Published:Updated:

`பாத்து... பாத்து... மேல பட்டுட போகுது!' - ஆசிரியரின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்|Viral Video

தண்ணீரில் கால் படாதவாறு வரும் ஆசிரியர் ( twitter )

ஆசிரியர் ஒருவர் தண்ணீரில் தன்னுடைய கால்கள் படக்கூடாது என்பதற்காக 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை மாணவர்களிடம் அடுக்கச் சொல்லி, மாணவனை பிடித்துக்கொண்டே நகர்ந்து பள்ளிக்குள் செல்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி வளாகத்தில் தேங்கிய தண்ணீரைக் கடக்க, பள்ளி ஆசிரியருக்கு மாணவர்கள் வரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மழை நீரை கடக்கும் ஆசிரியர்
மழை நீரை கடக்கும் ஆசிரியர்

உத்தரப்பிரதேசம் மதுரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இடைவிடாது பெய்த மழையால், மழை நீர் வளாகம் முழுதும் சற்று தேங்கி உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் அந்தத் தண்ணீரில் தன்னுடைய கால்கள் படக்கூடாது என்பதற்காக, 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை மாணவர்களிடம் அடுக்கச் சொல்லி, அந்த நாற்காலிகளில் ஒன்றின் மீது ஒன்றாக கால் வைத்து, ஒரு மாணவனைப் பிடித்துக்கொண்டே நகர்ந்து பள்ளிக்குள் செல்கிறார்.

சில மாணவர்கள் தேங்கிய தண்ணீரில் நின்றிருக்க, தன்னுடைய கால் மழைநீரில் படாதவாறு பக்குவமாகப் பத்திரமாக நடந்து வரும் அந்த ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.