Published:Updated:

தீபிகா படுகோன் டாக்டருக்குப் படிக்கலாம்... வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது... ஏன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீபிகா படுகோன் டாக்டருக்குப் படிக்கலாம்... வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது... ஏன்!
தீபிகா படுகோன் டாக்டருக்குப் படிக்கலாம்... வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது... ஏன்!

தீபிகா படுகோன், கேத்ரினா கெய்ஃப், அக்‌ஷய் குமார், விஜய் மல்லையா போன்றவர்களால் டாக்டருக்குப் படிக்கமுடியும். ஆனால் வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் OCI பிரிவைச் சேர்ந்தவர்.

`இந்திய மக்கள் தொகை 134 கோடியில் 16 கோடி பேர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்' என்கிறது ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரம். இந்திய குடியுரிமை பெற்ற மக்களின் கணக்கு இது. மற்ற நாடுகளில் இந்திய பூர்வீகத்தைக் கொண்டு வெளிநாட்டுப் பிரஜையாக (Overseas Citizen) வாழ்பவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம். வெளிநாட்டுக்குச் செல்லும் இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர், படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காகவே வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

`சிஸ்டம் சரியில்லை!' என்று 16 கோடி பேர் அண்டை நாடுகளில் வசிக்கும் இதே நேரத்தில், ஒவ்வோர் ஆண்டும் 40,000 முதல் 50,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்குப் படிக்க வருகிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய தகவல். நமது நாட்டினர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று படிக்கச் செல்லும் நேரத்தில் `வெளிநாட்டினர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?' என்ற கேள்வி எழுந்தது. சில வெளிநாட்டு மாணவர்களைச் சந்தித்து, அவர்கள் இந்தியாவில் படிக்கக் காரணம் என்ன என்று விசாரித்தோம்.

தீபிகா படுகோன் டாக்டருக்குப் படிக்கலாம்... வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது... ஏன்!

இந்தோனேசியாவைச் சேர்ந்த டியா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி இயற்பியல் படித்துக்கொண்டிருக்கிறார். `சலாமத் பியாங்' என கூகுள் காட்டிய மலாய் வணக்கத்தோடு `டியா'விடம் பேசினோம். ``இந்தியாவில் படிக்க நிறைய காரணம் இருக்கிறது. முக்கியமான காரணம் இங்கு கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலில்(ICCR) இருந்து ஒவ்வோர்  ஆண்டும் 20 மாணவர்களுக்கு இங்க படிக்க வாய்ப்பு தருகிறார்கள். அப்படித்தான் நான் இங்கு வந்தேன். ஒருவர் மூன்று கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், இந்தியாவில் மிகவும் பழைமையான பல்கலைக்கழகத்தில் இதுவும் ஒன்று.

தீபிகா படுகோன் டாக்டருக்குப் படிக்கலாம்... வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது... ஏன்!

எங்கள் நாட்டில் மூன்று நாள்தான் கல்லூரி இயங்கும். அதுவும் முழுநேரம் இல்லை. ஒரு சப்ஜெக்ட் முடிந்து இன்னொரு சப்ஜெக்ட் தொடங்க நிறைய இடைவெளி இருக்கும். இங்கு அப்படியில்லை. ஒருமணி நேர உணவு இடைவெளி தவிர, வேறு எதுவும் கிடையாது. வாரத்துக்கு ஐந்து நாள்களும் கல்லூரி இயங்குகிறது. இங்கு படிக்கும்  இயற்பியல், இந்தோனேசியா பாடத்திட்டத்தைவிட வித்தியாசமாகவும் கடினமாகவும் இருக்கிறது. இங்கு ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்களோ, அதுதான் எல்லாமே. பிராக்டிக்கலைவிட தியரிதான் நிறைய படிக்கிறோம்'' என்றார்.

டியாவைத் தொடர்ந்து, `அயுபோவான்' என சிங்கள மொழியில் `ஹலோ' சொல்லி அகர்ஷிகாவிடம் பேச ஆரம்பித்தோம். கொழும்புவைச் சேர்ந்த அகர்ஷிகா, தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் என்.ஐ.டி. கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கிறார். ``ஐி.சி.சி.ஆர். ஸ்காலர்ஷிப் மூலமாதான் படிக்க வந்தேன். நிறைய மார்க் எடுத்திருந்தும் எங்கள் ஊரில் இன்ஜினீயரிங் சீட் கிடைக்கவில்லை எனில், இந்தியாவில் இந்த ஸ்காலர்ஷிப் மூலமாக இன்ஜினீயரிங் படிக்கலாம். இதற்கு இந்திய அரசு தனியாக நேர்முகத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வோர் ஆண்டும் 100 பேர் வரை என்.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இலங்கையில படிப்பதற்கும் இந்தியாவில் படிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. NIT–யின் உள்கட்டமைப்பு அருமையாக இருக்கிறது. ஆனால், மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையும் அதிகம் இருக்கிறது'' என்றார் அகர்ஷிகா.

தீபிகா படுகோன் டாக்டருக்குப் படிக்கலாம்... வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது... ஏன்!

`கொஞ்சம் ஆப்பிரிக்கா பக்கம் போவோமே!' எனக் கிழக்கு ஆப்பிரிக்காவின் `புருண்டி' யிலிருந்து வந்து, திருச்சி தூய வளனார் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஆய்வியல் படிக்கும் அர்மல் என்ற மாணவரின் அனுபவங்களைக் கேட்டோம்.

``என்னுடைய முதுநிலைக் கல்வியையும் இங்கேதான் படித்தேன்" என்று பேச ஆரம்பித்தார் அர்மல். ``2015- ல் உயர்கல்விக்காக இந்தியா வந்தேன். இதே கல்லூரியில்தான் முதுநிலைப் பட்டம் பெற்றேன். ஆப்பிரிக்க நாடுகளைவிடக் கல்வியின் தரம் இங்கு சிறப்பாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கல்விக்கான செலவு மிகவும் குறைவு. கல்விக்காக இந்தியா வந்தபோது நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தேன். அவற்றில் பல நிறைவேறினாலும், சில ஏமாற்றங்களும் இருக்கின்றன.

கல்லூரியில் எனக்குப் பிடித்த இடம் நூலகம். ஏறக்குறைய 1,60,000 புத்தகங்கள் உள்ளன. என்னுடைய நாட்டில் உயர்கல்விக்கான வாசல் இன்னும் பெரிய அளவில் திறக்கப்படவில்லை. அதனால் பெரும்பாலானோர் அயல்நாடுகளிலேயே படிக்கிறார்கள். `ப்ராக்டிக்காலான ' கல்வி முறையை எதிர்நோக்கியே இந்தியா வந்தோம். ஆனால், இங்கு புத்தகப் படிப்புதான் அதிகமாக இருக்கிறது. முதலில் இந்தியாவுக்குப் படிக்கவந்தபோது அதிர்ச்சியாக இருந்த விஷயம், ஆண்களும் பெண்களும் தனித்தனியாக உட்கார்வது! எங்கள் நாட்டில் அப்படி இல்லை. இங்கு ஆண்கள், பெண்களுக்கென பிரத்யேகப் பள்ளி, கல்லூரிகள் தனித்தனியாக உள்ளன. இதை ஆப்பிரிக்காவில் எங்கேயும் பார்க்க முடியாது'' என்கிறார்.

இந்தோனேசியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்தே இந்தியாவுக்கு அதிக மாணவர்கள் படிக்க வருகிறார்கள். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று படித்து அங்கேயே குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது. அதனால், இந்திய பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டு பாஸ்போர்ட் வாங்கும் இந்தியர்களுக்கு, இங்கு வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல; சில படிப்புகளில் சேரும் உரிமையும் கிடையாது.

உதாரணத்துக்கு, தீபிகா படுகோன், கத்ரினா கெய்ஃப், அக்‌ஷய் குமார், விஜய் மல்லையா போன்றவர்களால் டாக்டருக்குப் படிக்கமுடியும். ஆனால் வழக்கறிஞருக்குப் படிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் OCI பிரிவைச் சேர்ந்தவர். OCI என்பது சாதி பிரிவு அல்ல. OCI என்றால் Overseas Citizen of India. அதாவது இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்தியர்கள் இல்லை. நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை வாங்கிவிட்டீர்கள் என்றால் உங்கள் குழந்தைகள் இங்கு பொறியாளர், மருத்துவர், விஞ்ஞானி ஆகலாம். ஆனால்,  வழக்கறிஞரோ, சார்ட்டட் அக்கவுன்டன்ட்டோ ஆக முடியாது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு