Published:Updated:

`ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்!' - 100% ஸ்காலர்ஷிப் வென்ற மாணவர்கள்!

ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்! வெற்றிக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்! வெற்றிக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களின் அமோக வரவேற்போடு நடந்து முடிந்தது நிகழ்வு. முன்கூட்டியே இணையத்தில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்திருந்தார்கள்.

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஐ.ஏ.எஸ் கனவல்ல... நிஜம்! - வெற்றிக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி' எனும் ஆன்லைன் இலவச கருத்தரங்கு கடந்த வாரம் (மே 30 (ஞாயிறு), காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை) நடைபெற்றது. மாணவர்களின் அமோக வரவேற்போடு நடந்து முடிந்தது நிகழ்வு. முன்கூட்டியே இணையத்தில் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்திருந்தார்கள்.

ஐ.ஏ.எஸ். தேர்வு
ஐ.ஏ.எஸ். தேர்வு

நிகழ்வு தொடங்க ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே ஜூம் வழியாக ஆயிரம் மாணவர்கள் சேர, மற்ற மாணவர்கள் விகடன் இணையதளத்தின் லைவ் லிங்க் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முதலில் ஐ.ஏ.எஸ் கனவிற்கான அடிப்படை பயிற்சிகள் பற்றியும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி குறித்தும், அந்த அகாடமியின் நிறுவனர் திரு. சிவராஜவேல் அறிமுக உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி உ. சகாயம் அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் ‘ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கும் சில டிப்ஸ், மாணவர்களுக்கான பயிற்சி முறை' ஆகியவை குறித்தும் நிகழ்வில் பேசப்பட்டது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, லாக்டௌன் காலத்தில் சிவில் சர்விஸ் பரீட்சைக்குத் தயாராவது எப்படி, சிவில் சர்வீஸ் தேர்வு நுணுக்கங்கள், சிவில் சர்வீஸ் மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும், சிவில் சர்வீஸ் மாணவர்கள் பரீட்சைக்கான தயாரிப்பை எங்கு தொடங்க வேண்டும் - என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு கருத்தரங்கில் விடையளிக்கப்பட்டது.

Sagayam IAS
Sagayam IAS

நிகழ்வின் கூடுதல் சிறப்பாக, பங்கேற்ற மாணவர்களுக்கு ஒரு ஸ்காலர்ஷிப் டெஸ்ட் எழுதும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட லிங்கின் மூலம் மாணவர்களுக்கு பொது அறிவு பாடத்தில் ஒரு மணிநேர தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கட்டண சலுகைகள் கொடுக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஒரு வருடத்திற்கு 100% இலவச பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் எதிர்கால கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் ஒரு மேடையை சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி உடன் இணைந்து உருவாக்கிக் கொடுத்திருப்பதில் மகிழ்கிறது விகடன்.

அடுத்த கட்டுரைக்கு