Published:Updated:

``விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் எந்த போட்டித்தேர்விலும் வெற்றி பெறலாம்!” -R.ரம்யா பாரதி IPS

UPSC | TNPSC | IPS

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குறிப்புகள் எடுத்து தயாராவது என்பது ரொம்ப சவாலான விஷயம். நேரடியாக புத்தகத்தில் இருந்து படிப்பதைக் காட்டிலும் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு படிப்பது தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

``விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் எந்த போட்டித்தேர்விலும் வெற்றி பெறலாம்!” -R.ரம்யா பாரதி IPS

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குறிப்புகள் எடுத்து தயாராவது என்பது ரொம்ப சவாலான விஷயம். நேரடியாக புத்தகத்தில் இருந்து படிப்பதைக் காட்டிலும் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு படிப்பது தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Published:Updated:
UPSC | TNPSC | IPS

ஆனந்த விகடன் மற்றும் Kingmakers IAS அகாடமி இணைந்து நடத்தும் IAS மற்றும் TNPSC தேர்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்கவிருக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கவிருக்கும் இம்முகாமிற்கு அனுமதி இலவசம். பயிற்சி முகாமில் தமிழகத்தின் முக்கிய IAS, IPS அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து மாணவர்களிடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வழிகாட்ட இருக்கின்றனர்.

தேர்வுகள்
தேர்வுகள்

தேர்வக்குத் தயாரான அனுபவம் குறித்து சிறப்பு விருந்தினர் R.ரம்யா பாரதி IPS-யிடம் பேசினோம். “ சின்ன வயசுல இருந்தே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அதற்கேற்றாற்போல பள்ளி, கல்லூரி படிப்புகளையும் திட்டமிட்டுதான் படித்தேன். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை சமூகவியல் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராக ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய கல்லூரியில் சிறந்த சமூகவியல் பேராசிரியர்கள் இருந்தது நான் தேர்வுக்குத் தயாராவதை இன்னும் சுலபமாக்கியது. கல்லூரி முடித்த பின்பு டெல்லியில் உள்ள சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து 9 மாதங்கள் வரை அங்கேயே இருந்து தேர்வுக்குத் தயாராகி வந்தேன். பின் சென்னையில் தேர்வு எழுதி முதல் முயற்சியில் தேர்ச்சியும் பெற்றேன். சிவில் சர்வீஸ் முதலிய எந்த போட்டித்தேர்வில் வெற்றி பெறவும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு முக்கியமானவை. தேர்வுக்கு சில நாட்கள் முன் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் கூட நான் படித்ததுண்டு. அப்போது என் வயதுக்கு மீறிய அழுத்தம் எனக்கிருந்தது. இருப்பினும் கடின உழைப்பை கொடுத்ததன் மூலமாகவே என்னால் தேர்வில் வெற்றி பெற முடிந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிவில் சர்வீஸ் தேர்வில் நிறைய படிக்க வேண்டியது இருக்கும். நமக்கு எது கடினமாக இருக்கிறதோ அதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குறிப்புகள் எடுத்து தயாராவது என்பது ரொம்ப சவாலான விஷயம். நேரடியாக புத்தகத்தில் இருந்து படிப்பதைக் காட்டிலும் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு படிப்பது தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான முறையில் நேரத்தைத் திட்டமிட்டு படிக்க வேண்டும். நிறைய மாதிரித் தேர்வுகளையும் எழுதிப் பார்க்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவது ரொம்ப கஷ்டம், முதல் முயற்சியிலேயே நிறைய பேர் தேர்ச்சி பெற முடியாது என்பது போன்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எதிர்மறையான கருத்துகளை முதலில் ஒதுக்கி வைத்து விட வேண்டும். மனதளவில் வலிமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நம்மால் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை தேர்வுக்கு தயாராகும் போதே வரவேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வு என்பது ஒரு மைண்ட் கேம் ( Mind game). ஒரு வருடம் இந்த தேர்வுக்கு நீங்கள் அர்பணிப்புடன் படித்தால் அதற்கான பலன் கட்டாயம் கிடைக்கும். கவனத்தை சிதற விடாமல் விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்டு தயாரானால் நிச்சயம் எந்த போட்டித்தேர்வுகளிலும் எளிதாக வெற்றி பெறலாம்” என்று சுருக்கமாக பேசிமுடித்தார் அவர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் பயிற்சி முகாமில் இதுகுறித்து இன்னும் விரிவாக பேசவிருக்கிறார் ரம்யா பாரதி IPS. பயிற்சி முகாமில் பங்குபெற வேண்டியதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.