Published:Updated:

``போட்டித்தேர்வுகளுக்கு பொருளாதார நிலை தடையில்லை!" - டாக்டர் சங்கர சரவணன்

TNPSC | UPSC

கல்லூரி முதலாமாண்டில் இருந்தே TNPSC தேர்வுக்கு படிக்கத் தொடங்க வேண்டும். இதே UPSC தேர்வுகளுக்கு மொழித்திறனையும் வளர்த்து வைத்திருக்க வேண்டும்.

``போட்டித்தேர்வுகளுக்கு பொருளாதார நிலை தடையில்லை!" - டாக்டர் சங்கர சரவணன்

கல்லூரி முதலாமாண்டில் இருந்தே TNPSC தேர்வுக்கு படிக்கத் தொடங்க வேண்டும். இதே UPSC தேர்வுகளுக்கு மொழித்திறனையும் வளர்த்து வைத்திருக்க வேண்டும்.

Published:Updated:
TNPSC | UPSC

ஆனந்த விகடன் மற்றும் Kingmakers IAS அகாடமி இணைந்து நடத்தும் IAS மற்றும் TNPSC தேர்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்கவிருக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கவிருக்கும் இம்முகாமிற்கு அனுமதி இலவசம். பயிற்சி முகாமில் தமிழகத்தின் முக்கிய IAS, IPS அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மாணவர்களிடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வழிகாட்ட இருக்கின்றனர்.

TNPSC தேர்வு
TNPSC தேர்வு

இப்போட்டித் தேர்வுகளுக்கான திட்டமிடல் பற்றி TNPSC பயிற்சியாளர் டாக்டர்.சங்கர சரவணனிடம் பேசினோம் " TNPSC தேர்வுக்கு அடித்தளமே பள்ளிப் புத்தகங்கள்தான். இத்தேர்வுகளுக்கு ஸ்டேட் போர்ட் புத்தகங்களை படிக்க வேண்டும், இதே UPSC தேர்வுகளுக்கு NCERT புத்தகங்களை படிக்க வேண்டும். இப்போது ஸ்டேட் போர்ட் புத்தகங்களின் தரம் அதிகமாகியுள்ளதால் UPSC தேர்வுகளுக்கும் அந்த புத்தகங்களை படித்தாலே போதுமானது. சில நேரங்களில் NCERT புத்தகங்களும் தேவைப்படும்.TNPSC தேர்வுகளுக்கு சமூக அறிவியல் பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். வரலாறு, புவியியல், பொருளாதாரம் போன்றவற்றையும் படிக்க வேண்டும். தமிழ் தொடர்பான கேள்விகளும் இருக்கும், அதற்காக தமிழைப் பற்றிய புத்தகங்கள் படிக்க வேண்டும். அறிவியலும் இந்திய பண்பாடும் என்று ஒரு புத்தகம் இருக்கிறது, அதைப் படிக்க வேண்டும். அதிலிருந்து தமிழ்நாடு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இதுதவிர்த்து செய்தித்தாள்களை அவசியம் வாசிக்க வேண்டும். UPSC தேர்வுகளுக்கு மட்டும் தான் தினசரி செய்திகளை படிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இது முற்றிலும் தவறான ஒன்று. TNPSC தேர்வுகளில் கணக்கு பாடங்களும் முக்கிய பங்கு வகிக்கிறன. அதனால் கணக்கு பாடங்களையும் படிக்க வேண்டும். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இணையதளத்தில் இருக்கிறது, அதை பதிவிறக்கம் செய்து அலசுவதும் நல்ல பயிற்சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்டப்படிப்பை முடித்து TNPSC தேர்வுகளுக்கு படிப்பவர்களிடத்தில் தான் சில சவால்கள் இருக்கும். கல்லூரி முதலாமாண்டில் இருந்தே TNPSC தேர்வுக்கு படிக்க தொடங்க வேண்டும். இதே UPSC தேர்வுகளுக்கு மொழித்திறனையும் வளர்த்து வைத்திருக்க வேண்டும். தமிழில் தேர்வுகளை எழுதலாம் என்றாலும் ஆங்கில மொழித்திறனை வளர்த்து வைத்திருக்க வேண்டும். அதற்கு ஆங்கில செய்தித்தாள்களைப் படிக்கலாம். இந்த TNPSC தேர்வுகளுக்குத் தயாராகையில் பொறுமை மிகவும் அவசியம். முதல் முறையில் நிச்சயம் தேர்ச்சி அடைந்திட முடியும் என்று கூற முடியாது. வெற்றி, தோல்விகள் சகஜம் என்பதை நினைவில் கொண்டுதான் இந்த தேர்வில் இறங்க வேண்டும். மருத்துவராவதற்கு ஐந்து ஆண்டுகள், பொறியாளராவதற்கு நான்கு ஆண்டுகள் ஆவதைப்போல கலெக்டர் ஆவதற்கு 1 முதல் 9 வருடங்களை வரும் ஆகலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பொருளாதார நிலை ஒரு தடையாக இருக்காது, UPSC அவர்களை வரவேற்கிறது. சிலர் அதிக நம்பிக்கையுடன் இந்த தேர்வை எதிர்கொள்கிறார்கள்,அது தவறானது. படிப்படியாக தான் படிக்க வேண்டும்.தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை படிக்கலாம். படிப்பதற்கான வேட்கையில்லாமல் இத்தேர்வுக்கு தயாராக முடியாது " என்று பேசி முடித்தார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் பயிற்சி முகாமில் இதுகுறித்து இன்னும் விரிவாக பேசவிருக்கிறார் டாக்டர்.சங்கர சரவணன் பயிற்சி முகாமில் பங்குபெற வேண்டியதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.