Published:Updated:

Engineering : பரோட்டா மாஸ்டர்களைவிட இன்ஜினியர்கள் குறைவான சம்பளம் வாங்குவது ஏன்?

Engineering: Sujith Kumar - Ramesh Prabha

ஒரு ப்ரெஷரை வேலைக்கு எடுத்து, அவருக்கு ட்ரெயினிங் கொடுப்பதை விட, எக்ஸ்பீரியன்ஸான ஒருவரை வேலைக்கு எடுத்தால், அவருக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும்.

Engineering : பரோட்டா மாஸ்டர்களைவிட இன்ஜினியர்கள் குறைவான சம்பளம் வாங்குவது ஏன்?

ஒரு ப்ரெஷரை வேலைக்கு எடுத்து, அவருக்கு ட்ரெயினிங் கொடுப்பதை விட, எக்ஸ்பீரியன்ஸான ஒருவரை வேலைக்கு எடுத்தால், அவருக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும்.

Published:Updated:
Engineering: Sujith Kumar - Ramesh Prabha

சமீப காலமாக இன்ஜினீயரிங் படித்தாலே வேலை கிடைக்காது என்றொரு கருத்து நிலவி வருகிறது. திரைப்படங்கள் தொடங்கி சமூகவலைதளங்கள் வரை இக்கருத்தைதான் வலியுறுத்துகின்றன. இந்நிலையில் இன்ஜினீயரிங் படிப்பின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபா மற்றும் மனிதவள மேம்பாட்டு நிபுணர் சுஜித் குமார் இருவரும் மிக விரிவாக உரையாடியுள்ளனர். அதன் ஒரு பகுதி இதோ...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையிலேயே இன்ஜினீயரிங் படிப்பில் குறையுள்ளளது என்று எடுத்துக்கொள்ளலாமா ?

"நீங்கள் ஒரு மருத்துவ துறையை பற்றித் தவறாக பேசவிட முடியாது. அதேபோலத்தான் ஆசிரியர்களைப் பற்றியும், வக்கீல்கள் குறித்து நம்மால் வாயவே திறக்க முடியாது. அவரவருக்கென்று தனியே ஒரு சங்கம் இருக்கிறது. ஆனால் இன்ஜினீயரிங் துறையைப் பொறுத்தவரையில் அவர்களே தங்கள் துறையை, படிப்பை பற்றித் தவறாக மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என்றொரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

Sujith Kumar
Sujith Kumar

சரி, இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என்றால், வேறு என்ன படித்தால் வேலை கிடைக்கும்? B.com, B.sc படித்தால் வேலைக்கு உத்தரவாதமா? புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், இன்று அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு படிப்பு என்றால் அது இன்ஜினீயரிங்தான். ஒரு காலத்தில் இன்ஜினீயரிங் படிப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்று எல்லாரும் இன்ஜினீயரிங் படித்து விடுகின்றனர். ஆனால் பல அரியர்களோடு வெளி வருகின்றனர். இன்றுமே நல்ல கல்லூரிகளில் நன்றாகப் படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். அதனால் இந்த திரைப்படங்களில் காட்டும் பிம்பங்களை முதலில் உடைக்க வேண்டும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜினீயரிங் படித்தவர்களைவிட பரோட்டா மாஸ்டருக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது போன்ற மீம்களை பார்க்கமுடிகிறது. அது பற்றி...

"மற்ற படிப்புகளைக்காட்டிலும் இன்ஜினீயரிங் படிப்பில் ஒரு தனித்துவம் இருக்கிறது. முதலில் ஒரு ஐ.டி கம்பெனிக்கு செல்லும் பட்டதாரிக்கு, ஹவுஸ் கீப்பரைவிட குறைவான சம்பளமே கிடைக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் அவன் தன் திறமையை வளர்த்துக்கொள்ளும்போது, ஐடி துறையில் அவர்களுக்கான சம்பளம் லட்சங்களாக மாறும். ஹவுஸ் கீப்பரினுடைய சம்பளம் அப்போதும் அதே அளவில்தான் இருக்கும். பரோட்டா மாஸ்டர் என்பது ஒரு தனித்திறமை. நீங்கள் நம்பர் ஒன் பரோட்டா மாஸ்டராக இருந்தால், நீங்கள் கேட்பதுதான் சம்பளம். ஆனால் ஒரு சாதாரண சமையல்காரராக மட்டும் இருந்தால் அதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை."

Sujith Kumar - Ramesh Prabha
Sujith Kumar - Ramesh Prabha

மற்ற துறைகளைவிட ஐடி துறையில் அதிக பேரை வேலைக்கு எடுக்கிறார்களே. அதற்கான காரணம் என்ன?

"முன்னதாக இன்ஜினீயரிங் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற துறைகள்தான் இருக்கும். ஆனால் தற்போது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லர்னிங், டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேஷன் போன்று கணினி சார்ந்த பல துறைகள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருகின்றன. இதற்கு காரணம் டிமாண்ட்தான். பொருளாதார வீழ்ச்சி காலக்கட்டத்தில்கூட ஐடி கம்பெனியில் ஆயிரக்கணக்கான வேலைகள் புதிதாக உருவாகிக்கொண்டிருந்தன. அவர்கள் நூறு பேர், இருநூறு பேரெல்லாம் வேலைக்கெடுத்து பார்க்கவே முடியாது. பெரிய கம்பெனிகள் எல்லாமே தற்போது நேரடியாக இந்தியாவில் அவர்களது கிளையை விரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகம், வேலைவாய்ப்புகளும் அதிகம் கிடைக்கின்றன."

"அனுபவம் வாய்ந்தவர்களை வேலைக்கு எடுப்பதைவிட ப்ரெஷரை ( fresher) வேலைக்கு எடுப்பதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றனவே?"

"ஒரு ப்ரெஷரை வேலைக்கு எடுத்து, அவருக்கு ட்ரெயினிங் கொடுப்பதை விட, எக்ஸ்பீரியன்ஸான ஒருவரை வேலைக்கு எடுத்தால், அவருக்கு சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும். இதனால் என்ட்ரி லெவல் மார்கெட்டிற்கே எப்போதும் அதிகம் டிமாண்ட் இருக்கும். இந்த பேரிடர் காலத்தில் டெல்டா வேவைப் போல ரெசிக்னேஷன் வேவ் என்றொரு அலை பல நிறுவனங்களில் பாய்ந்தது. நிறைய பேர் தங்களது வேலையை விட்டுச் சென்றனர். இதனால், ப்ரெஷ்ஷருக்கான டிமாண்ட் அதிகமானது."

தற்போது ஒரு கல்லூரி மாணவன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாக வேண்டுமென்றால் அவன் என்ன செய்ய வேண்டும்?

"CGPA-வில் 10 புள்ளிகளுக்கு குறைந்தது 7 புள்ளிகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். எந்த துறையில் படிக்கிறார்களோ, அதனுடைய அடிப்படையை முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பது சிறந்தது. இதை தாண்டி ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சர்டிபிகேட் இருந்தால் அதுவே போதுமானது. இப்போதெல்லாம் எல்லா கோர்ஸ்களும் ஆன்லைனிலேயே கிடைக்கிறது. அதிலேயே ஒரு மாணவர் தங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். நான் படித்த கல்லூரி சரியில்லை, எனக்கு எடுத்த ஆசிரியர் சரியில்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism