Published:Updated:

ஃப்ரைடு ரைஸ் சுவைக்கு காரணம் பல்லிகளா... ஸ்லோ குக்கரில் மறைந்திருந்த அதிர்ச்சி|வைரல் பதிவு!

ஸ்லோ குக்கரில் இருந்த பல்லிகள்
News
ஸ்லோ குக்கரில் இருந்த பல்லிகள் ( u/mpcamposz )

என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை சமைக்கும் சமையல் ஒருவித ஃப்ரைடு ஃப்ளேவரில் நல்ல சுவையில் இருந்துள்ளது. பல நாள்களாக குடும்பத்தினரும் இதைக் கண்டு கொள்ளவில்லை போல. உணவு நன்றாக இருக்கிறதே என அதிலேயே சமைத்து உண்டு வந்திருக்கின்றனர்.

ஆச்சர்யமூட்டும் அதிசயிக்கவைக்கும் பல விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு. அதேசமயம் அருவருக்கத்தக்க சில விஷயங்களும் பலரின் கவனம் பெறுவதுண்டு. அப்படியான ஒரு சம்பவத்தைதான் ரெட்டிட்டில் u/mpcamposz என்ற பயனர் பதிவு செய்திருக்கிறார். 

Rice cooker
Rice cooker
Pixabay

எப்போதும் வீட்டில் அரிசியை ஸ்லோ குக்கரில் சமைப்பது இவர்களது வழக்கம். என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை சமைக்கும் சமையல் ஒருவித ஃப்ரைடு ஃப்ளேவரில் நல்ல சுவையில் இருந்துள்ளது. பல நாள்களாக குடும்பத்தினரும் இதைக் கண்டு கொள்ளவில்லை போல. உணவு நன்றாக இருக்கிறதே என அதிலேயே சமைத்து உண்டு வந்திருக்கின்றனர். 

ஒருநாள் சர்வீஸ் செய்ய அந்த குக்கரைத் திறந்தபோது தான் பல பல்லிகள் குக்கரின் அடியில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஐயோ இதனால் தான் சமையல் அப்படி இருந்ததா எனக் குமட்டிக் கொண்டு வந்துள்ளது.

ஃப்ரைடு ரைஸ் சுவைக்கு காரணம் பல்லிகளா... ஸ்லோ குக்கரில் மறைந்திருந்த அதிர்ச்சி|வைரல் பதிவு!
u/mpcamposz

அந்த குக்கரையும் பல்லிகளையும் புகைப்படம் எடுத்து இப்படிப் பதிவிட்டுள்ளார், ``இங்கே வீட்டில் ஸ்லோ குக்கரில் அரிசியைச் சமைக்கும்போது, எப்போதும் வறுத்த சுவையுடன் உணவு வெளிவரும், ஏன் என்று நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இன்று நாங்கள் அதைப் பராமரிப்பிற்காகத் திறந்து பார்த்தபோது பல பல்லிகளை அதில் பார்த்தோம்’’ என்று பதிவிட்டுள்ளார். 

இவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அருவருக்கத்தக்க ரியாக்ஷன்களை தெறிக்கவிட்டு வந்தாலும், சிலர் அதை சர்விஸுக்கு கொடுக்காதீர்கள், அப்படியே சமைத்துச் சாப்பிடுங்கள் எனக் கிண்டல் அடித்து வருகின்றனர்.