Published:Updated:

Engineering: பொறியியல் சேர்க்கைகான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!

Engineering

ஆகஸ்ட் 16-ம் நாள் தொடங்கும் இணையவழி கலந்தாய்வு செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது

Engineering: பொறியியல் சேர்க்கைகான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!

ஆகஸ்ட் 16-ம் நாள் தொடங்கும் இணையவழி கலந்தாய்வு செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது

Published:Updated:
Engineering
+2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிந்ததிலிருந்தே பொறியியல், மருத்துவ படிப்புகளில் விண்ணப்பிப்பது, உயர் கல்விக்கான திட்டமிடுதல் உள்ளிட்டவை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் யோசிக்கத் தொடங்கியிருப்பர்.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. கடந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு முன்னரே நடைபெற்றதால் பல்வேறு கல்லூரிகளும் காலியிடங்கள் உருவாகின. இதனால் இந்தாண்டு நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

பொறியியல்  கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜூன் 20-ம் தேதி தொடங்கும் இதற்கான இணையவழி விண்ணப்பம் ஜூலை 19 அன்று நிறைவடைந்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16-ம் நாள் தொடங்கும் இணையவழி கலந்தாய்வு செப்டம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 16 தொடங்கி 19 வரையும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறும் என தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism