Published:Updated:

IIT Madras: சுற்றுசூழல் தொடர்பான `கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022' போட்டி தொடக்கம்!

IIT Madras

ஐடியாக்களை வணிகமாக மாற்றுவதற்கு உதவும் வகையில் இக்கல்வி நிறுவனம் வலுவான இன்குபேஷன் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது;

IIT Madras: சுற்றுசூழல் தொடர்பான `கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022' போட்டி தொடக்கம்!

ஐடியாக்களை வணிகமாக மாற்றுவதற்கு உதவும் வகையில் இக்கல்வி நிறுவனம் வலுவான இன்குபேஷன் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது;

Published:Updated:
IIT Madras

நிலைத்தன்மை கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளை மையமாகக் கொண்டு 'கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022' போட்டி ஐ.ஐ.டி மெட்ராஸில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருத்தின் ஆதாரம், ஆய்வக மதிப்பீட்டில் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிதியுதவி தொடங்கி சந்தைப்படுத்துதல் வரை இப்போட்டியின் மூலம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான போட்டி பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, நில சீரழிவு போன்ற தலைப்புகளின் கீழ் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு ரூபாய் பத்து லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022
கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022

2018-2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட ஐடியாக்கள் முன்மொழியப்பட்ட அதில் இறுதியாக 25 ஐடியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றுள் மூன்று இறுதியில் தேர்வு செய்யப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டது. இப்போட்டியை தொடங்கி வாய்த்த ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரிரியர் வி.காமகோடி பேசுகையில் “ நகர்ப்புற மக்களுக்கு மட்டுமல்லாமல் கிராமப்புற மாணவர்களையும் இப்போட்டி சென்றடைய வேண்டும். இதில் பங்கேற்போருக்கான காப்புரிமையைப் பெறும் வகையில் ஐஐடி மெட்ராஸ் வழிமுறைகளைத் தயார் செய்யும். மேலும் ஐடியாக்களை வணிகமாக மாற்றுவதற்கு உதவும் வகையில் இக்கல்வி நிறுவனம் வலுவான இன்குபேஷன் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது" என்று கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘கார்பன் ஜீரோ சேலஞ்ச் 2022’ விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 24, 2022. இணையதள முகவரி: https://czeroc.in