Published:Updated:

ஆன்லைன் மூலம் வகுப்புகள்... கற்பதில் ஈடுபாடு இல்லை, என்ன செய்வது? | Doubt of Common Man

online class
News
online class

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்பது என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் புதிது என்பதால் அதுவும் அவர்களுக்கு அது ஒருவிதமான மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

ஆன்லைன் மூலம் வகுப்புகள்... கற்பதில் ஈடுபாடு இல்லை, என்ன செய்வது? | Doubt of Common Man

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்பது என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் புதிது என்பதால் அதுவும் அவர்களுக்கு அது ஒருவிதமான மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

online class
News
online class
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் விமலா என்ற வாசகர், "என் மகன் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். ஆன்லைன் வகுப்புதான். ஆனால் அதில் ஒட்டவே மாட்டேன் என்கிறான். எதுவுமே அவனுக்குப் புரியவில்லை, கவலையாக இருக்கிறது. அவனை எப்படிக் கையாள்வது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

கொரோனா பெருந்தொற்று உலகம் எங்கும் பரவி மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா உட்படப் பல நாடுகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு காலத்திலும் கல்வி தடைபடுடவது நல்ல விஷயம் இல்லை. எனவே, மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் கல்வி கற்பது அனைத்து மாணவர்களும் முடியாத சூழலில், கல்வி கற்பதிலும் சமமின்மையான சூழலே நிலவி வருகிறது.

அதே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்பது என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் புதிது என்பதால் அதுவும் அவர்களுக்கு ஒரு விதமான மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் நம் வாசகர் ஒருவர் நமது Doubt of Common Man பகுதியில் மேற்கூறிய கேள்வியைக் கேட்டிருந்தார்.

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

இதற்கு என்னதான் தீர்வு எனத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது, "தற்போதைய கொரோனா சூழ்நிலையில் இது போன்ற பிரச்னைகள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மட்டும்தான் இருக்கிறது, இது ஏதாவது தீவிரமான பிரச்னையாக இருக்குமோ எனப் பெற்றோர்கள் பலரும் கவலைப்படுவதைப் பார்க்க முடிகிறது. இது தனிப்பட்ட முறையில் சிலருக்கு மட்டும் ஏற்படும் பிரச்னையாக இல்லை, நாட்டில் உள்ள பல மாணவர்களும் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஒரு மனநல மருத்துவராக என்னுடைய மருத்துவமனையில் கூட இதுபோன்ற கற்றல் குறைபாடு, படிப்பதில் துளியும் ஆர்வமின்மை எனப் பல மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கவுன்சிலிங்குக்காக வருகின்றனர்.

Online class (Representational Image)
Online class (Representational Image)

இதற்குத் தீர்வாக நம் முன்னே இருப்பது, கொரோனா பெருந்தோற்றுக்கு முன்பு இருந்த வகுப்பறை கற்றல் முறை மட்டுமே. கல்வி கற்பதற்கான சரியான முறையும் அதுவே. இதற்கு முன்புவரை கற்றல் என்பது மனதளவில் பள்ளிக்குச் செல்கிறோம் என்று தயாராகி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் எனக் கலந்துரையாடி சந்தேகங்கள் தோன்றி, அதற்கு விடையை ஆசிரியரிடம் பெற்று நண்பர்களுடன் விளையாடி எனக் கடந்திருப்பார்கள். அப்படியானவர்களுக்கு முழுமையாகவே ஆன்லைன் வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுவது என்பது சுமையான ஒன்றாகத்தான் இருக்கும். தொடர்ந்து டிஜிட்டல் திரைகளைப் பார்த்து வேலை செய்யப் பெரியவர்களாலேயே முடிவது இல்லை.

இதில் மாணவர்கள் பாவம் என்ன செய்வார்கள்? ஒரே இடத்தில் லேப்டாப், டேப்லெட், மொபைல் என எந்த மின்னணு சாதனத்தில் முழுமையான படிப்பை மேற்கொள்கிறோம் எனும்போது ஆரம்பத்தில், ஆர்வமாக ஆரம்பித்துப் போகப் போக அதன்மேல் இருந்த ஆர்வம் குறைந்துவிடும். இதற்குக் காரணம் டிஜிட்டலாக ஒரு விஷயத்தை நாம் செய்யும் போது அதில் நாம் மட்டுமே தனியாக இருப்போம். இதுவே வகுப்பறைக்குச் சென்று கற்கும்போது படிப்பில் ஆர்வம் குறையும் நேரங்களில் ஆசிரியர் அந்த ஒவ்வொரு மாணவருக்கும் தனித் தனியாகக் கவனம் செலுத்திப் படிக்க வைக்க முடியும். வகுப்பறையில் நிகழ்வது போன்ற எந்த நிகழ்வுகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் நடைபெறாது. இவையே மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்குக் கற்றலின் மீதான ஆர்வம் குறைவது இயல்புதான். ஏற்கெனவே வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது, திரையை மட்டுமே பார்த்துக் கல்வி கற்பது என மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களிடம், படிக்கவில்லையே எனக் கடிந்து கொள்ளாதீர்கள். அது அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். ஆன்லைன் வகுப்பில் தன்னுடைய குழந்தைகள் கவனம் இல்லாமல் இருக்கிறார்களே எனப் பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை. இன்னும் சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வகுப்பறைக் கல்வி கற்க ஆரம்பித்தால் இந்த பிரச்னை கண்டிப்பாகக் குறைந்துவிடும்" எனத் தெரிவித்தார்.

இதேபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man