் குரோமோசோம்கள் அதிகம் உள்ளதும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை மற்றும் சினைப்பை உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆணுக்கான ஹார்மோனான ஆண்ட்ரோஜென் குறைவாகவும், பெண்ணுக்கான ஹார்மோன் தூண்டல் அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.

கருப்பை- சித்திரிப்பு படம்
கருப்பை- சித்திரிப்பு படம்

அதாவது இவர் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் இனப்பெருக்க உறுப்புகளோடு பிறந்துள்ளார். இதுநாள் வரை அவருக்கு ஏற்பட்டு வந்த வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் மாதவிடாயின் காரணமாக ஏற்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த உண்மையைக் கேட்டு அதிர்ந்துபோனவர், தான் ஆணாக இருக்கவே விரும்புவதாகக் கூறி உள்ளார். பெண்ணுக்கான இனப்பெருக்க உறுப்புகளை நீக்குமாறு கோரியதால், கடந்த மாதம் இவருக்கு மூன்று மணி நேர அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பெண்ணுக்கான இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டன.

இதன் பிறகு இவரால் ஆணாக வாழ முடியும். ஆனால், இவரின் விதைப்பைகளால் விந்தணுவைச் சுரக்க முடியாததால், இவரால் குழந்தை பெற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.