Published:Updated:

UPSC தேர்வுகளுக்காக 2 ஆண்டுகள் தியாகம் செய்து உழைப்பதில் எந்தத் தவறுமில்லை - Kingmakers Boominathan

தினசரி நடப்புகள் மட்டுமின்றி அதற்கு பின்னால் இருக்கும் அனைத்தையும் 360 டிகிரியில் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

UPSC தேர்வுகளுக்காக 2 ஆண்டுகள் தியாகம் செய்து உழைப்பதில் எந்தத் தவறுமில்லை - Kingmakers Boominathan

தினசரி நடப்புகள் மட்டுமின்றி அதற்கு பின்னால் இருக்கும் அனைத்தையும் 360 டிகிரியில் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

Published:Updated:

ஆனந்த விகடன் மற்றும் Kingmakers IAS அகாடமி இணைந்து நடத்தும் IAS மற்றும் TNPSC தேர்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்கவிருக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கவிருக்கும் இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

UPSC
UPSC

இதுகுறித்து Kingmakers IAS அகாடமியின் இயக்குனர் திரு. சத்யஸ்ரீ பூமிநாதனிடன் பேசினோம் " TNPSC, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முறையான திட்டமிடல் கல்லூரி படிக்கும் நாட்களிலே இருப்பது நல்லது. இந்த மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகையில் குடும்பத்தின் ஆதரவு மிகவும் அவசியம். கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கே மூன்று ஆண்டுகள் ஆகையில IAS, IPS பதவியை பெறுவதற்கு 2 ஆண்டுகள் முழுமையாக உழைப்பதில் தவறில்லை எனக் கருதுகிறேன். நாளிதழ்களை படிக்கவேண்டியது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. இந்த பழக்கத்தை சிறுவயதிலே கற்று கொடுப்பது பெற்றோர்களின் கடமையாக கருதுகிறேன். TNPSC குரூப்-1, 2 தேர்வுகளை எளிதாக நினைத்து விடாமல், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிப்பது போன்று கடின முயற்சிகளை முன்னெடுத்து படிக்க வேண்டும். தினசரி நடப்புகள் மட்டுமின்றி அதற்கு பின்னால் இருக்கும் அனைத்தையும் 360 டிகிரியில் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். முந்தைய ஆண்டுகளில் வந்த கேள்விகளை எடுத்து படிக்கும் போதும், இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்களையும் கேட்டு அதற்கேற்றவாறு நமக்கான திட்டம் ஒன்றை உருவாக்குவது நல்லது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய தலைமுறையினருக்கு கவனச் சிதறல்கள் பல வகையில் இருந்தும் வருகிறது. இத்தேர்வுகளுக்காக சிலவற்றை தியாகம் செய்தால் அதில் இருந்து நம்மை திசைதிருப்பிக்கொள்ள இயலும். வரலாறு, பொருளாதாரம் போன்றவையே இத்தேர்வுகளின் முக்கிய‌ பாடங்களாக‌ இருக்கும், இங்கு பொறியியல் தொடர்பான பாடங்கள் இருக்காது. பொறியியல் மாணவர்கள் இந்த விஷயத்தில் சில சவால்களை சந்திப்பார்கள். இந்தியாவில் முதல் முறையாக பார்வையற்ற பெண், பெனோ செபைன் என்பவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் இருக்கிறார். அவர் நம் பயிற்சி மையத்திலிருந்து வெற்றி பெற்றவர் தான் " எனப் பேசி முடித்தார்.

பயிற்சி முகாமில் தமிழகத்தின் முக்கிய IAS, IPS அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மாணவர்களிடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வழிகாட்ட இருக்கின்றனர். பயிற்சி முகாமில் பங்குபெற வேண்டியதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.