படிக்கலாம்... ஜெயிக்கலாம்!

எல்லோரின் இலக்கும் வெற்றிதான். அதை எப்படி அடைகிறோம் என்பதில் இருக்கிறது வித்தியாசம். எந்த வழிகளில் படித்தால் எளிதாக இலக்கை அடையலாம்? இதோ வழிகாட்டும் வரிகள்...

படிக்கும் முறை...

படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்காதீர்கள். நிமிர்ந்து உட்கார்ந்து படித்தால், மூளைக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் சென்று, ரத்த ஓட்டம் சீராகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

சத்தமா? மௌனமா?

பாடங்களை சத்தமாகப் படிப்பதால், நினைவாற்றலும் உச்சரிப்பு வளமும் கூடும். எனினும், மனதிற்குள் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அப்படியே படியுங்கள்.

இடத்தைப் பிடி!

வீட்டில் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு உட்கார்ந்துகொண்டோ, மெதுவாக நடந்துகொண்டோ படிக்கலாம்.

2 மணி நேரம்!

பாடங்களை 2 மணி நேரம் தொடர்ந்து வாசியுங்கள். பிறகு, சிறிது ஓய்வெடுங்கள். அந்த ஓய்வில், தூங்கவோ, டி.வி. பார்க்கவோ கூடாது.

அதிகாலை...

அமைதியான அதிகாலை நேரத்தில் கணக்குகளைப் போட்டுப் பார்த்தால், மனதில் நன்றாகப் பதியும். மற்ற பாடங்களும் இப்படித்தான்.

பழக்கத்தை மாற்றாதே!

அதிகாலையைவிட மாலையில் படிப்பதுதான் மனதில் பதியும் என்றால், அந்த பழக்கத்தை மாற்றாமல், அப்படியே செய்யுங்கள்.

முந்திய இரவே...

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பே, அடுத்த நாள் படிக்கும் பாடங்களைத் திட்டமிட்டால், இன்னும் சிறப்பாகப் படிக்கலாம்.

ஸ்டாப்... ஸ்டாப்!

தூங்கும் நிமிடம் வரை படிக்க வேண்டாம். படுக்கைக்குச் செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பே, படிப்பதை நிறுத்திவிடுங்கள்.

உறங்கும் முன்...

உறங்கும் முன்பு, அன்று படித்த பாடங்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள். இதனால், படித்தவை எப்போதுமே மறக்காது.

வெளிச்சம் முக்கியம்!

மிகவும் குறைந்த வெளிச்சத்திலோ, கண்கள் கூசும் வெளிச்சத்திலோ, படிக்காதீர்கள். வெளிச்சம் மையமாக இருக்க வேண்டும்.

ஜன்னல் தேவை!

மூடிய அறைக்குள் படிப்பது சரியே.ஆனால், ஜன்னலுடன் வெளிக் காற்றும், வெளிச்சமும் இருக்கும் அறையில் படிக்க வேண்டும்.

கூடுதல் கவனம்!

கடினமான பாடப் பகுதிகளை தனியே ஒரு நோட்டில் எழுதி வைத்து, அதற்குக் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள்.

விட்டுத் தள்ளு!

கடினமாகவும் சுமையாகவும் கருதும் பாடங்களை நினைத்துக் கவலைப்படாமல், தெரிந்த பாடத்தில் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.

போரடிச்சா மாற்று!

சில சமயம் ஒரு சப்ஜெக்ட் படிக்கும்போது போரடிப்பது போல் இருக்கலாம். உடனே, வேறு சப்ஜெக்ட்டுக்கு மாறுங்கள். பிறகு, இதற்கு வரலாம்.

பிரிச்சும் படிக்கலாம்!

பெரிய விடைகளை மொத்தமாக மனப்பாடம் செய்வதைவிட, மனதிற்குள் கட்டம் போட்டு, பகுதிப் பகுதியாகப் பிரித்து, மனப்பாடம் செய்வது நல்லது.

ஒட்டி வை!

தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் வரும் பாடல்களை அடி பிறழாமல் எழுதி, கண்ணில் படுகிற மாதிரி அறையில் ஒட்டிவையுங்கள்.

க்ரூப் ஸ்டடி!

என்னதான் க்ரூப் ஸ்டடியாகப் படித்தாலும், அது 3 மணி நேரத்துக்கு மேல் வேண்டாம். தனியாகவும் சிறிது நேரம் படியுங்கள்.

டைம் டேபிள்!

படிக்கும் முன்பு, எத்தனை மணி நேரத்துக்கோ, அதற்கு ஒரு கால அட்டவணையைத் தயார்செய்து, ஃபாலோ செய்தால், நேரம் விரயமாவதைத் தடுக்கலாம்.

சபாஷ் பரிசு!

டைம் டேபிள் போட்டவாறு சரியாகப் படித்துவிட்டால், உங்களுக்கு நீங்களே பரிசு கொடுக்கலாம். அது, பிடித்த விஷயத்தைச் செய்வதாக இருக்கலாம்.

டெஸ்ட் பெஸ்ட்!

உங்களுக்கு நீங்களே 'டெஸ்ட்’ வைத்து எழுதிப் பார்ப்பதும் நல்ல விஷயம். இதனால், பரீட்சையின்போது பதற்றம் ஏற்படாது.

அடிக்கடி வரை...

அறிவியல் பாடங்களின் படங்களை அடிக்கடி வரைந்து, பாகங்களைக் குறித்து, பயிற்சி எடுங்கள். படம் வரைய பென்சில்தான் சிறந்தது.

ஆங்கிலத்தில்...

ஆங்கிலப் பாடத்தில் இலக்கண விதிகளை மேலோட்டமாகப் படிக்காமல், நன்கு மனப்பாடம் செய்வது நல்லது.

வரிசையாக...

ஒரு மதிப்பெண், இரண்டுக்கு அடுத்து, ஐந்து மதிப்பெண், கடைசியாக, பத்து மதிப்பெண் என்று வரிசையாகப் படிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்!

பாடங்களின் இறுதியில் இருக்கும் மாதிரி வினாக்களையும் தவறாமல் படியுங்கள். இதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம்.

பள்ளியிலே...

பரீட்சை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே, படிப்பதை நிறுத்திவிடுங்கள். ரிலாக்ஸ்டாக பரீட்சை அறைக்குள் செல்லுங்கள்

பரீட்சை ஹாலில்...

நன்கு விடை தெரிந்த கேள்விக்கான விடைகளை முதலில் எழுதுங்கள். குழப்பமாகத் தோன்றுவதை கடைசியில் பார்க்கலாம்.

எண்களைக் கவனி!

கேள்விகளுக்கான வினா எண்களை சரியாகக் குறிப்பிடுங்கள். வினா எண்கள் தவறானால், முழுமையான மதிப்பெண்கள் கிடைக்காது.

கற்பனை வேண்டாம்!

புத்தகத்தில் என்ன விடை கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதை மட்டும் எழுதுங்கள். உங்களின் கற்பனைகளைச் சேர்க்காதீர்கள்.

பாதியில் மறந்தால்...

ஒரு பதிலை எழுதும்போது பாதியில் மறந்தால், பதற்றம் வேண்டாம். இடம்விட்டு அடுத்த விடைக்குச் செல்லுங்கள்.

பிறகு எழுதலாம்.

பரீட்சைக்கு செல்லும் முன்பு இவற்றை மறக்காதீர்கள்!

ஹோல் டிக்கெட்
பென்சில்
இரண்டு பேனாக்கள்
ரேப்பர்
ஸ்கேல்
கேணக்கு பரீட்சைக்கு ஜியோமெட்ரி பாக்ஸ்
கேர்ச்சீப்தேண்ணீர் பாட்டில்