Published:Updated:

"கொஞ்சம் நேர்மையும் சேர்த்தே படியுங்கள்!" UPSC ஆலோசனை முகாமில் சகாயம் IAS (VR)

UPSC ஆலோசனை முகாம்

தோல்விகளே ஒரு மனிதனை நெறிப்படுத்தும். அதுவும் UPSC போன்ற தேர்வுகளில் சந்திக்கும் தோல்வி நமக்கு மேலும் சவால் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இதுபோன்ற தருணங்கள் தான் நம்முடைய முழுமையான திறனை வெளிக்கொண்டுவரும்.

"கொஞ்சம் நேர்மையும் சேர்த்தே படியுங்கள்!" UPSC ஆலோசனை முகாமில் சகாயம் IAS (VR)

தோல்விகளே ஒரு மனிதனை நெறிப்படுத்தும். அதுவும் UPSC போன்ற தேர்வுகளில் சந்திக்கும் தோல்வி நமக்கு மேலும் சவால் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இதுபோன்ற தருணங்கள் தான் நம்முடைய முழுமையான திறனை வெளிக்கொண்டுவரும்.

Published:Updated:
UPSC ஆலோசனை முகாம்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் IAS அகாடமி இணைந்து நடத்திய IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நேற்றைய தினம் (ஏப்ரல் 17) சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுமார் 2 ஆண்டு காலத்திற்கு பிறகு நேரடியாக நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ஆலோசனை முகாம்
ஆலோசனை முகாம்

சிவராஜவேல் IAS அகாடமி வழங்கிய மாணவர்களுக்கான ஒரு வருட இலவச பயிற்சிக்கான தேர்வுடன் தொடங்கிய முகாமில் முதலில் பேசிய அந்நிறுவனத்தின் இயக்குனர் சிவராஜவேல் UPSC தேர்வில் வெற்றிபெற என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றிய தொகுப்புரை வழங்கினார். “ இத்தேர்வில் வெற்றிபெற அதிர்ஷ்டம் தேவை என்று கூறுவார்கள். அப்படி ஒன்றுமே கிடையாது. முயற்சியும் வாய்ப்பும் சேரும்போது தான் அதிர்ஷ்டம் உருவாகிறது. இரண்டு முக்கிய தேவைகளை மட்டும் பூர்த்திசெய்தால் இத்தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். ஒன்று பொதுத்தேவை, அதாவது நாம் படிக்கவேண்டிய சிலபஸை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். அடுத்தது தனித்தேவை, வெவ்வேறு பின்புலங்களில் இருந்து வரும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு சிறந்த வழிகாட்டி அவசியம் தேவை. அதை சிவராஜவேல் அகெடமி மிக சிறப்பாக செய்துவருகிறது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக, சாதனைகளை பேசுவதைவிட இத்தேர்வுக்கு முன்னால் இருக்கும் சவால்களை பேசுவதே அவசியம் என்று தன் உரையை தொடங்கினார் திவ்யா IRS. 2014-ம் ஆண்டு UPSC தேர்வின் நேர்முகத்தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த இவர் தற்போது சென்னை மாநகராட்சியின் மத்திய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி-யின் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். தன் நேர்காணல் குறித்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர் பேசியதாவது “ தோல்விகளே ஒரு மனிதனை நெறிப்படுத்தும். அதுவும் UPSC போன்ற தேர்வுகளில் சந்திக்கும் தோல்வி நமக்கு மேலும் சவால் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இதுபோன்ற தருணங்கள் தான் நம்முடைய முழுமையான திறனை வெளிக்கொண்டுவரும். பெற்றோர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் பிள்ளைகள் தோல்வி அடையும் நேரங்களில் தான் நீங்கள் அவர்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவை தெரிவிக்க வேண்டும். கல்வி தான் நமக்கிருக்கும் மிக சிறந்த ஆயுதம். அதுவும் நாமிருக்கும் ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களை பொருளாதார ரீதியாக சுயமாக பாதுகாத்துக்கொள்வதும் மிக அவசியம்” என்று கூறினார்.

ஆலோசனை முகாம்
ஆலோசனை முகாம்

சிவராஜவேல் IAS அகாடமியில் படித்து தற்போது பயிற்சியில் இருக்கும் ராகுல் IPS தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இறுதியாக ஊக்க உரை அளித்தார் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் IAS ( VR) “ 2018-ம் ஆண்டு UPSC தேர்வில் வெறும் 8% தேர்வர்கள் மட்டுமே முதல் முறையிலேயே வெற்றிபெற்றவர்கள். அதேபோல 8% தேர்வர்கள் தங்களது 6-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே, நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Scholarship test
Scholarship test

ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக உயர வேண்டும் என்று தன்னை தூண்டிய சிறு வயது சம்பவம் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு அதிகாரிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை பற்றியும் பேசினார். கடைசியில் நேர்மையின் முக்கித்துவதை பற்றி கூறிய அவர் “ நீங்கள் எந்த பாடத்தை வேண்டுமானாலும் படியுங்கள், ஆனால் கொஞ்சம் நேர்மையையும் சேர்த்தே படியுங்கள்” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism