Published:Updated:

`ஐ.ஏ.எஸ் ஆகலாம் வாங்க!' - சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டா

ஏஞ்சலின் ரெனிட்டா

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

`ஐ.ஏ.எஸ் ஆகலாம் வாங்க!' - சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டா

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

Published:Updated:
ஏஞ்சலின் ரெனிட்டா
‘ஐ.ஏ.எஸ் ஆவது ஒன்றும் அவ்வளவு சிரமமானது அல்ல’ என்பதை உங்களுக்கு உணர்த்த, வழிகாட்ட, இலவச ஆலோசனை முகாம் ஒன்றை ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தவிருக்கிறது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவது எப்படி, சிவில் சர்வீஸ் தேர்வின் நுணுக்கங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன? என்பது குறித்தும், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த ஆலோசனை முகாம் விடையளிக்கும். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஜூலை 31 (ஞாயிறு) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த ஆலோசனை முகாம் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஐ.ஏ.எஸ் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 338-வது ரேங்க் எடுத்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஏஞ்சலின் ரெனிட்டா அவர்களும், இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொண்டு அவருடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிகழ்ச்சி குறித்து ஏஞ்சலின் ரெனிட்டா பேசுகையில், "தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கும் மைக்கேல்பட்டி கிராமம்தான் என்னோட சொந்த ஊர். அப்பா 3-வதும், அம்மா 9-வதும் தான் படிச்சிருக்காங்க. ஆனா, என்னை வேளாண்மை பொறியியலும், எங்க அண்ணனை எம்.டெக்கும் படிக்க வச்சாங்க. 2004-ல் நாங்க வேளாங்கண்ணிக்கு போனப்ப ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்கமும், மீட்புப் பணிகளில் அந்த மாவட்ட ஆட்சியர் பம்பரமாகச் சுழன்றதும் தான் எனக்கு ஐ.ஏ.எஸ் ஆகணும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது.

ஆலோசனை முகாம் அழைப்பிதழ்
ஆலோசனை முகாம் அழைப்பிதழ்

என்னோட 7 வயசுலயே நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு அப்பாகிட்ட சொன்னேன். அப்பாவும், அம்மாவும் எனக்கு உற்சாகம் கொடுத்து பெரிய பக்கபலமாக இருந்தாங்க. படிப்பில் தீவிர கவனமாக இருந்தேன். பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள், பன்னிரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்கள் எடுத்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்தில் பொறியியல் படித்தேன். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கினேன். 2020-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெறவில்லை. குறைகளையெல்லாம் சரிசெய்து தீவிரமாகப் படித்து, மறுபடியும் தேர்வெழுதினேன்.

அதன் பலனாக சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 338-வது ரேங்க் எடுத்து, யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறேன். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் நானும் ஒருவர் என்பதை நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எதையும் முழு ஈடுபாட்டோடு, கவனம் முழுவதையும் ஒருங்கே குவித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். ஐஏஎஸ் ஆக வேண்டும் என எனக்குள் இருந்த கனவு இன்றைக்கு நனவாகியிருக்கிறது.

ஏஞ்சலின் ரெனிட்டா
ஏஞ்சலின் ரெனிட்டா

ஐ.ஏ.எஸ் தேர்விற்கு நான் எப்படி தயாரானேன், என்னென்ன உத்திகளைக் கையாண்டேன், நான் செய்த தவறுகள், நான் கற்றுக்கொண்ட பாடங்கள் என என்னுடைய அனுபவத்தை ஜூலை 31-ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆலோசனை முகாமில் கலந்துகொண்டு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். வாய்ப்பிருப்போர் கலந்துகொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. இலவசம் தான். ஆனால், கலந்துகொள்பவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவுக்கு - இங்கே க்ளிக் செய்யவும்