Published:Updated:

Doctor Vikatan: மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அவசியமா?

மெனோபாஸ்
News
மெனோபாஸ்

மெனோபாஸின்போது ஏற்படுகிற அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தேவைப்படும். பெண்களுக்கு வெறும் ஈஸ்ட்ரோஜன் மட்டும் உள்ள மாத்திரைகள் கொடுத்தால் அவர்களுக்குப் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனையும் சேர்த்துப் பரிந்துரைப்போம்.

Doctor Vikatan: மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அவசியமா?

மெனோபாஸின்போது ஏற்படுகிற அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தேவைப்படும். பெண்களுக்கு வெறும் ஈஸ்ட்ரோஜன் மட்டும் உள்ள மாத்திரைகள் கொடுத்தால் அவர்களுக்குப் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனையும் சேர்த்துப் பரிந்துரைப்போம்.

Published:Updated:
மெனோபாஸ்
News
மெனோபாஸ்

Doctor Vikatan: என் வயது 52. இன்னும் மெனோபாஸ் வரவில்லை. மெனோபாஸ் வந்துவிட்டால் ஹார்மோன் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும் என்று கேள்விப்பட்டேன். மெனோபாஸ் வந்துவிட்ட எல்லா பெண்களுக்குமே ஹார்மோன் தெரபி அவசியமா? அதனால் என்ன பலன்? பக்க விளைவுகள் இருக்குமா?

மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

ஒரு பெண்ணுக்கு மெனோபாஸ் வரப்போவதன் அறிகுறிகளாக சில விஷயங்களை உணர்வார்கள். அதாவது, முறைதவறிய பீரியட்ஸ், ஏசி அறையில் இருந்தாலும் வியர்ப்பது, உடல் சூடாவது, இரவில் வியர்ப்பது, தூக்கமின்மை, எரிச்சல், கோபம் என மனநிலையில் மாற்றங்கள், உடல் பருமன், முடி உதிர்வு, முடி மெலிவது, மார்பகங்கள் தொய்வடைவது, வெஜைனாவில் வறட்சி, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை அல்லது உறவின் போது வலி போன்றவை இருக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மெனோபாஸை எந்தச் சிகிச்சையிலும் தடுத்து நிறுத்த முடியாது. மெனோபாஸின்போது ஏற்படுகிற அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தேவைப்படும். கர்ப்பப்பை உள்ள பெண்களுக்கு வெறும் ஈஸ்ட்ரோஜன் மட்டும் உள்ள மாத்திரைகள் கொடுத்தால் அவர்களுக்குப் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனையும் சேர்த்துப் பரிந்துரைப்போம்.

மெனோபாஸ்
மெனோபாஸ்

ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் ஹெச்ஆர்டி சிகிச்சை மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலம். இந்தியாவில் அது குறித்து அந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லை. உடல் சூடாவது, வியர்வை, மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, தாம்பத்திய உறவில் ஈடுபாடின்மை போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி, இதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருப்பதால் அரிதாகச் சிலருக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம். ஆனால், ரிஸ்க்கைவிட நன்மைகள் அதிகம் என்பதால் பல பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. வழக்கமாக மிகக் குறைந்த அளவில்தான் இந்தச் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். போகப் போக, பக்கவிளைவுகளைப் பார்த்து டோஸை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.

ஹெச்ஆர்டி என்பது மாத்திரை, ஜெல், க்ரீம், ஸ்கின் பேட்ச்சஸ் என பல வடிவங்களில் கொடுக்கப்படுகிறது. சில வருடங்கள் கொடுத்துவிட்டு உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்ததும் நிறுத்திவிடலாம். எந்த வகை ஹெச்ஆர்டி சிகிச்சை என்றாலும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதால் அடிக்கடி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

Doctor Vikatan: மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அவசியமா?

மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும்போது முதல் மூன்று மாதங்களுக்கு வாந்தி உணர்வு இருக்கலாம். இத்தகைய பக்க விளைவுகளைத் தவிர்க்க நினைப்போர் மாத்திரைகளுக்கு பதிலாக பேட்ச்சஸ், இம்பிளான்ட் வடிவில் இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். பேட்ச்சஸ் என்றால் அதிலுள்ள மருந்து முடிந்ததும் மீண்டும் வேறு பேட்ச் மாற்ற வேண்டும்.

மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சையைக் கொடுக்க முடியாது. ரத்தம் தொடர்பான சில பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் , உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கொடுக்கக் கூடாது. மெனோபாஸுக்கு முந்தைய பெரிமெனோபாஸ் நிலையில் உள்ளவர்களுக்கும் கவனமாகவே கொடுக்க வேண்டும். இந்தச் சிகிச்சையைத் திடீரென நிறுத்த முடியாது. படிப்படியாகவே நிறுத்த வேண்டும். அதை மருத்துவரின் ஆலோசனையோடு செய்வதுதான் பாதுகாப்பானது.