Published:Updated:

Engineering: தமிழகக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; எந்தக் கல்லூரிக்கு என்ன இடம்?

Engineering

இந்த தரவரிசை பட்டியல் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

Engineering: தமிழகக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; எந்தக் கல்லூரிக்கு என்ன இடம்?

இந்த தரவரிசை பட்டியல் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
Engineering
12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் விறுவிறுவென கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை பொறியியல் படிப்பில் சேர 1,51,990 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

Engineering
Engineering

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த தரவரிசைப் பட்டியல் கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி உட்பட அனைத்து வகை அம்சங்களையும் இந்த தரவரிசை பட்டியல் உள்ளடக்கியுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரியும், 2-வது இடத்தை குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியும், 3-வது இடத்தை கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியும், 4-வது இடத்தை செங்கல்பட்டு காலவாக்கத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் என்ஜினீயரிங் கல்லூரியும், 5-வது இடத்தை கோவை கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனமும் பெற்றுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் 6-வது இடத்தை மதுரை தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரியும், 7-வது இடத்தை கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியும், 8-வது இடத்தை கோவை நீலாம்பூர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், 9-வது இடத்தை காஞ்சீபுரம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரியும், 10-வது இடத்தை கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியும் பெற்றுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை அரியலூர் கே.கே.சி. என்ஜினீயரிங் தொழில்நுட்ப கல்லூரி பிடித்துள்ளது.

Engineering
Engineering

தரவரிசை பட்டியலில் கல்லூரிகளின் பெயர், தரவரிசை, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் அந்த கல்லூரியின் கட் -ஆப் மதிப்பெண்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கல்லூரிகளை தேர்வு செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று உயர் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.